யிஜிங் (துறவி)
From Wikipedia, the free encyclopedia
யிஜிங் (Yijing) (635–713 கி.பி)[1] என்கிற சாங் வென்மிங் என்பவர் மொழிபெயர்ப்பாளரும், பயணியுமாவார். புகழ் பெற்ற தாங் கால சீன புத்த பிக்காவார். சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கடல் பாதையில், குறிப்பாக இந்தோனேசியாவில் உள்ள சிறீவிஜயத்தின் இடைக்கால இராச்சியங்களின் வரலாற்றிற்கு இவரது பயணக் கணக்கு ஒரு முக்கிய ஆதாரமாகும். நாளந்தாவில் (இப்போது இந்தியாவில் பீகாரில் உள்ளது) பௌத்த பல்கலைக்கழக மாணவரான இவர், சமசுகிருதம் மற்றும் பாளியிலிருந்து பல பௌத்த நூல்களை சீன மொழியில் மொழிபெயர்த்தார்.
யிஜிங் | |
---|---|
யிஜிங்கின் மாதிரித் தோற்றம் | |
பிறப்பு | 635 கி.பி பன்யாங், தாங் இராச்சியம் |
இறப்பு | 713 கி.பி சாங்கான் (தற்போது சிய்யான்) |
பணி | பௌத்த பௌத்த பிக்கு, பயணி |
சுய தரவுகள் | |
சமயம் | பௌத்தம் |
பதவிகள் | |
Teacher | ஷி ஹியூன் |
யிஜிங் (துறவி) | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||||
சீன எழுத்துமுறை | 義淨 | ||||||||
எளிய சீனம் | 义净 | ||||||||
| |||||||||
Buddhist title | |||||||||
Traditional Chinese | 三藏法師義淨 | ||||||||
Simplified Chinese | 三藏法师义净 | ||||||||
Literal meaning | திரிபிடகம் தருமம்-Master Yijing | ||||||||
|

பயணம்
சிறிவிஜயம் மற்றும் நாளந்தா
யிஜிங் , 14 வயதில் ஒரு துறவியானார். மேலும், 4 மற்றும் 5 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவிற்கு பயணம் செய்த புகழ்பெற்ற துறவியான பாசியானின் அபிமானி ஆவார். போங் என்ற அறியப்படாத ஒருவர் மூலம் நிதியுதவி பெற்று இந்தியாவின் பீகாரில் உள்ள நாளந்தா என்ற புகழ்பெற்ற பௌத்த பல்கலைக்கழகத்திற்குச் சென்று பௌத்தத்தை மேலும் படிக்க முடிவு செய்தார். குவாங்சௌலிருந்து ஒரு படகில் பயணம் செய்து, 22 நாட்களுக்குப் பிறகு சிறீவிஜயம் (சுமாத்திராவின் இன்றைய பலெம்பாங் ) வந்தடைந்தார். அங்கு இவர் சமசுகிருத இலக்கணத்தையும் மலாய் மொழியையும் கற்றுக்கொண்டார். இவர் மலாயு மற்றும் கெடா ) ஆகிய நாடுகளுக்கு வருகை தந்தார்.
673 இல் பத்து நாட்கள் கூடுதல் பயணத்திற்குப் பிறகு "நிர்வாண இராச்சியத்தை" ( சிச்சுவானின் தென்மேற்கில்) அடைந்தார். மலாய் மக்களைக் குறிக்கும் பண்டைய சீன வார்த்தையைப் பயன்படுத்தி, "குன்லூன் மக்கள்" பற்றி யிஜிங் பதிவு செய்தார். "குன்லூன் மக்கள் சுருள் முடியுடனும், கருமையான உடல்களைக் கொண்டவர்களாகவும், வெறுங்கால்களுடன் இருப்பார்கள் எனவும், இடுப்பில் நீளமான சரோங் எனப்படும் ஆடையை அணிவார்கள்" எனவும் எழுதியுள்ளார். பின்னர் இந்தியாவின் கிழக்கு கடற்கரைக்கு வந்தார். அங்கு ஒரு மூத்த துறவியைச் சந்தித்து சமசுகிருதம் படிக்க ஒரு வருடம் தங்கினார். பின்னர் இருவரும் வணிகர்களின் குழுவைப் பின்தொடர்ந்து மற்ற 30 சமஸ்தானங்களுக்குச் சென்றனர். நாளந்தாவுக்கு செல்லும் பாதி வழியில், யிஜிங் நோய்வாய்ப்பட்டு நடக்க முடியாமல் போனார். படிப்படியாக இவர் குழுவிடமிருந்து பின்தங்கினார். பின்னர் 11 ஆண்டுகள் கழித்து நாளந்தாவுக்கு நடந்து சென்றார்.
சிறீவிஜயத்துக்குத் திரும்புதல்
687 ஆம் ஆண்டில், யிஜிங் தாங் சீனாவுக்குத் திரும்பும் வழியில் சிறீவிஜய இராச்சியத்தில் சிலகாலம் தங்கினார். அந்த நேரத்தில், பலெம்பாங் பௌத்தத்தின் மையமாக இருந்தது. அங்கு வெளிநாட்டு அறிஞர்கள் கூயிருந்தனர். மேலும் யிஜிங் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து அசல் சமசுகிருத பௌத்த நூல்களை சீன மொழியில் மொழிபெயர்த்தார். சிறீவிஜயத்தில் அப்போது காகிதமும் மையும் இல்லை எனபதால் 689 ஆம் ஆண்டில் மை மற்றும் காகிதங்களைப் பெற குவாங்சோவுக்குத் திரும்பினார் பின்னர் அதே ஆண்டு மீண்டும் சிறீவிஜயம் திரும்பினார்.
சீனாவுக்குத் திரும்புதல்
695 ஆம் ஆண்டில், அனைத்து மொழிபெயர்ப்புப் பணிகளையும் முடித்து, இறுதியாக சீனாவின்இலுவோயங் திரும்பினார். அங்குபேரரசி வு ஸெடியனால் பெரும் வரவேற்பைப் பெற்றார். இவரது மொத்தப் பயணம் 25 ஆண்டுகள் ஆனது. இவர் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட சுமார் 400 புத்த நூல்களை மீண்டும் கொண்டு வந்தார். [2] [3]
தென் கடல்களில் இருந்து அனுப்பப்பட்ட பௌத்த மதம் மற்றும் தாங் வம்சத்தின் பௌத்த துறவியின் புனித யாத்திரை ஆகியவை யிஜிங்கின் சிறந்த பயண நாட்குறிப்புகளில் அடங்கும் சிறீவிஜயம் மற்றும் இந்தியாவுக்கான இவரது சாகசப் பயணத்தை இந்நூல்கள் விவரிக்கிறது. இந்திய சமூகம், பல்வேறு உள்ளூர் மக்களின் வாழ்க்கை முறைகள் மற்றும் பலவற்றைப் பற்றியும் விவரிக்கிறது.
பௌத்த மரபுகளின் பரவல்
இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில், இரண்டு "உட்பிரிவுகளையும்" பின்பற்றுபவர்கள் இருந்ததாக யிஜிங் எழுதுகிறார் (ஈனயானம், மகாயானம் ). [4] வட இந்தியா மற்றும் தென் கடல்களின் பெரும்பாலான தீவுகளில் ஈனயானம் பின்பற்றுவதாக விவரிக்கிறார் (அதாவது சுமாத்திரா, சாவகம், முதலியன) இதற்கு நேர்மாறாக, சீனா மற்றும் மலாயுவில் உள்ள பௌத்தர்கள் முக்கியமாக மகாயானத்தைப் பின்பற்றுவதாக எழுதியுள்ளார்.[5]
யிஜிங், பல்வேறு "உட்பிரிவுகள்" மற்றும் இந்தியாவில் உள்ள ஆரம்பகால பௌத்த பள்ளிகளுக்கு இடையிலான உறவைப் பற்றி எழுதியுள்ளார். "வெவ்வேறு தோற்றம் கொண்ட பள்ளிகளின் பல உட்பிரிவுகள் மேற்கில் உள்ளன என்றும், ஆனால் தொடர்ச்சியான பாரம்பரியம் கொண்ட மகாசாங்கிகம், ஸ்தவிர நிகாயம், மூலசர்வஸ்திவாதம் மற்றும் சாம்மித்திய நிகாயங்கள் என நான்கு முதன்மை பள்ளிகள் மட்டுமே உள்ளன" எனவும் எழுதியுள்ளார்.[6] அவர்களின் கோட்பாட்டு இணைப்புகளை விளக்கி, "நான்கு பள்ளிகளில் எது மகாயானத்துடன் அல்லது ஈனயானத்துடன் தொகுக்கப்பட வேண்டும் என்பது தீர்மானிக்கப்படவில்லை" எனவும் எழுதுகிறார். அதாவது, ஒரு துறவறப் பிரிவினருக்கும் அதன் உறுப்பினர்கள் "ஈனயானம்" அல்லது "மகாயானம்" போதனைகளைக் கற்றார்களா என்பதற்கும் இடையே எளிமையான கடிதப் பரிமாற்றம் இல்லை எனத் தெரிவிக்கிறார். [7]
சிறீவிஜயத்தில் பௌத்தம்

யிஜிங், சிறீவிஜயத்தில் (இன்றைய சுமாத்திரா) பௌத்தப் பள்ளிகளின் உயர் மட்ட வளர்ச்சியைப் பாராட்டினார். மேலும் சீனத் துறவிகள் இந்தியாவில் உள்ள நாளந்தாவுக்குப் பயணம் செய்வதற்கு முன் அங்கு படிக்கும்படி அறிவுறுத்தினார்.
ஸ்ரீவிஜயத்திற்கு யிஜிங்கின் வருகைகள் மற்ற அண்டை தீவுகளில் இருந்து வந்திருந்த மற்றவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை அவருக்கு அளித்தன. அவரது கூற்றுப்படி, ஹோ-லிங்கின் சாவகம் இராச்சியம் ( கலிங்க இராச்சியம் ) போகா நகரத்திற்கு கிழக்கே இருந்தது. இது கடல் வழியாக நான்கு அல்லது ஐந்து நாட்கள் பயணம் செய்யக்கூடிய தூரத்தில் இருந்தது. தென்கிழக்காசியாவின் தீவுகள் முழுவதும் பௌத்தம் தழைத்தோங்குவதாகவும் எழுதினார். "தென் கடல் தீவுகளில் உள்ள மன்னர்கள் மற்றும் தலைவர்கள் பலர் பௌத்த மதத்தைப் போற்றுகிறார்கள்,நம்புகிறார்கள், மேலும் அவர்களின் இதயங்கள் நல்ல செயல்களைக் குவிப்பதில் உறுதியாக உள்ளன" எனவும் எழுதினார்.
இதனையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.