மொன்றோவியா (ஆங்கில மொழி: Monrovia), மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அத்திலாந்திக் பெருங்கடலின் கரையிலுள்ள இந்நகரம் மொண்செராடோ கவுண்டியினுள் அமைந்திருந்தாலும் தனியாக நிர்வகிக்கப்படுகிறது. பெரிய மொன்ரோவியா மாவட்டம் எனும் மாநகர நிர்வாகப் பிரதேசம், 2008 மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி 1,010,970 மக்களைக் கொண்டுள்ளது. இது லைபீரியாவின் மக்கட்தொகையில் 29% ஆகும்[2]. நாட்டின் கலாச்சார, அரசியல் மற்றும் நிதியியல் மையமாக இந்நகரம் விளங்குகின்றது.
1822இல் உருவாக்கப்பட்ட இந்நகரம் அப்போதைய அமெரிக்க அதிபரான ஜேம்ஸ் மன்ரோவைக் கௌரவிக்கும் முகமாக அவரது பெயரைக் கொண்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஒருவரின் பெயரில் விளங்கும் இரு தேசியத் தலைநகரங்களில் இது ஒன்றாகும். மற்றையது வாசிங்டன், டி. சி. ஆகும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.