முரண் 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சேரன் நடித்த இப்படத்தை ராஜன் மாதவ் இயக்கினார் From Wikipedia, the free encyclopedia
முரண் (Muran) என்பது 2011 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் இராஜன் மாதவ் எழுதி இயக்கியிருந்தார்.[1] இப்படத்தில் சேரன் உடன் பிரசன்னா, ஹரிப்ரியா, நிகிதா துக்ரல், ஜெயப்பிரகாசு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 2010 இல் தொடங்கப்பட்டு[2] சூலை 2011 இல் நிறைவடைந்தது.[3] கதை இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களைச் சுற்றி வருகிறது. அவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது ஏற்படும் நிகழ்வுகளை சித்தரிக்கிறது.[4] இத்திரைப்படம் ஆல்பிரட் ஹிட்ச்காக் இயக்கிய உளவியல் அதிரடித் திரைப்படமான ஸ்ட்ரேஞ்சர்ஸ் ஆன் எ டிரெய்ன் (1951) என்ற திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டது.[5][6] யுடிவி மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து வெளியிட்டது.[7] முரண் 2011 செப்டம்பர் 30 அன்று வெளியிடப்பட்டு ஒட்டுமொத்த நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.