இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
மும்தாஜ் மத்வாணி (Mumtaz Madhvani), 1947 ஜூலை 31 இல் பிறந்த[1]) இந்திய நடிகையாவார். 1971இல் வெளிவந்த "கிலோனா" என்ற திரைப்படத்திற்கு பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். இவர் புகழ் பெற்ற நடிகர் ராஜேஷ் கன்னாவுடன் பெரும்பாலான படங்களில் பணிபுரிந்துள்ளார். 60 மற்றும் 70 களின் சிறந்த நடனக் கலைஞர் மற்றும் அழகு ராணியாக நினைவுப்படுத்தப்படுகிறார்.
மும்தாஜ் | |
---|---|
இந்தி: मुमताज़ உருது: ممتاز | |
தங்கேவாலாவில் அவரது நடிப்பின் போது | |
தாய்மொழியில் பெயர் | இந்தி: मुमताज़ உருது: ممتاز |
பிறப்பு | மும்தாஜ் அஸ்காரி 31 சூலை 1947 மும்பை, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இருப்பிடம் | இலண்டன், ஐக்கிய இராச்சியம் |
குடியுரிமை | பிரித்தானிய |
பணி | நடிகை , மாடல் |
செயற்பாட்டுக் காலம் | 1952–1978 |
வாழ்க்கைத் துணை | மயூர் மத்வானி (m. 1974) |
உறவினர்கள் | மல்லிகா அஸ்காரி (சகோதரி) ராந்தவா (மல்யுத்த வீரர்]] (மைத்துனர்) சாத் ராந்தவா (மருமகன்) ஃபர்தீன் கான் (மருமகன்) பெரோஸ் கான் (மாமானார்) ரூபேஷ் குமார் (உறவினர்) |
ஈரானில் புகழ் பெற்ற உலர் பழங்கள் விற்பனையாளரான அப்துல் சலீம் அஸ்காரி மற்றும் ஷாதி ஹபீப் ஆகா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். அவர் பிறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு அவர்கள் விவாகரத்து பெற்றனர்.[2][3][4] இவரது இளைய சகோதரி நடிகை மல்லிகா , மல்யுத்த வீரரும் இந்திய நடிகருமான ரந்தாவா என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் மல்யுத்த வீரரும் இந்திய நடிகருமான தாரா சிங்கின் இளைய சகோதரர் ஆவார்.[5]
மும்தாஜ் "சோனெ கி சித்தியா" (1958) என்ற படதின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தார். பின் " வல்லா கியா பாட் ஹை" , "ஸ்ட்ரீ" (1961) மற்றும் "செஹ்ரா" போன்ற படங்களில் 60 களின் ஆரம்பத்தில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் ஓ. பி. ரத்தன் இயக்கத்தில் வெளிவந்த "கெஹ்ரா தாக்" என்ற திரைப்படத்தில் நாயகனுக்கு தங்கை வேடத்தில் தோன்றினார்.[6] "முஜே ஜீனே தோ" படத்தில் சிறு வேடம், பின்னர், "ஃபாலத்" , "வீர் பீம்சேன்" , "டார்சான் கம் டு டெல்லி" "சிக்கந்தர் - இ - ஆசாம்" , "ரஸ்டம்- இ - ஹிந்த்" , "ராக்கா" மற்றும் "த்க்கு மங்கள் சிங்" ( தாரா சிங்குடன்), போன்ற பல படங்களில் அதிரடி காட்டும் நாயகியாக வலம் வர ஆரம்பித்தார் தாரா சிங் மற்றும் மும்தாஜ் ஆகிய இருவரும் சேர்ந்து நடித்த படங்களில், தாராசிங்கின் நடிப்பிற்காக 4.50 லட்சமும், மும்தாஜ் சம்பளம் 2,50,000 ரூபாய் ஆகும்.[7]
ராஜேஷ் கன்னா இணையாக ராஜ் கோஸ்லாவின் தோ ராஸ்தே" (1969) படத்தில் இறுதியாக மும்தாஜ் ஒரு முழு நீள நட்சத்திரமாக நடித்தார். மும்தாஜ் இதில் ஒரு சிறிய பாத்திரத்தை கொண்டிருந்தாலும், இயக்குநர் கோஸ்லா அவருக்காக நான்கு பாடல்களை படமாக்கியுள்ளார்.[8] இந்த படம் பிரபலமானதாக அமைந்தது, மேலும் அவர் ஒரு சிறிய பாத்திரமாக இருந்தபோதிலும், தனக்கு பிடித்த படங்களில் ஒன்றாகும் என்று ஒப்புக் கொண்டார்.[6] 1969 ஆம் ஆண்டில், ராஜேஷ் கன்னாவுடன், அவரது திரைப்படங்கள் "தோ ராஸ்ட்" மற்றும் "பந்தன்" , அந்த ஆண்டில் சிறந்த வருவாய் ஈட்டியது, இது 65 மில்லியனுக்கும் மேல் சம்பாதித்தது.[9] அவர் "தங்கேவாலா" என்ற படத்தில் ராஜேந்திர குமாருடன் கதாநாயகியாக முன்னணி பாத்திரத்தில் நடித்தார், அவர் அதிரடி-திரைப்பட கதாநாயகியாக" இருந்ததனால் "சாச்சா ஜோதி" படத்தில் சசி கபூருடன் நடிக்க மறுத்துவிட்டார், அவர் கதாநாயகியாக இருக்க விரும்பினார். "ஷோர் மச்சையா சோர்" (1973), லோஃபர் மற்றும் ஜீல் கே உஸ் பார்" (1973) போன்ற திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக தர்மந்த்ராவுடன் நடித்தார்.
1970 களில் அவரது விருப்பமான திரைப்படங்களில் ஒன்றான "கிலொனா" திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த நடிகை விருதினை வென்றார், மேலும் "பார்வையாளர்கள் தன்னை உணர்ச்சிகரமானப் பாத்திரத்தில் ஏற்றுக்கொண்டனர் என்பதில் மிகவும் மகிழ்ச்சி" என்றார்.[6] மும்தாஜ் பெரோஸ் கானுடன் தொடர்ந்து மேலா" (1971), அப்ராத் (1972) மற்றும் நாகின் (1976) போன்ற வெற்றிப்பட்ங்களை தந்தார். ராஜேஷ் கன்னாவுடன் இணைந்து 10க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தந்துள்ளார்.[10]
அவரது குடும்பத்தினர் மீது கவனம் செலுத்துவதற்காக "ஆய்னா" (1977) படத்திற்குப் பிறகு அவர் திரைப்படங்களிலிருந்து விலகினார். 1990 களில் அவர் தனது இறுதி படமான "ஆந்தியான்" படத்திற்காக 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார். ஷாமி கபூர் இவரை நேசித்து திருமணம் செய்ய விரும்பினார். . மேலும் கபூர் மும்தாஜ் திருமணத்திற்குப் பிறகு நடிக்க விரும்பவில்லை. தாரா சிங் இவருக்கு "அதிரடி இளவரசி' பெயரைக் கொடுத்தார், மேலும் பி-தர திரைப்படங்களில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். ராஜேஷ் கன்னாவும், இவருடன் பல திரைப்படங்களில் நடித்தார். தர்மேந்தரும் இவருடன் காதலில் விழுந்துவிட்டதாகவும் வதந்திகள் பரவின.[11][12]
1974 ஆம் ஆண்டில் மும்தாஜ் தொழிலதிபர் மயூர் மத்வானியை மணந்தார். அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர், அவர்களில் ஒருவர் நதாஷா, 2006 இல் நடிகர் ஃபெரோஸ் கானை மணந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.