From Wikipedia, the free encyclopedia
முகுளம் (medulla oblongata)(இலங்கை வழக்கு: நீள்வளையமையவிழையம்)என்பது மூளைத்தண்டின் முன்பகுதியில் சிறுமூளைக்கு ஓரளவு கீழே அமைந்துள்ளது. இது கூம்பு வடிவ நரம்பன்களின் (நரம்பணுக்களின்)திரட்சியாகும். இது சிறுமூளைக்கும் தண்டுவடத்துக்கும் இடையில் அமைந்த நரம்பு முடிச்சு ஆகும். இது வாந்தி முதல் தும்மல் வரையிலான தன்னியக்க நனவிலிச் (அனிச்சைச்) செயல்களை ஆற்றுகிறது. முகுளத்தில் இதயத் துடிப்பு, மூச்சுயிர்ப்பு, வாந்தியெடுத்தல், குருதிக்குழல் இயக்கல் சார்ந்த நரம்பு மையங்கள் அமைந்துள்ளன. எனவே இது மூச்சுயிர்ப்பு, இதயத்துடிப்பு வீதம், குருதி அழுத்தம் ஆகிய தன்னியக்கப் பணிகளை ஆற்றுகிறது.
முகுளம் medulla oblongata | |
---|---|
முகுளம் ஊதா, நிறந்தீட்டிய மூளைத்தண்டின் பகுதி | |
மூளைப்புறணி நடுவில் அமைந்த முகுளத்தின் வெட்டுமுகம். | |
விளக்கங்கள் | |
உறுப்பின் பகுதி | மூளைத்தண்டு |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | medulla oblongata, myelencephalon |
MeSH | D008526 |
NeuroNames | 698 |
NeuroLex ID | birnlex_957 |
TA98 | A14.1.03.003 |
TA2 | 5983 |
FMA | 62004 |
Anatomical terms of neuroanatomy |
குமிழ் (bulb) என்ற சொல்லும் சிலவேளைகளில் முகுளத்துக்கு வழங்கப்படுகிறது. நோய் அறிகுறியியலில் முகுள நோயான குமிழ நரம்பன்கரு வாதம் (bulbar palsy) போன்ற சொற்களில் குறிப்பாக மருத்துவ நடைமுறையில் இவ்வழக்கு உள்ளது. இது முகுளம் சார்ந்த நரம்பு, நரம்புத்தடம் ஆகியவற்றையோ இவற்றோடு தொடர்புகொண்ட தசைகளையோ அதாவது நாக்கு, தொண்டை, குரல்வளை போன்றவற்றையோ குறிக்கலாம்.
முகுளத்தில் பின்வரும் இரண்டு பகுதிகள் அமைந்துள்ளன:
முகுளத்தின் முன் நடுவன் பிளவு பியாப் பொருளின் மடிப்பொன்றைக் கொண்டுள்ளது. இந்த மடிப்பு முகுளத்தின் நீளம் முழுவதும் நீள்கிறது. இது பொன்சின் கீழ் எல்லையில் ஒரு சிறு முக்கோணப் பகுதியில் முடிகிறது. இது சிறுவாய் அல்லது நாழி எனப்படுகிறது. இந்தப் பிளவின் இருபக்கத்திலும் முகுளக் கூம்பகங்கள் எழும்பி அமைகின்றன. இவற்றில் நரம்பு மண்டலத்தின் தண்டுவடப் புறணி, முகுளப் புறணி சார்ந்த கூம்பக நரம்புத் தடங்கள் அமைகின்றன. முகுள வாற்பகுதியில் இந்த நரம்புத் தடங்கள் கூம்பக நுனியில் குறுக்கிட்டு அவ்விடப் பிளவை மறைக்கின்றன.
கூம்பக நுனிக்கு மேலே உள்ள நடுவண் பிளவுக்கு முன்புறப் பக்கத்தில் இருந்து புறப்படும் வேறு நாரிழைகள், பொன்சின் மேற்பரப்புக்குக் குறுக்கே பக்கவாட்டில் செல்கின்றன. இவை முன் வெளிப்புற வில்வளைவு நாரிழைகள் எனப்படுகின்றன.
முகுளத்தின் மேற்பகுதியில் அமையும் முகுள முன்புற வரிக்குழிவுக்கும் முகுளப் பின்புற வரிக்குழிவுக்கும் இடையில் உள்ள பகுதி ஈரிணை வீக்கப்பகுதிகளைக் கொண்டுள்ளன. இவை மூளைப்புறணி நடுவுடல்கள் எனப்படுகின்றன. இவை இவற்றில் உள்ள மிகப் பெரிய நரம்புத் தன்னியக்க உட்கருவாலும் கீழ் மூளைப்புறணி நடுவுடல் உட்கருக்களாலும் உருவாகின்றன.
பின்புற நடுவண் வரிக்குழிவுக்கும் பின்புறப் பக்கவாட்டு வரிக்குழிவுக்குமிடையில் அமைந்த முகுளத்தின் பின்புறப் பகுதித் தண்டுவடத்தின் பின்புறப் தசையில் இருந்து வந்து நுழையும் நரம்புத் தடங்களைக் கொண்டுள்ளது. இவை நடுவில் உடனடியாக உள்ள நடுக்கோட்டுக்கும் பக்கவாட்டில் உள்ள மேல்தோல் தசைக்கும் இடையில் அமைந்த வட்ட எழுச்சித் தசைகள் ஆகும். இந்தத் தசைகள் வட்ட எழுச்சி அமைப்பிலும் மேல்தோல் முகைகளிலும் முடிகின்றன. இவை மேல்தோல் கருக்களிலும் வட்ட எழுச்சி அமைவுக் கருக்களிலும் உள்ள சாம்பல்நிறப் பொருளால் உருவாகின்றன. இந்தக் கருக்களில் உள்ள உடல்சார் உயிர்க்கலங்கள், பின்னந்தண்டின் நடுவண் நரம்புத் தடத்திலும் அதன் நரம்பு வேரிழைகளிலும் உள்ள இரண்டாம்நிலை வரிசை நரம்பன்களாகும். இவை அக வில்வளைவு நரம்பிழைகள் அல்லது தசைகள் எனப்படுகின்றன. இவை முகுளத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்துக்கு கடந்து சென்று நடுவண் நரம்பிழைக் கற்றையை உருவாக்குகின்றன.
இந்த முளைகள் அல்லது முகைகளுக்கு மேலே பின்புற முகுளப் பகுதியில் முக்கோணப் பயம்பு அல்லது பள்ளம் நான்காம் உட்குழிவுத் தரையின் கீழடிப் பகுதியாக அமைகிறது. இந்தப் பயம்பு அல்லது பள்ளத்தின் இருபுறமும் கீழ்ச் சிறுமூளை இணைகாம்பு அமைகிறது; இது முகுளத்தைச் சிறுமூளையுடன் இணைக்கிறது.
தோல்தசைப் படலத்துக்கு உடனே பக்கவாட்டில் அமைந்த முகுள அடிப்பகுதியில் மற்றொரு நீளவாட்ட உயர்ச்சி அமைகிறது. இது சாம்பல் முளை அல்லது முகை எனப்படுகிறது.
முகுளத்தின் அடிப்பகுதி பிணைப்பு நாரிழைகளால் ஆனதாகும். இவை முள்ளந்தண்டின் தன்புறப் பக்கவாட்டில் இருந்து மூளைத்தண்டின் எதிர்ப்புறப் பக்கவாட்டுகுக் குறுக்காக கடந்து செல்கின்றன; இதற்குக் கீழே தண்டுவடம் அமைகிறது.
முகுளத்துக்குப் பின்வரும் பல தமனிகள் குருதியை வழங்குகின்றன.
மூளைத்தண்டு முன்பகுதியில் இருந்து கருக்குழவி வளரும்போது முகுளம் உருவாகிறது. முகுள இறுதிப் பிரிப்பு கருவளர்ச்சிக் காலத்தில் 20 ஆம் வாரத்தில் நிகழ்கிறது.[1]
இந்நிலையில் நரம்புக் குழலின் சிறகுத் தட்டின் நரம்புமுகைகள் முகுளத்தின் புலன்கருவை உருவாக்குகின்றன. நரம்புக் குழலின் அடித்தட்டில் நரம்புமுகைகள் இயக்கக் கருவை உருவாக்குகின்றன.
முகுளம் மூளையின் உயர் மட்டங்களை தண்டுவடத்தோடு இணைக்கிறது. அதன்வழியாகப் பின்வரும் தன்னியக்க நரம்பு அமைப்பின் பல்வேறு செயல்களுக்குப் பொறுப்பேற்கிறது:
நெஞ்சடைப்பின்போது ஏற்படும் குருதிக்குழல் அடைப்பு, முகுளக் கூம்பு பட்டகத் தடம், நடுவண் இதழ், நாவடிக்கரு ஆகியவற்றைக் காயப்படுத்தி நடுவண் முகுள நோய்த்தொகையை உருவாக்குகிறது.
பக்கவாட்டு முகுள நோய்த்தொகை பின்பக்கக் கீழ்ச் சிறுமூளைத் தமனி அடைப்பாலோ முள்ளந்தண்டுத் தமனிகளின் அடைப்பாலோ உருவாகும்.
மஞ்சள் புழுக்களும் குழைகளிக் கெளிறும் முழுமையாக வளர்ந்த முகுளத்தைப் பெற்றுள்ளன.[3][4] தாடையிலிகளாகிய இவ்வகைத் தொடக்கநிலை மீன்களில் 505 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே முகுளம் உருவாகப் படிமலர்ந்துள்ளதாகக் கருதப்படுகிறது.[5] முதனிலை ஊர்வனவற்றின் மூளையின் உறுப்பாக முகுளத்தின் இருப்புநிலை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது இக்கால ஊர்வனவாகிய முதலைகள், பல்லிகளின் சரிவிகிதமில்லா உருவளவில் இருந்து உய்த்துணர்ப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.