From Wikipedia, the free encyclopedia
முற்றுட்டு என்னும் சொல் தமிழ்க் கல்வெட்டுகளில் பரவலாகக் காணப்படும் சொற்களில் ஒன்று.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
போர்வீரர், புலவர் முதலானோரைப் பாராட்டி அரசன் தன் ஆளுகைக்கு உட்பட்ட நிலத்தை வழங்குவது உண்டு. அப்போது அது முற்றுட்டாகவோ இறையிலியாகவோ வழங்கப்படும்.
இறையிலி என்றால் நிலம் பெற்றவர் அந்த நிலத்துக்கு வரி செலுத்தவேண்டியது இல்லை. நிலம் அவருக்கு உடைமை அன்று. அந்த நிலத்தை அவர் விற்கவோ, ஒற்றிக்கு வைக்கவோ இயலாது. பயிர் செய்து பலனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முற்றுட்டு என்பது முழு உரிமையுடன் வழங்கப்படும் நிலத்தைக் குறிக்கும். முற்றுட்டாகப் பெற்றவர் பெற்ற நிலத்தில் பயிரிட்டும் உண்ணலாம்; விற்பனையும் செய்துகொள்ளலாம். முற்றுட்டாக நிலத்தைப் பெற்றவர் நிலத்தை உழுதுண்ணும்போது அதற்கு வரியும் செலுத்தவேண்டியதில்லை. அவர் விற்பனை செய்து வேறொருவர் வாங்கிவிட்டால் வாங்கியவர் அரசுக்கு வரி செலுத்த வேண்டும்.
Seamless Wikipedia browsing. On steroids.