லட்சுமி, பார்வதி, சரசுவதி ஆகிய மூன்று தேவிகள் பற்றியது From Wikipedia, the free encyclopedia
முப்பெரும் தேவியர் என்பது இந்து சமயத்தில் மூன்று பெண் கடவுள்களைக் குறிப்பதாகும். இது திருமூர்த்திகளுக்கு இணையான பெண் வடிவம் ஆகும். இந்து மதத்தில் முப்பெரும் தேவியர் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆவர். இவர்களை கலைமகள்/இயன்மகள்/சொன்மகள், அலைமகள்/திருமகள்/மலர்மகள், மலைமகள்/உமையவள்/இகன்மகள் என்றும் தமிழில் கூறுவதுண்டு. சாக்தம் சமயத்தில் யோகமயா எனும் கடவுளின் வேறு வடிவங்கள் தான் முப்பெரும் தேவியர். ஆதி பராசக்தி, தேவி என்றும் யோகமயாவை அழைப்பர்.[1][2][3]
புரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு. ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர். வளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. முப்பெரும் தேவிகள் முக்கியத்துவம் பெறும் விழாவாக இந்த நவராத்திரி விழா உள்ளது.[4]
ஆண் கடவுளை மையமாக கொண்ட இந்து புராணத்தில் முப்பெரும் தேவியரைத் திருமூர்த்திகளின் மனைவியராகவும், துணை தெய்வங்களாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், சக்திதர்மத்தில் அவர்களுக்கு முக்கிய பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. சரஸ்வதி படைக்கும் கடவுளாகவும், லட்சுமி காக்கும் கடவுளாகவும், பார்வதி (காளி) அழிக்கும் கடவுளாகவும், தேவியரின் துணை தெய்வங்களாக திருமூர்த்திகளையும் குறிப்பிட்டுள்ளனர்.
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் ஒரே சன்னதியில் பார்வதி (கிரிகுஜாம்பிகை), லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் காட்சி தருகின்றார்கள்.[6][7]
பௌத்த மதம் மற்றும் சிங்க்ரெடிசம் வழியாக ஜப்பனீஸ் சின்த்தோ தெய்வங்களுடன், முப்பெரும் தேவியர் ஜப்பானீய புராணங்களில் பெண் தெய்வங்கள் Benzaitennyo 弁財天女 (சரஸ்வதி), Kisshoutennyo 吉祥天女 (லக்ஷ்மி), மற்றும் Daikokutennyo 大黒天女 (காளி) ஆக இடம் பெற்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.