From Wikipedia, the free encyclopedia
யுரேனோஃபேன் (Uranophane) என்பது Ca(UO2)2[HSiO4]2•5H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். யுரேனோடைல் என்ற பெயராலும் இக்கனிமத்தை அழைக்கிறார்கள். இதுவோர் அரிய கால்சியம் யுரேனியம் சிலிக்கேட்டு நீரேற்று கனிமமாகும். யுரேனியத்தைக் கொண்டுள்ள மற்ற கனிமங்கள் ஆக்சிசனேற்றம் அடைவதால் இக்கனிமம் தோன்றுகிறது. மஞ்சள் நிறமும் கதிரியக்கத்தன்மையும் இக்கனிமத்தின் இயற்பியல் பண்புகளாகும்.
யுரேனோஃபேன் Uranophane | |
---|---|
பொதுவானாவை | |
வகை | யுரேனைல் நெசோ மற்றும் பல்சிலிக்கேட்டுகள். |
வேதி வாய்பாடு | Ca(UO2)2[HSiO4]2·5H2O |
இனங்காணல் | |
மோலார் நிறை | 586.36 கி/மோல் |
நிறம் | இலேசான மஞ்சள், எலுமிச்சை மஞ்சள்,தேன் மஞ்சள், பசு மஞ்சள், வைக்கோல் மஞ்சள் |
படிக இயல்பு | விண்மீன் ஊசிபோன்ற, புவிமேலோட்டு இழை, பொதிவு படிகங்கள் |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
பிளப்பு | {100} சரியானது |
முறிவு | சமமற்றது |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 2.5 |
மிளிர்வு | முத்துப்பளபளப்பு; பொதியாக உள்ள நிலையில் மெழுகுத்தன்மை |
கீற்றுவண்ணம் | வெண் மஞ்சள் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிகசியும் |
ஒப்படர்த்தி | 3.81 - 3.90 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nα = 1.643 nβ = 1.666 nγ = 1.669 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.026 |
பலதிசை வண்ணப்படிகமை | பலவீனமான; X = நிறமற்றது; Y = வெளிர் மஞ்சள்; Z = வெளிர் மஞ்சள் |
2V கோணம் | 32° முதல் 45°, அளவிடப்பட்டது |
புறவூதா ஒளிர்தல் | நீண்ட மற்றும் குறுகிய புற ஊதா கதிரில் இலேசான மஞ்சள் – பச்சை |
பிற சிறப்பியல்புகள் | கதிரியக்கப்பண்பு |
மேற்கோள்கள் | [1][2][3] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் யுரேனோஃபேன் கனிமத்தை Urp-α[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.