Remove ads
From Wikipedia, the free encyclopedia
மில்டன் இலாசெல் குமாசன் (Milton Lasell Humason) (ஆகத்து 19, 1891 - ஜூன் 18, 1972னோர் அமெரிக்க வானியலாளர் ஆவார்ரிவர் மின்னசோட்டாவின் டாட்ஜ் சென்டரில் பிறந்தார்.
இவர் பள்ளியில் இருந்து இடையிலேயே நின்றுவிட்டார். தன் 14 ஆம் அகவை வரை இவர் முறைசார் கல்வியேதும் படிக்கவில்லை. இவர் மலைகளை விரும்பியதால், குறிப்பாக வில்சன் மலையை விரும்பியதால், இவர் மவுண்ட் வில்சன் வான்காணகம் நிறுவப்பட்டபோது கீழிருந்து கருவிகளை மலைமேலே கொண்டுசெல்லும் பணியாளராகும் வாய்ப்பைப் பெற்றார். இவர் 1917 இல் இவர் அங்கே கட்டிடத் தூய்மிப்பாளராகச் சேர்ந்துள்ளார். தன் ஆர்வத்தால், இரவு உதவியாளராக வான்காணகத்தில் சேர்ந்தார். இவரது தொழில்நுட்பத் திறனும் அமைதியான இயல்பும் இவர் மலையில் உள்ள அனைவருக்கும் இனியரானார்.இவரது திறமையை மதித்து, 1919 இல் ஜார்ஜ் எல்லேரி ஏல்லிவரை மவுன்ட் விலசன் வான்காணகப் பணியாளர் ஆக்கினார். இது முன்நிகழ்வேதும் இல்லாதது. ஏனெனில் இவரிடன் முனைவர் பட்டமோ! ஏன்? உயர்நிலைப் பள்ளிச் சான்றிதழ் கூட இல்லை.இவர் விரைவில் பல நோக்கீட்டு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் காட்டி ஏலின் மதிப்பீட்டை நிறுவிக் காட்டினார். இவர் மங்கலான பால்வெளிகலைக் கூட கதிர்நிரல் படம் எடுத்து சீரிய நோக்கீட்டாளரானார். அண்டவியல் கட்டமைப்பு ஆய்வில் நோக்கீடுகள் பெரும்பங்காற்றின.இவர் அபுள் விதியை உருவாக்க அப்புளுக்கு உதவியுள்ளார்.ஐவர் 1950 இல் உலுன்டு பல்கலைக்கழகத்தின் அறிவியல் முதுமுனைவர் பட்டம் பெற்றார்.[1] He retired in 1957.
இவர் நீளமான கதிரண்மைத் தொலைவு கொண்ட C/1961 R1 (குமாசன்) வால்வெள்ளியைக் கண்டுபிடித்தார்.
நூலிழையில் புளூட்டோவைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பை குமாசன் இழந்துள்ளார். கிளைடு டோம்பாவுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே இவர் எடுத்த நான்கு ஒளிப்படங்களில் புளூட்டோவின் படிமம் உள்ளது.[2] புளூட்டோவின் படிமம் ஒளிப்படத்தின் ஊறுள்ள புள்ளீயில் அமைந்துவிட்டதால், இவரால் அந்தக் கோளைக் கண்டுபிடிக்க இயலாமல் போய்விட்டது எனத் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறதுடீது சரியாக இருக்கவியலாது. ஏனெனில், மூன்று இரவுகளில் எடுத்த நான்கு வேறுவேறு தட்டுகளில் புளூட்டோ உள்ளதால் இது உண்மையாக வாய்ப்பே இல்லை.
அப்புளும் இவரும் பல ஆண்டுகள் இணைந்தே பணிபுரிந்ததால், இவரது பெரும்பாலான பணிகள் அப்புளுக்கும் வழங்கப்படுகின்றன.[சான்று தேவை]
இவர் கலிபோர்னியாவில் மெண்டோசினோவில் இறந்தார்.
இவரது பெயராலும்சுவிக்கியின் பெயராலும் வழங்கப்படுகிறது.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.