வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
யூரோப்பியம்(III) பாசுபேட்டு (Europium(III) phosphate) என்பது EuPO4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். யூரோப்பியத்தின் அறியப்பட்டுள்ள பாசுபேட்டு உப்புகளில் இதுவும் ஒன்றாகும். யூரோப்பியம்(II) பாசுபேட்டு (Eu3(PO4)2) , யூரோப்பியம்(II,III) பாசுபேட்டு (Eu3Eu(PO4)3) என்பவை அறியப்பட்டுள்ள பிற யூரோப்பியம் பாசுபேட்டுகளாகும்.[6]
இனங்காட்டிகள் | |
---|---|
13537-10-5 14913-20-3 15259-63-9 semihydrate 34377-51-0 49836-68-2 | |
ChemSpider | 4896052 |
EC number | 236-901-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image Image Image |
பப்கெம் | 6365242 16217374 |
| |
பண்புகள் | |
EuO4P | |
வாய்ப்பாட்டு எடை | 246.93 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திண்மம்[1] |
அடர்த்தி | 5.81 கிராம்·செ.மீ−3 |
உருகுநிலை | 2,200 °C (3,990 °F; 2,470 K)[2] |
கரையாது[3] | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | மோனசைட்டு]] |
புறவெளித் தொகுதி | P21/n (எண். 14) |
Lattice constant | a = 668.13(10), b = 686.18(9), c = 634.91(8) pm |
படிகக்கூடு மாறிலி |
|
வெப்பவேதியியல் | |
வெப்பக் கொண்மை, C | 111.5 யூல்/மோல்·கெல்வின்[4][5] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சிறிய மூலக்கூறுகளிலிருந்து திண்மங்களைத் தயாரிக்கப் பயன்படும் குழைம-கரைசல் செயல்முறையில் யூரோப்பியம்(III) பாசுபேட்டு தயாரிக்கப்படுகிறது. முதலில், யூரோபியம்(III) ஆக்சைடு சேர்மத்துடன் நைட்ரிக் அமிலத்தின் சமநிலை அளவுகளில் கரைக்கப்பட்டு பின்னர் 10% பாசுபாரிக் அமிலம் அதிகமாக சேர்க்கப்படுகிறது. காரகாடித்தன்மை சுட்டெண் மதிப்பை 4 ஆக சரிசெய்வதற்கும், குழைமத்தை உருவாக்குவதற்கும் இந்த செயல்முறையில் கூடுதலாக அம்மோனியாவும் சேர்க்கப்பட வேண்டும். பின்னர் வினையில் உருவாகும் குழைமத்தை தண்ணீரில் கழுவி 1200 °செல்சியசு வெப்பநிலைக்கு ஒருநாள் முழுவதும் சூடேற்றப்பட்டு யூரோப்பியம்(III) பாசுபேட்டு தயாரிக்கப்படுகிறது.[4][5]
யூரோப்பியம்(III) பாசுபேட்டு CePO4 சேர்மத்தை ஒத்த உருவ மோனோசைட்டு படிக அமைப்பு முறையில் படிகமாகிறது. P21/n (எண். 14, நிலை 2) என்ற இடக்குழுவில் a = 668.13(10), b = 686.18(9), c = 634.91(8) பைக்கோமீட்டர் மற்றும் β = 103.96(1)° என்ற அணிக்கோவை அளவுருக்களும் கொண்டு ஓர் அலகு செல்லுக்கு நான்கு வாய்பாட்டு அலகுகள் என்ற அளவில் இது படிகமாகிறது. யூரோப்பியம்(III) பாசுபேட்டின் வெப்பக் கொண்மை 298.15 கெல்வின் வெப்பநிலையில் 111.5 யூல்·கெல்வின்−1·மோல்−1 என்ற அளவிலும்[4][5] பருமக் குணகம் 159(2) கிகாபாசுக்கல் என்ற அளவிலும் உள்ளன.[7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.