யாக்கை என்பது உடலும் உயிரும் கட்டிக்கொண்டு இருக்கும் நிலைமை. எலும்பு, தசை, நரம்பு முதலான நிலப் பொருள்களும், குருதி போன்ற நீர்ப்ப் பொருளும், சூடு போன்ற நீப்பொருளும், மூச்சோட்டமாகிய காற்றுப் பொருளும், உயிரோட்டமாகிய ஆகாயப் பொருளும் என ஐம்பூதப் பொருளும் ஒன்றோடொன்று கட்டிக்கொண்டு இயங்குவதை [2][3] யாக்கை என்பது தமிழ்நெறி.
'விண் விண்' என உடலில் துடிக்கும் விண்ணை ஆகாயம் என்பர். காயம் படக்கூடிய உடம்பைக் 'காயம்' என்கிறது தமிழ். காயப்படுத்த முடியாத இயக்கம் 'ஆகாயம்'. ஆகாயமாகிய உயிர் இல்லாத பொருளில் மூச்சு ஓடாது. இதனைப் பிணம் என்றனர். [4][5][6]
ஒப்பாரி வைத்து அழுதல், பிணத்தைக் குளிப்பாட்டுதல், கொட்டு-முழக்கு, பாடையில் சுமந்து செல்லல், சுடுகாட்டில் எரித்தல், [7][8] இடுகாட்டில் எறிதல், இடுகாட்டில் புதைத்தல், முதலானவை இறந்த உடலுக்குச் செய்யும் சடங்குகள். நடுகல் விழா எடுத்தல் இறந்தவரின் உயிருக்குச் செய்யும் சடங்குகள்.[9]
கணம் கொண்டு சுற்றத்தார் 'கல்' என்று அலறப்
பிணம் கொண்டு காடு உய்ப்பார்க் கண்டும் - மணம் கொண்டு ஈண்டு
உண்டு உண்டு உண்டு என்னும் உணர்வினால் சாற்றுமே
'டொண் டொண் டொடு' என்னும் பறை (நாலடியார் 25)