From Wikipedia, the free encyclopedia
புக்கர் பரிசு (Booker Prize, முன்னர் புனைவுகளுக்கான புக்கர் பரிசு (1969–2001), மான் புக்கர் பரிசு (2002–2019)) என்பது ஆங்கில மொழியில் எழுதப்பட்டு ஐக்கிய இராச்சியம் அல்லது அயர்லாந்து நாடுகளில் வெளியிடப்பட்ட சிறந்த முழுநீளப் புதினங்களுக்கு வழங்கப்படும் ஓர் இலக்கியப் பரிசாகும். புக்கர் பரிசை வென்றவர் பொதுவாக விற்பனையை அதிகரிக்கும் ஒரு பன்னாட்டு விளம்பரத்தைப் பெறுகிறார்.[1] இப்பரிசு முதன் முதலாக தோற்றுவிக்கப்பட்ட போது, இது பொதுநலவாய நாடுகள், அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா (பின்னர் சிம்பாப்வே) நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் இப்பரிசைப் பெறத் தகுதி பெற்றிருந்தனர்; 2014 ஆம் ஆண்டில், இது எந்த ஆங்கில மொழிப் புதினமாகவும் விரிவுபடுத்தப்பட்டது.[2] எழுத்தாளர்கள், நூலகர்கள், இலக்கிய முகவர்கள், வெளியீட்டாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் ஆகியோரால் அமைக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட குழு புக்கர் பரிசு அறக்கட்டளையால் நியமிக்கப்பட்டுள்ளது.
புக்கர் பரிசு The Booker Prize | |
---|---|
விருது வழங்குவதற்கான காரணம் | ஆங்கில மொழியில் எழுதப்பட்ட சிறந்த புதினம் |
இடம் | இலண்டன், இங்கிலாந்து |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
வழங்குபவர் |
|
வெகுமதி(கள்) | £50,000 |
முதலில் வழங்கப்பட்டது | 1969 |
இணையதளம் | www |
பிரித்தானியப் பண்பாட்டின் ஓர் உயர்ந்த இலக்கிய விருதான புக்கர் பரிசு மிகுந்த எதிர்பார்ப்புடன் வரவேற்கப்படுகிறது.[3] குறுகிய பட்டியலில் சேர்க்க அல்லது "நீண்டபட்டியலுக்கு" பரிந்துரைக்கப்படுவதற்கு புதின ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு தனிச்சிறப்புக் குறி என்று இலக்கிய விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.[1]
இப்பரிசுடன் இணைந்ததாக பன்னாட்டு புக்கர் பரிசு ஆங்கில மொழிக்கு பொழிபெயர்க்கப்பட்டு ஐக்கிய இராச்சியம் அல்லது அயர்லாந்தில் வெளியிடப்பட்ட புதினத்துக்கு வழங்கப்படுகிறது.[4]
அறுபதுகளின் இறுதியில், ஜொனதன் கேப் (Jonathan Cape) என்னும் பிரித்தானியப் பதிப்பகத்தைச் சேர்ந்த டொம் மாஸ்ச்லெர் (Tom Maschler) என்பவர், அக்காலத்தில் நூல் வெளியீடுகள் மூலம் நிறைந்த வருமானம் பெற்றுவந்த புக்கர் பிரதர்ஸ் என்னும் நிறுவனத்தை அணுகி, எழுத்தாளர்களுக்கான பரிசொன்றை நிறுவுவதற்கு இசையச் செய்தார். ஆரம்பத்தில் இது புக்கர்-மக்கொன்னெல் பரிசு என வழங்கப்பட்டது எனினும் பொதுவில் புக்கர் பரிசு என்றே அழைக்கப்பட்டு வந்தது. 2002 ஆம் ஆண்டில் இப் பரிசுக்கான பொறுப்பை, மான் குரூப் என்னும் நிதி முதலீட்டு நிறுவனம் ஒன்று ஏற்றுக்கொண்டது. எனினும், புக்கர் என்னும் பெயரைத் தக்க வைத்துக்கொள்ள விரும்பிய அவர்கள், பரிசின் பெயரை புனைவுகளுக்கான மான் புக்கர் பரிசு என மாற்றினர்.
முன்னர் £21,000 ஆக இருந்த பரிசுத்தொகை, 2002 ஆம் ஆண்டுக்குப் பின் £50,000 ஆக உயர்த்தப்பட்டது.
ஆண்டு | நூலாசிரியர் | தலைப்பு | வகை | நாடு |
---|---|---|---|---|
1969 | பி. எச். நியூபி[5] | Something to Answer For | புதினம் | ஐக்கிய இராச்சியம் |
1970 | பெர்னிசு ரூபென்சு[6] | The Elected Member | புதினம் | ஐக்கிய இராச்சியம் |
1971 | வி. சூ. நைப்பால்[7] | In a Free State | புதினம் | ஐக்கிய இராச்சியம் டிரினிடாட் மற்றும் டொபாகோ |
1972 | யோன் பெர்கர்[8] | G. | பரிசோதனைப் புதினம் | ஐக்கிய இராச்சியம் |
1973 | ஜே. ஜி. பாரெல்[9] | The Siege of Krishnapur | புதினம் | ஐக்கிய இராச்சியம் அயர்லாந்து |
1974 | நாடின் கார்டிமர்[10] | The Conservationist | புதினம் | தென்னாப்பிரிக்கா |
இசுடான்லி மிடில்ட்டன்[11] | Holiday | புதினம் | ஐக்கிய இராச்சியம் | |
1975 | ரூத் பிராவர் ஜாப்வாலா | Heat and Dust | வரலாற்றுப் புதினம் | ஐக்கிய இராச்சியம் செருமனி |
1976 | டேவிட் இசுட்டோரி[12] | Saville | புதினம் | ஐக்கிய இராச்சியம் |
1977 | பவுல் இசுக்கொட்[13] | Staying On | புதினம் | ஐக்கிய இராச்சியம் |
1978 | ஐரிசு மெர்டொக்[14] | The Sea, the Sea | மெய்யியல் புதினம் | ஐக்கிய இராச்சியம் அயர்லாந்து |
1979 | பெனிலோப் பிட்சுசெரால்டு[15] | Offshore | புதினம் | ஐக்கிய இராச்சியம் |
1980 | வில்லியம் கோல்டிங்[16] | Rites of Passage | புதினம் | ஐக்கிய இராச்சியம் |
1981 | சல்மான் ருஷ்டி[17] | Midnight's Children | மந்திர யதார்த்தவாதம் | ஐக்கிய இராச்சியம் |
1982 | தாமஸ் கெநீலி[18] | Schindler's Ark | சுயசரிதப் புதினம் | ஆத்திரேலியா |
1983 | ஜே. எம். கோட்ஸி[19] | Life & Times of Michael K | புதினம் | தென்னாப்பிரிக்கா |
1984 | அனித்தா புரூக்னர்[20] | Hotel du Lac | புதினம் | ஐக்கிய இராச்சியம் |
1985 | கெரி ஊல்மே[21] | The Bone People | மர்மப் புனைவு | நியூசிலாந்து |
1986 | கிங்சுலி ஆமிசு[22] | The Old Devils | நகைச்சுவைப் புதினம் | ஐக்கிய இராச்சியம் |
1987 | பெனிலோப் லைவ்லி[23] | Moon Tiger | புதினம் | ஐக்கிய இராச்சியம் |
1988 | பீட்டர் கேரி[24] | Oscar and Lucinda | வரலாற்றுப் புதினம் | ஆத்திரேலியா |
1989 | கசுவோ இசுகுரோ[25] | The Remains of the Day | வரலாற்றுப் புதினம் | ஐக்கிய இராச்சியம் |
1990 | ஏ. எசு. பயாட் | Possession | வரலாற்றுப் புதினம் | ஐக்கிய இராச்சியம் |
1991 | பென் ஒக்ரி[26] | The Famished Road | மந்திர யதார்த்தவாதம் | நைஜீரியா |
1992 | மைக்கேல் ஒண்டாச்சி[27] | The English Patient | வரலாற்றுப் புதினம் | கனடா |
பாரி அன்சுவர்த்[28] | Sacred Hunger | வரலாற்றுப் புதினம் | ஐக்கிய இராச்சியம் | |
1993 | ரொடி டொயில் | Paddy Clarke Ha Ha Ha | புதினம் | அயர்லாந்து |
1994 | யேம்சு கெல்மன்[29] | How Late It Was, How Late | புதினம் | ஐக்கிய இராச்சியம் |
1995 | பாட் பார்க்கர்[30] | The Ghost Road | போர் புனைவு | ஐக்கிய இராச்சியம் |
1996 | கிரகாம் சுவிஃப்டு[31] | Last Orders | புதினம் | ஐக்கிய இராச்சியம் |
1997 | அருந்ததி ராய் | த காட் ஆப் ஸ்மால் திங்ஸ் | புதினம் | இந்தியா |
1998 | இயன் மெக்எவன்[32] | Amsterdam | புதினம் | ஐக்கிய இராச்சியம் |
1999 | ஜே. எம். கோட்ஸி[33] | Disgrace | புதினம் | தென்னாப்பிரிக்கா |
2000 | மார்கரெட் அட்வுட் | The Blind Assassin | வரலாற்றுப் புதினம் | கனடா |
2001 | பீட்டர் கேரி | True History of the Kelly Gang | வரலாற்றுப் புதினம் | ஆத்திரேலியா |
2002 | யான் மார்ட்டெல் | லைஃப் ஆஃப் பை | கனவுருப்புனைவு, சாகசப் புதினம் | கனடா |
2003 | டிபிசி பியேர் | Vernon God Little | நகைச்சுவை | ஆத்திரேலியா |
2004 | அலன் ஒலிங்கர்சுட் | The Line of Beauty | வரலாற்றுப் புதினம் | ஐக்கிய இராச்சியம் |
2005 | யோன் பான்வில் | The Sea | புதினம் | அயர்லாந்து |
2006 | கிரண் தேசாய் | தி இன்ஹெரிட்டன்ஸ் ஒஃப் லாஸ் | புதினம் | இந்தியா |
2007 | ஆன் என்ரைட் | The Gathering | புதினம் | அயர்லாந்து |
2008 | அரவிந்த் அடிகா[34] | The White Tiger | புதினம் | இந்தியா |
2009 | இலரி மான்டெல் | Wolf Hall | வரலாற்றுப் புதினம் | ஐக்கிய இராச்சியம் |
2010 | அவார்டு யேக்கப்சன் | The Finkler Question | நகைச்சுவைப் புதினம் | ஐக்கிய இராச்சியம் |
2011 | யூலியன் பார்னசு | The Sense of an Ending | புதினம் | ஐக்கிய இராச்சியம் |
2012 | இலரி மான்டெல் | Bring Up the Bodies | வரலாற்றுப் புதினம் | ஐக்கிய இராச்சியம் |
2013 | இலினோர் காட்டன் | The Luminaries | வரலாற்றுப் புதினம் | நியூசிலாந்து |
2014 | ரிச்சர்டு ஃபிளானகன் | The Narrow Road to the Deep North | வரலாற்றுப் புதினம் | ஆத்திரேலியா |
2015 | மர்லோன் ஜேம்ஸ் | A Brief History of Seven Killings | வரலாற்றுப் புதினம் | யமேக்கா |
2016 | பால் பேட்டி | The Sellout | நகைச்சுவைப் புதினம் | ஐக்கிய அமெரிக்கா |
2017 | சியார்ச் சோன்டர்சு | Lincoln in the Bardo | வரலாற்றுப் புதினம் | ஐக்கிய அமெரிக்கா |
2018 | அன்னா பர்ன்சு | Milkman | புதினம் | ஐக்கிய இராச்சியம் |
2019 | மார்கரெட் அட்வுட் | The Testaments | புதினம் | கனடா |
பெர்னார்டீன் எவரிசுட்டோ | Girl, Woman, Other | பரிசோதனைப் புனைவு | ஐக்கிய இராச்சியம் | |
2020 | டக்லசு இசுட்டுவர்ட் | Shuggie Bain | புதினம் | ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா |
2021 | தேமன் கால்கட் | The Promise | புதினம் | தென்னாப்பிரிக்கா |
2022 | செகான் கருணாதிலக்க[35] | The Seven Moons of Maali Almeida | புதினம் | இலங்கை |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.