From Wikipedia, the free encyclopedia
மு. அப்துல் சமது (பிறப்பு: சனவரி 15 1962, இந்திய முஸ்லிம் எழுத்தாளர். தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெற்கு சூரன்குடி எனும் கிராமத்தில் பிறந்த இவர்,சூரன்குடியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியையும், நாகர்கோயில், தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரியில் உயர்கல்வியையும் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்தவர்.
மு. அப்துல்சமது | |
---|---|
பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் | |
பிறப்பு | மு. அப்துல்சமது ஜனவரி 15, 1962 தெற்கு சூரன்குடி, கன்னியாகுமரி மாவட்டம் |
இருப்பிடம் | தெற்கு சூரன்குடி, கன்னியாகுமரி மாவட்டம் |
தேசியம் | இந்தியன் |
கல்வி |
|
பணி | இணைப்பேராசிரியர் (பணி நிறைவு) |
பணியகம் | ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி உத்தமபாளையம் |
அறியப்படுவது | எழுத்தாளர், பேச்சாளர் |
சமயம் | முஸ்லீம் |
பெற்றோர் | முகமது அசன்கான் (தந்தை) ஆயிஷா பேகம் (தாய்) |
வாழ்க்கைத் துணை | ஹசீனா பேகம் |
பிள்ளைகள் | அப்துல் அகது (மகன்) ஹீமைரா (மகள்) |
விருதுகள் | சிறந்த நாட்டுநலப் பணித்திட்ட அதிகாரி விருது |
தேனி மாவட்டம் உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் இணைப்பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றி, பணி நிறைவு பெற்றவர். [1] எழுத்தாளரும், பேச்சாளருமான [2] இவர், நாட்டுப்புறவியல், இதழியல், நாடகம் ஆகிய துறைகளிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.
தமிழகத்தின் முன்னணி இஸ்லாமிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. 2011 ஆம் ஆண்டில் மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்ற பன்னாட்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில், ’இசுலாமிய இலக்கியங்களில் தமிழ் மரபுகள்’ எனும் கட்டுரையையும், 2019 ஆம் ஆண்டில், காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில், ’திருக்கோயில் பண்பாட்டில் முஸ்லீம்கள்’ எனும் கட்டுரையையும் வழங்கிய இவர், பல்வேறு கருத்தரங்குகளில் கலந்து கொண்டு 21 கட்டுரைகள் வழங்கியுள்ளார்.
இவர் விண் தொலைக்காட்சியில் "அலசல் அரங்கம்" நிகழ்ச்சியின் நெறியாளராவார். மேலும் தமிழன் தொலைக்காட்சியில் "மானுட வசந்தம்" நிகழ்ச்சியில் தொடர்ந்து உரையாற்றி வருகிறார்.
எனும் 8 நூல்களை எழுதியிருக்கிறார்.
தமிழக இசைமரபில் முஸ்லீம்கள் (ஆய்வுக்கோவை), கவிக்கோ கருவூலம் உள்ளிட்ட 8 நூல்களில் தொகுப்பாசிரியராகவும் செயல்பட்டிருக்கிறார்.
கோவை திருக்குர் ஆன் அறக்க்கட்டளையின் சிறந்த மார்க்க இலக்கியப் பணிக்கான, ’அல்லாமா அ. க. அப்துல்ஹமீது பாகவி விருது’, சீதக்காதி அறக்கட்டளையின் 'சதக்கதுல்லா அப்பா இலக்கிய விருது',நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் இலக்கிய விருது, இந்திய சமூக கலாச்சார நட்புறவுக் கழகத்தின் ‘சமூக நல்லிணக்க விருது’ இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் ‘தமிழ்மாமணி விருது’, தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பேரவையின் ‘மனித நேயத் தமிழறிஞர் விருது’, சென்னை, கம்பன் கழகம் வழங்கிய ‘பேராசிரியர் கே. சுவாமிநாதன் விருது’ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் விருதுகளைப் பெற்றுள்ளார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழத்தின் ‘சிறந்த நாட்டுநலப் பணித்திட்ட அதிகாரி விருது’, தமிழ்நாடு அரசின் ‘சிறந்த நாட்டுநலப் பணித்திட்ட அதிகாரி விருது’ ஆகியவற்றையும் பெற்றிருக்கிறார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.