From Wikipedia, the free encyclopedia
மீவுமனிதத்துவம் (Transhumanism) (குறியீடாக H+ அல்லது h+) அல்லது மீமாந்தவியம் ஒரு பன்னாட்டு மெய்யியல் இயக்கமாகும். இது மாந்த அறிதிறனையும் உடலியங்கியலையும் பேரளவில் மேம்படுத்த கிடைக்கும் நுட்பமான தொழில்நுடபங்களை வளர்த்தெடுத்தும் பயன்படுத்தியும் மாந்த நிலைமையை உருமாற்றப் பரிந்துரைக்கிறது.[1][2]
எளிமையாக, மீமாந்தவியம் என்பது மனிதரின் உடல் உள ஆற்றலை பெருகச் செய்ய உதவும் அறிவியல் தொழில்நுட்ப துறைகளுக்கு ஆதரவான ஒரு பன்னாட்டு இயக்கமாகும். குறிப்பாக ஊனம், வலி, நோய், முதுமை, இறப்பு போன்ற விரும்பப்படாத கூறுபாடுகளை குறைக்க அல்லது தீர்க்க இந்த இயக்கம் முனைகிறது. மீவுமனிதச் சிந்தனையாளர்கள் வளரும் அறிவியல் நுட்பங்களின் சாத்தியக்கூறுகளையும் அவற்றின் விளைவுகளையும் ஆய்ந்து கருத்துரை வழங்குகின்றனர்.
மீமாந்தவியச் சிந்தனையாளர்கள் மாந்தனின் வரம்புகளையும் அறநிலையையும் வெற்றிகாணவல்ல உருவாகும் புதிய தொழிநுட்பங்களின் வாய்ப்பு நலங்களையும் அச்சுறுத்தல்களையும்[3] அத்தொழில்நுட்பங்களின் வரம்புகளையும் ஆய்வு செய்கின்றனர்.[4] மிகப் பொதுவான மீமாந்தவியலாளரின் ஆய்கோள் மாந்தர் நாளடைவில் பின்னைமாந்தராக மாறவல்லவர் என்பதும் அப்பின்னைமாந்தரின் வல்லமைகளும் ஆற்றலும் இப்போதைய நிலைமையைவிட பேரளவில் ஆழமும் விரிவும் பெற்றிருக்கும் என்பதும் ஆகும்.[2]
"மீமாந்தவியம்" என்ற சொல்லின் நிகழ்காலப் பொருள் எதிர்காலவியலின் முதல் பேராசிரியர்களில் ஒருவரால் விளக்கமுற்றது. இவர் "மாந்தன் பற்றிய புதிர கருத்துப்படிமங்கள்" எனும் பாட்த்தை புதிய பள்ளியில் 1960 களில் பயிற்றுவித்தார். அப்போது அவர் தொழில்நுட்பங்களுக்கு ஏற்றுப் பின்னைமாந்தராகப் பெயரும் மக்களையும் அவர்களது வாழ்க்கைமுறையையும் உலகப் பார்வையையும் இனங்காணத் தொடங்கியிருந்தார்.[5] இந்த உறுதிப்பாடு மேக்சுமோர் எனும் பிரித்தானிய மெய்யியலாளருக்கு எதிகால மெய்யிய்லான மீமாந்தவியத்தின் நெறிமுறைகளை 1990 ஆம் ஆண்டளவில் மெல்ல விவரிக்கத் தொடங்குவதற்கான அறிவார்ந்த பின்னணியை அமைத்து தந்ததோடு, கலிபோர்னியாவில் அறிவாளிகளை அணிதிரட்டவும் வழிவகுத்தது. இந்த முயற்சி உலகளாவிய நிலையில் விரிவடைந்து மீமாந்தவிய இயக்கத்தை வளர்த்தெடுத்தது.[5][6][7] அறிவியல் புனைவுப் பணிகளால் பெருந்தாக்கமுற்று, மீமாந்தவியப் பார்வை பல ஏற்பாளரையும் எதிர்ப்பாளரையும் கவர்ந்து, அறிவியல், சமயம் சார்ந்த பலவகை சிந்தணையாளரை அணிதிரளச் செய்தது.[8]
பென் அரசு பல்கலைக்கழக பதிப்புத் துறையும் சுட்டிபன் இலாரன்சு சோர்குனரும் சமூகவியலாளர் ஜேம்சு அகுசும் ஒருங்கிணைந்து 2017 இல் " பின்னைமாந்த ஆய்வுகள் இதழ்" எனும் இதழை நிறுவினர்.[9] இதுவே வெளிப்படையாக மீமந்தவியத்துக்கும் பின்னைமாந்தவியத்துக்கும் உருவாகிய இதழாகும். இதன் இலக்கு பின்னைமாந்தவியம், மீமாந்தவியம் ஆகியவற்ரை விளக்குதலும் இந்த இரு இயக்கங்களின் பண்பாட்டு நடவடிக்கைகளை அலசுதலுமாகும்.
மீமாந்தன் எனும் கருத்துப்படிமம் மாந்தனுக்கும் பின்னை மாந்தனுக்கும் தொடர்புள்ள உடனடி மாந்த வடிவமாகும்.[10] சுருக்கமாக்க் கூறவேண்டுமானால், மீமாந்தன் மாந்தனைப் போன்ற உருவும் ஆனால் செந்தர மாந்தனைவிட கூடுதலான ஆற்றல்களும் திறன்களும் பெற்ற உடனடியான் மாந்தப் படிமலர்ச்சியினன் ஆவான் என்பதைக் குறிக்கும்.[4] இந்த்த் திறன்களில் மேம்பட்ட அறிதிறன், தன்னுணர்வு, வலிமை, ஆயுள் ஆகியன அடங்கும். மீமாந்தர் அறிவியல் புனைவில் சிலவேளைகளில் மரபன்திருத்த மாந்தராகப் புனையப்படுவதுண்டு.
எளிமையாக, மீமாந்தர் என்பது படிமலர்ச்சிக்கு அமைய மனிதரில் இருந்து அலலது மனிதருக்கு அடுத்தபடியாக ஆதிக்கம் செய்யபோகும் வருங்கால உயிரினம். இது தற்போது ஒரு கருதுகோளே. மரபணு பொறியியல், தானியங்கியல், மீநுண் தொழில்நுட்பம் போன்ற நுட்பங்கள் மீவுமனிதரை உந்துவிக்ககூடும் என்று சிலர் எதிர்வுகூறுகின்றனர்.
மீவுமனிதர் என்பது மீவியற்கை மனிதர் என்று பொருள்படாது.
நிக் போசுட்ட்ரோமின் கூற்றுப்படி, மாந்தனின் பெயர்வ்நிலை குறித்த தூண்டல்கள், கில்காமேசு காப்பியத்தில் இறக்காமல் வாழ்தல் குறித்த வேட்கையிலும் என்றும் மாறாத இளமையும், வாழ்வின் துறக்க உலகமும் முதுமை தவிர்த்தல், இறப்பு தவிர்த்தல் போன்ற வரலாற்ரு வேட்கைகளிலும் காணப்படுகின்றன.[2]
அரசியல் நீதி குறித்த உசாவல் (1793) எனும் நூலின் முதல் பதிப்பில், வில்லியம் கோடுவின் புவியக இறவாமை குறித்த அதாவது புறநிலை இறவாமை குறித்த விவாதங்களை முன்வைத்துள்ளார். வாழ்நாள் நீடிப்பு, இறவாமை ஆகிய கருக்களைக் குறித்த தேட்டத்தில் தனது புனித இலியோன் எனும் கோத்திக் வடிவ புதினத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த புதினம் 1799 இல் வெளிட்டபோது மிகவும் பரவலாக வரவேற்கப்பட்டுள்ளது. ஆனால், அது இப்போது முற்றிலும் மறக்கப்பட்டுள்ளது. புனித இலியோன் புதினமே அவரது மகளான மேரி செல்லியை பிராங்சுட்டின் புதினத்தை எழுத தூண்டியிருக்கலாம்.[11]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.