From Wikipedia, the free encyclopedia
மெலனியா திரம்ப் (பிறப்பு மெலனியா இன்னாவ[1] ஏப்ரல் 26, 1970; செருமன் மொழியில் மெலனியா இன்னாவுசு[2]) இவர் சிலோவாக்கிய - அமெரிக்க முன்னால் தோற்ற அழகியும் தற்போது அமெரிக்காவின் முதல் பெண்மணியும் ஆவார். இவர் தொழில் அதிபரும் அமெரிக்காவின் 45 வது அதிபரான தொனால்ட் திரம்பை மணந்துள்ளார்.
மெலனியா திரம்ப் | |
---|---|
அமெரிக்காவின் முதல் பெண்மணி | |
குடியரசுத் தலைவர் | தொனல்ட் திரம்ப் |
முன்னையவர் | மிசெல் ஒபாமா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மெலனியா இன்னாவ ஏப்ரல் 26, 1970 நோவா மீசுட்டோ, சிலோவீனியா-சோசலிச குடியரசு, யுகோசுலாவியா |
அரசியல் கட்சி | குடியரசு கட்சி |
துணைவர் | |
பிள்ளைகள் | Barron Trump |
வாழிடம் | திரம்பு கோபுரம் |
முன்னாள் யுகோசுலாவியாவில் பிறந்த இவர் 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிரந்தர வசிப்பவாதி ஆனார். 2006 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றார். இவர் இரண்டாவதாக வெளிநாட்டில் பிறந்த அமெரிக்க முதல் பெண்மணியாவார்.[3][4] 1825 இல் முதல் பெண்மணியாக இருந்த லூசியா ஆடம்சு முதலாவது பெண்மணி இவர் இலண்டனில் பிறந்தவர்.
மெலனியா இன்னாவ் யுகோசுலாவியாவின் பகுதியாக இருந்த சுலோவீனியாவின் தென்கிழக்கிலுள்ள நோவா மீசுட்டோ என்னும் இடத்தில்,[5][6] ஏப்ரல் 26, 1970[7] அன்று பிறந்தார். இவர் அரசு தயாரிப்பு விசையுந்துக்கும் மகிழுந்துக்கும் விற்பனையாளராக வணிகத்தில் இருந்த விக்டர் இன்னோவவுஉக்கும் அமால்லிசாவுக்கும் பிறந்தார்.[8][9] அவரது தந்தை இருந்து அருகிலுள்ள ரெட்ச்சா நகரத்தை சேர்ந்தவர். அவரது தாயார் இருந்து ராகா கிராமத்தை சேர்ந்தவர்,[10] இவரது தாய் குழந்தைகள் ஆடை உற்பத்தி நிறுவனத்தில் பணி புரிந்தார்.[11] அந்நிறுவனத்திலேயே பின்னால் மெலனியா ஆடைகளுக்கு தோற்ற அழகியாக பணியாற்றினார். தன் இறுதி பெயரையும் இன்னாவ என்று சுலோவீனிய மொழியில் இருந்து செருமன் மொழிக்கு இன்னாவசு என்று மாற்றிக்கொண்டார்.[12]
மெலனியா சுலோவீனியாவின் தாழ் சாவா பள்ளத்தாக்கிலிருந்த செவ்னிகா நகரிலிருந்த ஓரளவு வசதி நிறைந்த குடியிருப்பிலேயே வாழ்ந்தார். இவருக்கு இனிசு என்ற சகோதரியும் ,[13] டெனிசு என்ற உடன்பிறவா அண்ணனும் உள்ளார்கள். மெலனியா டெனிசை சந்ததில்லை, இவர் மெலனியாவின் தந்தையின் மற்றொரு திருமணத்தில் பிறந்தவர்.[14] [15]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.