முன்னோடி (Munnodi) என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மசாலா திரைப்படம் ஆகும். எஸ். பி. டி. ஏ குமார் இயக்கிய இப்படத்தில் ஹரீஷ் மற்றும் யாமினி பாஸ்கர் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, மலையாள நடிகர் சிஜோய் வர்கீஸ் மற்றும் அர்ஜுனா ஆகியோர் பிற வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் வெளியானதும் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது.[1]

விரைவான உண்மைகள் முன்னோடி, இயக்கம் ...
முன்னோடி
Thumb
இயக்கம்எஸ்.பி.டி.ஏ. குமார்
தயாரிப்புசோஹம் அகர்வால்
எஸ். பி. டி. ஏ ராஜசேகர்
கதைஎஸ்.பி.டி.ஏ. குமார்
திரைக்கதைஎஸ்.பி.டி.ஏ. குமார்
இசைகே பிரபு சங்கர்
நடிப்புஅரீஷ்
யாமினி பாஸ்கர்
கலையகம்ஸ்வஸ்திக் சினி விசன்
விநியோகம்எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடு2 சூன் 2017 (2017-06-02)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மூடு

நடிகர்கள்

தயாரிப்பு

இப்படத்தின் வழியாக தெலுங்கு நடிகர்களான ஹரிஷ் மற்றும் யாமினி பாஸ்கர் ஆகியோர் தமிழில் அறிமுகமானார்கள்.[3][4] அவதாரம் மலையாளப் படத்தில் மலையாள நடிகர் சிஜோய் வர்கீஸ் நடிப்பைப் பார்த்து பாராட்டிய தயாரிப்பாளர்கள் அவரைப் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கத் தேர்ந்தெடுத்தனர். இப்படத்தின் படப்பிடிப்பானது சென்னை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு படங்களில் தோன்றியவரான அர்ஜுனா ஹரிஷ் மற்றும் வர்கீஸ் ஆகியோருடன் மூன்று முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[5]

இசை

திரைப்படத்தின் பாடல்களுக்கு கே. பிரபுசங்கர் இசையமைத்தார்.

குறிப்புகள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.