மாலிப்டினம்(III) குளோரைடு
வேதி சேர்மம் From Wikipedia, the free encyclopedia
மாலிப்டினம்(III) குளோரைடு (Molybdenum(III) chloride) என்பது MoCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
மாலிப்டினம்(III) குளோரைடு மாலிப்டினம் முக்குளோரைடு | |
இனங்காட்டிகள் | |
13478-18-7 | |
ChemSpider | 75350 |
EC number | 236-775-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83515 |
| |
பண்புகள் | |
MoCl3 | |
வாய்ப்பாட்டு எடை | 202.30 கி/மோல் |
தோற்றம் | அடர் சிவப்பு திண்மம் paramagnetic |
அடர்த்தி | 3.58 கி/செமீ3 |
உருகுநிலை | 410 °C (770 °F; 683 K) (சிதைகிறது) |
நீரில் கரைவதில்லை | |
கரைதிறன் | எத்தனால் மற்றும் டைஎதில் ஈதர் ஆகியவற்றிலும் கரைவதில்லை |
+43.0·10−6செமீ3/மோல் | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாதது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | மாலிப்டினம்(III) புளோரைடு மாலிப்டினம்(III) புரோமைடு மாலிப்டினம்(III) அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | குரோமியம்(IV) குளோரைடு தங்குதன்(V) குளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தொகுப்பு முறை தயாரிப்பு மற்றும் அமைப்பு
மாலிப்டினம் முக்குளோரைடின் வேதியியல் வாய்ப்பாடு MoCl3 ஆகும். மாலிப்டினம் முக்குளோரைடானது மாலிப்டினம் ஐங்குளோரைடினை ஐதரசனைக் கொண்டு ஒடுக்கம் செய்வதால் தொகுக்கப்படுகிறது. தூய்மையான மாலிப்டினம் ஐங்குளோரைடை நீரற்ற வெள்ளீயம்(II) குளோரைடை ஒடுக்கியாகப் பயன்படுத்தி ஒடுக்கும் போது மிக அதிக அளவில் விளைபொருளானது பெறப்படுகிறது. இந்த செயல்முறையானது, ஈரப்பதமற்ற, ஆக்சிசனற்ற, முன்னதாக தூய்மையாக்கப்பட்ட நைட்ரசன் சூழலில் நிகழ்த்தப்பட வேண்டும். மாலிப்டினம் முக்குளோரடானது மாலிப்டினம் α முக்குளோைரைடு, மாலிப்டினம் β முக்குளோைரைடு என்ற இரண்டு அமைப்புகளைக் கொண்டுள்ளது. α அமைப்பானது அலுமினியம் குளோரைடின்(AlCl3) அமைப்பினைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பில் மாலிப்டினமானது எண்முகி அணைவு வடிவத்தைப் பெற்று மூடிய கனசதுர படிக அமைப்பினைப் பெற்றுள்ளது. Β அமைப்பானது, இருப்பினும், மூடிய அறுங்கோண வடிவைப் பெற்றுள்ளது.
டெட்ராஐதரோபியூரான் அணைவு
மாலிப்டினம் முக்குளோரைடின் டிஎச்எஃப் அமைப்பானது முக்குளோரோடிரிஸ்(டெட்ராஐதரோபியூரான்) மாலிப்டினம் (III) ஆகும். இதன் வேதியியல் வாய்ப்பாடு C12H24O3Cl3Mo ஆகும். இந்த அணைவுச் சேர்மமானது, MoCl4(THF)2, டெட்ராஐதரோபியூரான் மற்றும் கரடுமுரடான வெள்ளீயத் தூள் ஆகியவற்றை நன்கு கலக்குவதன் மூலம் தொகுக்கப்படுகிறது. இது வெளிர் ஆரஞ்சு நிறத் திண்மமாகும். ஈரப்பதத்திற்கு எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக இருப்பதால் இது இருளில் உறைகலனில் வைக்கப்பட்ட உலர்ந்த ஆர்கான் சூழலில் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும். இந்த அணைவுச் சேர்மமானது எண்முகி வடிவ அமைப்பினைக் கொண்டுள்ளது. இதன் அகச்சிவப்பு நிறமாலையானது 900–1000 செமீ−1 அலைநீளத்தில் அடர்வற்ற பட்டைகளைக் கொண்டிருப்பது மாலிப்டினம் ஆக்சோ வகைப்பாட்டின் பண்பை வெளிப்படுத்துகிறது.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.