From Wikipedia, the free encyclopedia
மானாட மயிலாட என்பது இந்தியாவிலுள்ள தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நடனப் போட்டி நிகழ்ச்சி ஆகும்.[1][2][3]
இந்நிகழ்ச்சி செப்டம்பர் 2007 முதல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் நிகழ்ச்சி ஆகும். ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும். இப்பொழுது நான்காவது பாகம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது
வித்தியாசமான அரங்க அமைப்புகளாலும் அதற்கேற்ற விறுவிறுப்பான நடன அமைப்பினாலும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பிரபலமான நிகழ்ச்சி ஆகும்.
மழை பொழியும் அரங்கம், பனி பொழியும் அரங்கம், பாலைவனம், கடற்கரை, நீர்வீழ்ச்சி, சூரியகாந்திப் பூக்கள் தோட்டம், விமானம் மற்றும் விமான நிலையம் போன்ற அரங்க அமைப்புகள் பார்வையாளர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டன.
இது பிரித்தானியாவில் ஒளிபரப்பப்படும் மேற்கத்திய நடனப்போட்டி நிகழ்ச்சியான en: Strictly Come Dancing என்ற நிகழ்ச்சியின் தழுவல் ஆகும்.
இது பெரும்பாலும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்குபெறும் நடன நிகழ்ச்சி ஆகும். நடனப் போட்டியாளர்கள் இருவர், நடன இயக்குனர் ஒருவர் இணைந்து ஒரு குழுவாக போட்டியிடுவர். ஏறத்தாழ பத்து குழுக்கள் போட்டியில் பங்கு பெரும்.
போட்டியில் வெற்றி பெறும் முதல் இணைக்கு 10 இலட்சம் இந்திய ரூபாய்களும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இணைகளுக்கு முறையே 5 மற்றும் 3 இலட்சம் ரூபாய்களும் பரிசாக வழங்கப்படும்.
ஆண்டுகள் | பாகங்கள் | தொகுப்பாளர் |
---|---|---|
2007 முதல் | 1 முதல் | சஞ்சீவ் |
2007 முதல் | 1 முதல் | கீர்த்தி |
ஆண்டுகள் | பாகங்கள் | நடுவர் |
---|---|---|
2007 முதல் | 1 முதல் | கலா |
2008 முதல் | 2 முதல் | குஷ்பு |
2007-2008, 2009 | 1 மற்றும் 4 | நமீதா |
2008-2009 | 2 மற்றும் 3 | ரம்பா |
2007-2008 | 1 | பிருந்தா |
2007 | 1 | சிம்ரன் |
2007 | 1 | கே.எஸ்.ரவிக்குமார் |
சந்தோஷ்(சேண்டி), பிரேம், மணி, ரமேஷ், சந்துரு, ரகு, பாலா, ஆண்டோ, ஸ்ரீநாத், ராஜேஷ்
இவர்கள் நடன இயக்குனர் கலாவின் கலாலயா நடனப் பள்ளியின் மாணவர்கள் ஆவர்.
பாகம் | முதல் பரிசு | இரண்டாம் பரிசு | மூன்றாம் பரிசு |
---|---|---|---|
1 | சதீஷ் - ஜெயஸ்ரீ | ராகவ் - ப்ரீத்தா | ராஜ்காந்த் - பாவனா |
2 | பாலா - பிரியதர்ஷினி | கனேஷ்கர் - ஆர்த்தி | லோகேஷ் - சுஜிபாலா |
3 | ரஞ்சித் - ஐஸ்வர்யா | ஃபயாஸ் - தர்ஷினி | அசார் - ரஜினி |
மானாட மயிலாட முதல் பாகத்தில் நடுவர்களாக நடன இயக்குனர்கள் கலா மற்றும் பிருந்தா சகோதரிகள் பங்கேற்றனர். இவர்களுடன் சிம்ரன் சில வாரங்களுக்கு நடுவராக இருந்தார். பின் சிம்ரன் மாற்றப்பட்டு நமீதா நடுவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இயக்குனர் கே.எஸ்.இரவிக்குமார் ஒரு வாரத்திற்கு மட்டும் நடுவராக வந்தார்.
இந்நிகழ்ச்சியில் நடிகைகள் மனோரமா, பூஜா, பிரியாமணி, சந்தியா மற்றும் கனிகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மானாட மயிலாட வெற்றி விழாவில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இணைகளுக்குப் பரிசுகள் வழங்கினார்.
எண் | இணை | நடன இயக்குன்ர் | தேர்ச்சி |
---|---|---|---|
1 | சதீஷ் - ஜெயஸ்ரீ | சந்தோஷ்(சேண்டி) | முதல் பரிசு |
2 | ராகவ் - ப்ரீத்தா | இரண்டாம் பரிசு | |
3 | ராஜ்காந்த் - பாவனா | மூன்றாம் பரிசு | |
4 | ஜார்ஜ் - சுஜிபாலா | ஆறுதல் பரிசு - ரூ.50000 | |
5 | ராஜ்குமார் - அர்ச்சனா | அரையிறுதி | |
6 | கோல்டன் சுரேஷ் - காயத்ரி ப்ரியா | அரையிறுதி | |
7 | நிதிஷ் - ஸ்வேதா | ||
8 | பிரபாகர் - காஜல் |
தேதி | சுற்று |
---|---|
7 அக்டோபர் 2007 | 1960 |
21 அக்டோபர் 2007 | வெஸ்டர்ன் |
28 அக்டோபர் 2007 | எக்ஸ்சேஞ்ச் |
4 நவம்பர் 2007 | கமல், ரஜினி |
8 நவம்பர் 2007 | தீப ஒளி திருநாள் சிறப்பு |
11 நவம்பர் 2007 | உடல் குறைபாடுடையவர்கள் |
18 நவம்பர் 2007 | இளையராசா |
25 நவம்பர் 2007 | நகைச்சுவை |
2 டிசம்பர் 2007 | ஏ.ஆர்.ரகுமான் |
9 டிசம்பர் 2007 | 2006 -2007 |
16 டிசம்பர் 2007 | கான்செப்ட் |
23 டிசம்பர் 2007 | ஐடெம் சாங் |
30 டிசம்பர் 2007 | மறு-நுழைவு - திருவிழா |
6 சனவரி 2008 | மறு-நுழைவு - ரீமிக்ஸ் |
13 சனவரி 2008 | பொங்கல் சிறப்பு |
20 சனவரி 2008 | அரையிறுதி - வெளிநாட்டில் படமாக்கப்பட்டப் பாடல்கள் |
27 சனவரி 2008 | அரையிறுதி - நடன இயக்குனர்கள் |
மானாட மயிலாட இரண்டாம் பாகத்தில் கலா, குஷ்பு மற்றும் ரம்பா ஆகியோர் நடுவர்கள் ஆவர்.
எண் | இணை | நடன இயக்குன்ர் | தேர்ச்சி |
---|---|---|---|
1 | பாலா - பிரியதர்ஷினி | மணி | முதல் பரிசு |
2 | கணேஷ்கர் - ஆர்த்தி | பிரேம் | இரண்டாம் பரிசு |
3 | லோகேஷ் - சுஜிபாலா | ஆண்டோ | மூன்றாம் பரிசு |
4 | கார்த்திக் - நீபா | இறுதிச்சுற்று | |
5 | கோகுல்நாத் - கவி | இறுதிச்சுற்று | |
6 | ஆகாஷ் - ஸ்ருதி | இறுதிச்சுற்று | |
7 | சாய்பிரசாத் - ஸ்வேதா | அரையிறுதி | |
8 | சக்தி சரவணன் - யோகினி | அரையிறுதி | |
8 | மதன் - பிரியங்கா/ரேகா | ||
10 | சுரேஷ்வர் - மது | ||
11 | ரஞ்சித் - ஐஸ்வர்யா | சேண்டி |
தேதி | சுற்று |
---|---|
16 மார்ச் 2008 | அறிமுகம் |
23 மார்ச் 2008 | குத்துப்பாட்டு |
30 மார்ச் 2008 | டூயட் |
06 ஏப்ரல் 2008 | ப்ராப்பர்ட்டி |
13 ஏப்ரல் 2008 | 1960 |
20 ஏப்ரல் 2008 | வெஸ்டர்ன் |
27 ஏப்ரல் 2008 | எக்ஸ்சேஞ்ச் |
04 மே 2008 | ரஜினி - விஜய் |
11 மே 2008 | பாலச்சந்தர் - பாரதிராஜா |
1 ஜூன் 2008 | நகைச்சுவை |
8 ஜூன் 2008 | கமல் - அஜீத் |
15 ஜூன் 2008 | எக்ஸ்ப்ரஸன் |
22 ஜூன் 2008 | ஸ்பெஷல் சாங் |
29 ஜூன் 2008 | சோலோ |
06 ஜூலை 2008 | ஸ்னோஃபால் |
13 ஜூலை 2008 | ரீமிக்ஸ் |
20 ஜூலை 2008 | கொண்டாட்டம் |
27 ஜூலை 2008 | ஃப்ரீ ஸ்டைல் |
03 ஆகஸ்டு 2008 | க்ளப்மிக்ஸ் - ஃப்ரண்ட்ஸிப் |
10 ஆகஸ்டு 2008 | நடுவர்கள் |
17 ஆகஸ்டு 2008 | திகில் |
24 ஆகஸ்டு 2008 | நடன இயக்குனர்கள் |
31 ஆகஸ்டு 2008 | வினாயகர் சதுர்த்தி சிறப்பு |
14 செப்டம்பர் 2008 | ஓராண்டு முடிவு கொண்டாட்டம் |
28 செப்டம்பர் 2008 | பாலைவனம் |
மானாட மயிலாட மூன்றாம் பாகத்தில் கலா, குஷ்பு மற்றும் ரம்பா ஆகியோரே நடுவர்களாகத் தொடர்ந்தனர்.
எண் | இணை | நடன இயக்குன்ர் | தேர்ச்சி |
---|---|---|---|
1 | ரஞ்ஜித் - ஐஸ்வர்யா | முதல் பரிசு | |
2 | பயாஸ் - தர்ஷினி | இரண்டாம் பரிசு | |
3 | அசார் - ரஜினி | மூன்றாம் பரிசு | |
4 | ராம் - பிரியா | இறுதிச்சுற்று | |
5 | அருண் - அப்சரா | இறுதிச்சுற்று | |
6 | சைதன்யா - ராகவி | அரையிறுதி | |
7 | நிவாஸ் - கிருத்திகா | அரையிறுதி | |
8 | ராகவா - சுவேதா | அரையிறுதி | |
8 | முரளி - நிஷா | ||
10 | அஸ்வந்த் - சுகுணா | ||
11 | அஜய் - ரேகா |
மானாட மயிலாட நான்காம் பாகத்தில் கலா, குஷ்பு மற்றும் நமீதா ஆகியோர் நடுவர்கள் ஆவர்.
இந்தப் பாகத்தில் முதல் சில வாரங்களுக்குப் பின்னரே போட்டிக்கான இணைகள் தேர்வு செய்யப்பட்டனர். அதுவரை ஆண்-ஆண் மற்றும் பெண்-பெண் என்று ஒரு பாலினத்தாரே இணைந்து நடனம் ஆடினர்.
மனோ - சுகுமார் இணை நகைச்சுவை நிகழ்ச்சிகளை வழங்குவதற்காக, போட்டியாளர்களாக இல்லாமல் சிறப்பு இணையாக இந்த பாகம் முழுவதும் தொடர்கிறார்கள்.
எண் | இணை | நடன இயக்குன்ர் | தேர்ச்சி | வாக்களிக்கும் முறை |
---|---|---|---|---|
1 | மனோ - சுகுமார் | பிரேம் | சிறப்பு இணை - பாகம் 4 முழுவதும் | |
2 | மகேஷ் - பிரியதர்ஷினி | இணை வெளியேற்றப்பட்டுள்ளது | ||
3 | யுவராஜ் - தீபா | இணை வெளியேற்றப்பட்டுள்ளது | ||
5 | கார்த்திக் - சௌந்தர்யா | அரையிறுதி சுற்றில் இணை விலகிக்கொண்டது | ||
4 | குமரன் - அப்சரா | அரையிறுதி சுற்றில் இணை வெளியேற்றப்பட்டுள்ளது | ||
6 | கிரண் - பூஜா | இறுதிச்சுற்று | MM4<Space>KP 56767778 எண்ணுக்கு SMS அனுப்புக | |
7 | கோகுல் - நீபா | இறுதிச்சுற்று | MM4<Space>KN 56767778 எண்ணுக்கு SMS அனுப்புக | |
8 | லோகேஷ் - ஸ்வேதா | இறுதிச்சுற்று | MM4<Space>LS 56767778 எண்ணுக்கு SMS அனுப்புக | |
9 | நிவாஸ் - கிருத்திகா | சந்தோஷ்(சேண்டி) | இறுதிச்சுற்று | MM4<Space>NK 56767778 எண்ணுக்கு SMS அனுப்புக |
10 | ரஹ்மான் - நிகிதா | இறுதிச்சுற்று | MM4<Space>RN 56767778 எண்ணுக்கு SMS அனுப்புக |
தேதி | சுற்று | சிறந்த நடனம் | வெளியேற்றப்பட்ட இணை/குழு |
---|---|---|---|
25 அக்டோபர் 2009 | |||
01 நவம்பர் 2009 | ஆதவன் திருவிழா சிறப்பு | ||
08 நவம்பர் 2009 | சிறைச்சாலை | ஆண் : கிரண் பெண் : பூஜா இயக்குனர்: - | |
15 நவம்பர் 2009 | குழந்தைகள் தினம் சிறப்பு | ஆண் : ரஹ்மான் பெண் : சௌந்தர்யா இயக்குனர்: - | கிரண் - பூஜா |
22 நவம்பர் 2009 | மசாலா மிக்ஸ் | ஆண் 1 : லோகேஷ் ஆண் 2 : நிவாஸ் | |
29 நவம்பர் 2009 | |||
17 சனவரி 2010 | பொங்கல் சிறப்பு - அரையிறுதி முடிவுகள் அறிவிப்பு | ||
24 சனவரி 2010 | அரையிறுதி முடிவுகள் அறிவிப்பு | ||
31 சனவரி 2010 | இறுதிச்சுற்று | ||
06 பிப்ரவரி 2010 | வெற்றி விழா - நேரு உள் விளையாட்டு அரங்கம் |
சிறந்த நடனத்திற்கான பரிசைப் பெற்றனர்
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.