From Wikipedia, the free encyclopedia
மாஸ்கோ சண்டை (Battle of Moscow, உருசியம்: битва под Москвой, இடாய்ச்சு: Schlacht um Moskau) என்பது இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் சோவியத் ஒன்றியம், நாசி ஜெர்மனி இடையே அக்டோபர் 1941 - ஜனவரி 1942 காலகட்டத்தில் நடைபெற்ற படைமோதல்களைக் குறிக்க சோவியத் ஒன்றிய வரலாற்றாளர்களால் பயன்படுத்தப்படும் பெயராகும். பர்பரோசா நடவடிக்கையின் பகுதியான. இம்மோதல் சோவியத் படைகளுக்கு மேல்நிலை உத்தியளவில் வெற்றியாக முடிந்தது.
மாஸ்கோ சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையின் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஜெர்மனி | சோவியத் ஒன்றியம் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
இட்லர் பெடர் வொன் பொக் கென்ஸ் குடேரியன் அல்பேட் கெசெல்ரிங் | ஜோசப் ஸ்டாலின் ஜோர்கி சுகோவ் அலெக்சண்டர் வசிலெவ்ஸ்கி |
||||||
பலம் | |||||||
1 ஒக்டோபர் 1941 இன்படி: 1,929,406 பேர், 1,700 கவச வாகனங்கள்,[1] 14,000 பீரங்கிகள், ஆரம்ப விமானங்கள்: 549 சேவைக்கு ஏற்றவை[2][3][4] பதில் தாக்குதலின்போது: 599[5] | 1 ஒக்டோபர் 1941 இன்படி: 8,140,330 பேர்[6], 3,232 கவச வாகனங்கள், 7,600 பீரங்கிகள், ஆரம்ப விமானங்கள்: 936 (545 சேவைக்கு ஏற்றவை)[2] பதில் தாக்குதலின்போது: 1,376[5] |
||||||
இழப்புகள் | |||||||
280,000–750,000(பார்க்க §7) 1,200–9,000 வண்டிகள் சேதம் | 500,000–1,280,000(பார்க்க §7) |
ஜூன் 22, 1941 அன்று சோவியத் தலைமை எதிர்பாராத வண்ணம், நாசி ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தது. பர்பரோசா நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்த இப்படையெடுப்பின் படைரீதியான மற்றும் அரசியல்ரீதியான இலக்குகளில் ஒன்று சோவியத் ஒன்றியத்தின் தலைநகரும் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றான மாஸ்கோ நகரைக் கைப்பற்றுவதுமாகும். நான்கு மாதங்களுக்கு செருமனி தலைமையிலான அச்சு நாட்டுப் படைகள் சோவியத் படைகளை முறியடித்து சோவியத் ஒன்றியத்திற்குள் வேகமாக ஊடுருவின. அக்டோபர் 1941 இல் மாஸ்கோ நகர் வரை முன்னேறி விட்டன. மாஸ்கோ நகரைக் கைப்பற்ற தைஃபூன் நடவடிக்கை என்ற குறிப்பெயரிடப்பட்ட தாக்குதலைத் தொடங்கின. நகரின் வடக்கிலும் தெற்கிலும் இரு கிடுக்கிப்பிடித் தாக்குதல்களை நடத்தி அதை சுற்றி வளைத்துக் கைப்பற்ற முயன்றன.
நகரைப் பாதுகாக்க சோவியத் படைகள் அதைச் சுற்றி மூன்று படைவளையங்களை அமைத்திருந்தன. இரு மாதங்கள் இடைவிடாத செருமானியத் தாக்குதல்களை சமாளித்து நகரைப் பாதுகாத்தன. இதற்காக சோவியத் ஒன்றியத்தின் தூரக் கிழக்குப் பகுதிகளிலிருந்து புதிய படைப்பிரிவுகள் மாஸ்கோ போர் முனைக்கு அனுப்பப்பட்டன. டிசம்பர் 1941 இல் குளிர்காலத்தின் கடுமை அதிகரித்த பின்னர் சோவியத் படைகளின் பதில் தாக்குதல் தொடங்கியது. அதனை சமாளிக்க முடியாமல் அச்சுப் படைகள் வேகமாகப் பின்வாங்கின. ஆனால் ஒரு மாத காலத்துக்குப் பின் சோவியத் பதில் தாக்குதலும் நீர்த்துப் போனது.
மாஸ்கோ சண்டையின் விளைவாக விரைவாக சோவியத் ஒன்றியத்தைத் தோற்கடிப்பதற்காக நிகழ்த்தப்பட்ட பர்பரோசா நடவடிக்கையின் தோல்வி உறுதியானது. கிழக்குப் போர்முனையில் மேலும் சில ஆண்டுகள் போர் நீடிப்பது இன்றியமைதானது.
Seamless Wikipedia browsing. On steroids.