மெர்போக் ஆறு
கெடா மாநிலத்தில் உள்ள ஆறு From Wikipedia, the free encyclopedia
கெடா மாநிலத்தில் உள்ள ஆறு From Wikipedia, the free encyclopedia
மெர்போக் ஆறு என்பது (மலாய்: Sungai Perlis; ஆங்கிலம்: Merbok River) மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள ஓர் ஆறு.[1] ஜெராய் மலை (Mount Jerai) மற்றும் சுங்குப் (Sungkap) மலைக்காடுகளில் இந்த ஆற்றின் மூலங்கள் உருவாகின்றன.
மெர்போக் ஆறு Sungai Merbok | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | ஜெராய் மலை |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | மலாக்கா நீரிணை |
⁃ ஆள்கூறுகள் | 5°41′00″N 100°21′00″E |
⁃ உயர ஏற்றம் | 0 m (0 அடி) |
நீளம் | 45 km (28 mi) |
வடிநில அளவு | 439 km2 (169 sq mi) |
மெர்போக் ஆற்றின் மற்ற துணை ஆறுகள் பட்டாணி ஆறு மற்றும் பூஜாங் ஆறு. இந்த ஆற்றின் முகத்துவாரம் சுமார் 2.5 கி.மீ. அகலம் கொண்டது. இந்த ஆறு, பூஜாங் பள்ளத்தாக்க்கின் வரலாற்று நதியாக அறியப் படுகிறது.
சுங்கை பட்டாணியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் சுங்கை மெர்போக் ஆற்றின் முகப்பில் பந்தாய் மெர்டேகா (Pantai Merdeka) எனும் அழகிய கடற்கரை உள்ளது. இந்தக் கடற்கரைக்குச் செல்வதற்கு திக்காம் பத்து (Tikam Batu) நகரத்தின் வழியாகச் செல்ல வேண்டும்.[2]
பந்தாய் மெர்டேகா மிகவும் பிரபலமான கடற்கரை. வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொதுவாகக் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இங்கு ஒரு பெரிய உணவுக் கூடம் உள்ளது. உணவு வகைகள் மற்றும் பானங்கள், நினைவுப் பொருட்கள், உடைகள், காற்றாடிகள், பொம்மைகள் போன்றவற்றை விற்கும் பல சிறுகடைகளும் உள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.