Remove ads
From Wikipedia, the free encyclopedia
SMTL (இலங்கை வழக்கம்: எச்.ரி.எம்.எல்) அல்லது மீசுட்டு மொழி என்பது வலைப்பக்க வடிவமைப்பை வரையறை செய்யும் ஒரு அடிப்படை குறியீட்டு மொழி ஆகும். முதல் வலைப்பக்கங்கள் எழுதப்பட்ட மொழி இதுவே ஆகும். இன்றும் இதுவே அனேக வலைப் பக்கங்களுக்கும், பின்னர் வந்த பல மொழிகளுக்கும் அடிப்படையாக அமைக்கிறது. எச் டி எம் எல் கோப்புக்கள் .html அல்லது .htm கோப்பு நீட்சி கொண்ட கோப்புக்களாக அமையும்.
கோப்பு நீட்சி | .html, .htm |
---|---|
அஞ்சல் நீட்சி | text/html |
வகைக்குறியீடு | TEXT |
சீர் சரவகைக் காட்டி(UTI) | public.html |
உருவாக்குனர் | World Wide Web Consortium & WHATWG |
இயல்பு | குறியீட்டு மொழி |
வடிவ நீட்சி | SGML |
வடிவ மாற்றம் | எக்சு.எச்.டி.எம்.எல் |
சீர்தரம் | ISO/IEC 15445 W3C HTML 4.01 W3C HTML5 (draft) |
திறநிலை வடிவம்? | கொண்டது |
இணைய உலாவிகள் உரை மற்றும் பிற பொருட்களின் தோற்றம் மற்றும் வடிவமைப்பை வரையறுக்க விழுத்தொடர் பாணித் தாள்களை (CSS) பார்க்கலாம். HTML மற்றும் CSS தரத்தை பராமரிக்கும் அமைப்பான W3C வெளிப்படையான விளக்க HTML க்கு பதில் CSS ஐ பயன்படுத்த ஊக்குவிக்கிறது[1]
செர்னோபில் விபத்திற்குப் பின்னர் அணு மற்றும் முக்கிய விடயங்களை விஞ்ஞானிகள் சிரமமின்றிப் பரிமாறிக் கொள்வதற்காக சேர்ன் ஆய்வுகூடத்தில் பணியாற்றிய டிம் பேர்னாஸ் லீ இதை உருவாக்கினார். 1989 யில் டிம் பெர்னர்ஸ்-லீ ஒரு இணைய அடிப்படையிலான மீயுரை அமைப்பை முன்மொழிவதற்கு ஒரு குறிப்பை எழுதினார்.[2] 1990 கடைசி பகுதியில் பெர்னர்ஸ் லீ ஹெச்டிஎம்எல் குறிப்பிட்டு உலாவி மற்றும் சர்வர் மென்பொருள் எழுதினார். அதே ஆண்டில், பெர்னர்ஸ் லீ மற்றும் CERN தரவு அமைப்புகளின் பொறியாளர் ராபர்ட் கயில்லியவ் நிதி வேண்டி ஒரு கூட்டு வேண்டுகோளை இணைந்தனர். ஆனால், இந்த திட்டம் முறையாக, CERN ஆல் ஏற்கப்படவில்லை. 1990 ல் இருந்து அவரது சொந்த குறிப்புகளில் [3] மீயுரை பயன்படுத்தப்படும் பல பகுதிகளில் சிலவற்றை அவர் பட்டியலிட்டு முதல் ஒரு கலைக்களஞ்சியம் தயாரித்தார்.[4] HTML இன் முதல் பதிப்பு "HTML குறிச்சொற்கள்" என்று ஒரு ஆவணம். இது 1991 ன் இறுதியில் பெர்னர்ஸ் லீயால் இணையத்தில் குறிப்பிடப்பட்டது.[5] இது ஒப்பீட்டளவில் எளிமையான வடிவமைப்பு கொண்ட ஆரம்பகால HTML ன் 18 உறுப்புகளை விவரிக்கிறது. ஹைப்பர்லிங்க் டேக் தவிர, மற்ற உறுப்புகளில் எஸ்ஜிஎம்எல்லின் GUID என்ற CERN இல் பயன்படுத்தப்பட்டு வந்த ஆவண வடிவத்தின் தாக்கம் இருந்தது. அவற்றில் பதினொரு உறுப்புகள் HTML 4 இலும் இருக்கிறது.[6]
இணைய உலாவிகள் உரை, படங்கள் மற்றும் மற்றவற்றை புரிந்து கொண்டு காட்சி அல்லது கேட்கக்கூடிய வலை பக்கங்களாக உருவாக்க எச்.டி.எம்.எல் (HyperText Markup Language) என்ற குறியீட்டு மொழி பயன்படுகிறது. ஒரு வலைப்பக்கத்தின் பண்புகள் அதன் வடிவமைப்பாளரின் CSS கூடுதல் பயன்பாட்டால் மாற்றப்படவோ மேம்படவோ முடியும்.
இதன் ஆகக்கடைசியான பதிப்பாக 5 ஆவது பதிப்பு ஜனவரி 2008 இல் வெளிவந்தது.
மீசுட்டுக் குறியீடு பல கூறுகளைக் கொண்டுள்ளது. உறுப்புகள், அவற்றின் பண்புகள் ஆகியவை மீசுட்டு குறியீட்டின் அடிப்படை. பின்வருவது மீசுட்டு பக்கங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படையானது. எல்லா பக்கங்களிலும் ஆவண வகை, <html> தொடக்க உறுப்பு, <head> தலை தொடக்க உறுப்பு, தலையங்கம் (<title></title>), </head>தலை முடிவு, <body> உடல் தொடக்க உறுப்பு, உள்ளடக்கம், </body> உடல் முடிவு, </html> முடுவு ஆகியவை எல்லா எச்.டி.எம்.எல் பக்கங்களிலும் இருக்கும். தலைப்புக்கு மேலே மேலதிக (meta) தகவலகள் இடப்படும்.
<!DOCTYPE html>
<html>
<head>
<title>Hello HTML</title>
</head>
<body>
<p>Hello World!!</p>
</body>
</html>
(<html> மற்றும் </html> இடையே உள்ள உரை வலைப்பக்கத்தை விவரிக்கிறது. <body> மற்றும் </body> இடையே உள்ள உரை காணக்கூடிய பக்க உள்ளடக்கம் ஆகும். குறியீட்டு உரை '<title>This is a title</title>' இணைய பக்கத்தின் தலைப்பை வரையறுக்கிறது.)
இந்த ஆவண வகை அறிவிப்பு HTML5 யில் மட்டும் உள்ளது. <!DOCTYPE html>
அறிவிப்பு சேர்க்கப்படவில்லை எனில், பல்வேறு உலாவிகளில் ஒழுங்கமைவு (Rendering) பாதிக்கப்படும்.[13]
HTML ஆவணங்கள் HTML உறுப்புகளை கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு மூன்று கூறுகள் உள்ளன; ஒரு ஜோடி குறிச்சொற்கள் - "தொடக்க குறிச்சொல்" மற்றும் "முடிவு குறிச்சொல்", தொடக்க குறிச்சொலில் சில பண்புகள் மற்றும் அவ்விரு குறிச்சொற்களுக்கிடையேஉரை மற்றும் வரைகலை உள்ளடக்கம். ஒவ்வொரு குறிச்சொல்லும் கோண அடைப்புகளுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும்.
எனவே ஒரு HTML உறுப்பின் பொது வடிவமானது : <tag attribute1="value1" attribute2="value2">உள்ளடக்கம்</tag>
பெரும்பாலான உறுப்பு பண்புகள் "=" கொண்டு பிரிக்கப்பட்ட பெயர் - மதிப்பு ஜோடிகளாக தான் இருக்கும். அவை ஒரு உறுப்பின் தொடக்க குறிச்சொலில் உறுப்பு பெயருக்கு பின்னர் எழுதப்பட்டிருக்கும்.
style
பண்பை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட உறுப்புக்கு விளக்கக்காட்சியியல் குணங்களை ஒதுக்கலாம்.
lang
பண்பை பயன்படுத்தி ஒரு உறுப்பின் உள்ளடக்கங்களின் இயற்கை மொழியை அடையாளம் காட்டலாம். உதாரணமாக, ஒரு ஆங்கில மொழி ஆவணத்தில்,
<p>Oh well, <span lang="fr">c'est la vie</span>, as they say in France.</p>
மற்ற வகை கணினி கோப்புகள் எவ்வாறு வழங்கப்படுகிறதோ அதே போல் HTML ஆவணங்களையும் வழங்க முடியும். அவை பெரும்பாலும் வலை வழங்கியிலிருந்து (Web Server) HTTP மூலமோ மின்னஞ்சல் மூலமோ வழங்கப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.