மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தம்

From Wikipedia, the free encyclopedia

மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தம்

மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தம் அல்லது மாலடாவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தம் (Molotov–Ribbentrop Pact) என்பது ஆகஸ்ட் 23, 1939 இல் சோவியத் ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் வயாசெல்ஸ்லாவ் மாலடோவ் மற்றும் நாசி ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் யோவாக்கீம் வான் ரிப்பன்டிராப் ஆகியோர் கையெழுத்திட்ட ஒரு ஒப்பந்தம். இதன் மூலம் அதுவரை எதிரணிகளில் இருந்து வந்த இரு நாடுகளும் ஒருவரையொருவர் வலிந்து தாக்குவதிலை எனவும் இருவரில் ஒருவர் இன்னொரு நாட்டால் தாக்கப்பட்டால் அப்போரில் நடுநிலை வகிப்பது என்றும் ஒப்புக் கொண்டன. இது அதிகாரப்பூர்வமாக ஜெர்மனி-சோவியத் ஒன்றியம் வலிந்து தாக்காமை உடன்படிக்கை (Treaty of Non-Aggression between Germany and the Soviet Union) என்றழைக்கப்பட்டது. இவ்வொப்பந்தம் ஜூன் 22, 1941 இல் ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுக்கும் வரை நடைமுறையில் இருந்தது.

விரைவான உண்மைகள் ஜெர்மனி-சோவியத் ஒன்றியம் வலிந்து தாக்காமை உடன்டிக்கை, கையெழுத்திட்டது ...
மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தம்
ஜெர்மனி-சோவியத் ஒன்றியம் வலிந்து தாக்காமை உடன்டிக்கை
Thumb
ஒப்பந்தத்தில் மாலடோவ் கையெழுத்திடுகிறார். அவரது பின்னால் ரிப்பன்டிராப்பும் ஸ்டாலினும்
கையெழுத்திட்டதுஆகஸ்ட் 23, 1939
இடம்மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
கையெழுத்திட்டோர் சோவியத் ஒன்றியம்
நாசி ஜெர்மனி
மொழிகள்இடாய்ச்சு, உருசியம்
முழு உரை
Molotov–Ribbentrop Pact விக்கிமூலத்தில் முழு உரை
மூடு

வலிந்து தாக்காமை உடன்பாட்டைத் தவிர இவ்வொப்பந்தத்தில் வேறுசில கூறுகளும் இடம் பெற்றிருந்தன. வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவை சோவியத் மற்றும் ஜெர்மானிய அதிகாரக் கோளங்களாகப் பிரித்து ஒவ்வொரு நாடும் தனது பகுதியினை ஆக்கிரமிக்க ஒப்புதல் தெரிவித்தன. இதன்படி போலந்து, ஃபின்லாந்து. லாத்வியா, எஸ்டோனியா, லித்துவேனியா போன்ற நாடுகள் இவற்றால் பின்வந்த ஆண்டுகளில் ஆக்கிரமிக்கப்பட்டன.

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.