From Wikipedia, the free encyclopedia
மாதுலுவாவே சோபித்த தேரர் (Maduluwawe Sobitha Thero, சிங்களம்: මාදුළුවාවේ සෝභිත හිමි; 29 மே 1942 - 8 நவம்பர் 2015) சிங்கள பௌத்த பிக்கு ஆவார். இவர் இலங்கை கோட்டே நாக விகாரையின் விகாராதிபதியும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவரும் ஆவார்.[1][2][3][4]
மாதுலுவாவே சோபித்த தேரர் Maduluwawe Sobitha Thero | |
---|---|
![]() வண. மாதுலுவாவே சோபித்த தேரர் (2015) | |
பதவி | கோட்டே நாக விகாரையின் விகாராதிபதி |
சுய தரவுகள் | |
பிறப்பு | பத்திர தேவாகே இரத்தினசேகரா 29 மே 1942 பாதுக்கை, இலங்கை |
இறப்பு | 8 நவம்பர் 2015 73) | (அகவை
சமயம் | பௌத்தம் |
தேசியம் | இலங்கையர் |
பெற்றோர்(s) | பத்திர தேவாகே அப்புகாமி, கரலினகாமி |
பாடசாலை | தேரவாத பௌத்தம் |
தர்மா பெயர்(கள்) | வண. மாதுலுவாவே சோபித்த தேரர் |
கோயில் | நாக விகாரை, சிறீ ஜெயவர்தனபுர கோட்டை |
2015 சனவரியில் மகிந்த ராசபக்ச அரசைப் பதவியில் இருந்து அகற்ற இவர் முக்கிய பங்காற்றினார். 2015 சனவரி அரசுத் தலைவர் தேர்தலில் ராசபக்சவிற்கு எதிராக எதிரணிக் கூட்டு வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்தார்.
சோபித தேரர் தனது 13வது அகவையில் பௌத்த விகாரை வாழ்வைத் தொடங்கினார்.[5] 1962 ஆம் ஆண்டில் பௌத்த குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.[5]
சுகவீனம் காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த சோபித்த தேரர் 2015 நவம்பர் 8 அன்று காலமானார்.[6]
Seamless Wikipedia browsing. On steroids.