From Wikipedia, the free encyclopedia
மூன்றாம் பௌத்த சங்கம் (Third Buddhist council) கிமு 247ல் பாடலிபுத்திரம் அருகில், மௌரியப் பேரரசர் அசோகரின் ஆதரவில் மொகாலிபுத்த தீசர் தலைமையில் கூட்டப்பட்டதாக அறியப்படுகிறது. [1] ஆனால் அசோகர் கல்வெட்டுக்கள் எதிலும் மூன்றாம் பௌத்த சங்கம் கூட்டப்பட்டதற்கான குறிப்புகள் இல்லை.
இந்தியாவின் மைசூர், சௌராட்டிரம், மகாராட்டிரா, காஷ்மீரம் பகுதிகளிலிருந்தும் மற்றும் சிந்து, காந்தாரம், பாக்திரியா, சுவத், இமயமலை, இலங்கை, சீனா, மியான்மர், தாய்லாந்து, கிரேக்கம் போன்ற ஒன்பதிற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிக்குகள் மூன்றாம் பௌத்த சங்கத்தில் கலந்து கொண்டனர். [2]மூன்றாம் பௌத்த சஙகத்தில் தேரவாத பௌத்த பிக்குகள் அதிகம் கலந்துகொண்டதாக அறியப்படுகிறது. மூன்றாம் பௌத்த சங்கத்தில் சர்வாஸ்திவாத பௌத்தர்கள் [3]கலந்து கொண்டதாக குறிப்புகள் இல்லை.
இரண்டாம் பௌத்த சங்கத்திற்குப் பின்னரும் பௌத்தச் சமயச் சடங்குகளில் கருத்து வேற்றுமை காரணமாக, குறிப்பாக அமாவாசை மற்றும் பௌர்ணமி அன்று பிக்குகள் நடத்தும் உபசோதா எனும் தியானச்சடங்கு குறித்து, பிக்குகளிடையே பல்வேறு குழப்பங்கள் நிலவியதால், பௌத்த குருமார்களிடையே பல தத்துவப்பள்ளிகள் (கருத்தியல் பிரிவுகள்) தோன்றியது. இந்த உபசோதா சடங்கில் சில மாற்றங்கள் கொண்டுவருதற்கு பல பௌத்த அறிஞர்களின் ஒப்புதல் பெறுவது கடினமான இருந்தது. பிக்குகளிடையே நிலவும் இது போன்ற குழப்பங்களை தீர்த்து வைப்பதற்காக மூன்றாம் பௌத்த சங்கம் கூட்டப்பட காரணமாயிற்று. தாங்கள் பௌத்தப் பகுப்பாய்வு கோட்பாட்டினை பின்பற்றுபவர்கள் என்று அறிவிக்க தவறியவர்களான தேரவாத பௌத்த பிக்குகள் மூன்றாம் சங்கக் கூட்டத்திற்கு வெளியே இருந்தனர்.
அபிதம்மபிடகத்தின் ஐந்தாவது புத்தகத்தில் குறிப்பிட்ட சில விளக்கங்கள், மூன்றாம் பௌத்த சங்கத்தில் பரிசோதனை செய்யப்பட்டு, சில கருத்துகள் மறுக்கப்பட்டது.
சில குறிப்புகளில் மூன்றாம் பௌத்த சங்கம், புகழ்பெற்ற பௌத்த அறிஞர் வசுமித்திரர் தலைமையில், கிபி 100ல், கனிஷ்கரின் ஆட்சியின் போது காஷ்மீர் அல்லது ஜலந்தரில் நடைபெற்றதாக உறுதியற்ற தகவல்கள் கூறுகிறது. இம்மாநாட்டில் வசுமித்திரரின் வழிகாட்டுதலின் கீழ், ஓலைச்சுவடிகளில் பௌத்த சாத்திரங்களுக்கு விளக்க உரை எழுதப்பட்டது. மேலும் பௌத்த சாத்திரங்களின் முதன்மையான கருத்துக்கள் உபாசகர்கள் அறியும் பொருட்டு பௌத்தத் தூபிகளிலும், விகாரைகளிலும், நினவுச் சின்னங்களிலும் பொறிக்கப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.