From Wikipedia, the free encyclopedia
மாதிகை (அல்லது மாசிகை) என்பது மாதம் ஒருமுறை வெளியாகும் இதழ் (சஞ்சிகை). பல தமிழ் இலக்கிய இதழ்கள் மாதிகையாகவே வெளியாகின்றன. மாதிகை, திங்களிதழ், மாத இதழ் என்பன ஒரு பொருள் குறிக்கும் சொற்கள். உலகெங்கிலும், பல மொழிகளிலும், மாதிகைகள் பெரும்பாலும் 19-ஆம் நூற்றாண்டில்தான் வெளிவரத்தொடங்கின. தமிழில் பழைய மாதிகைகள் 1860-இல் வெளிவந்த தேசோபகாரி, 1864-இல் வெளிவந்த தத்துவ போதினி, 1870-இல் வெளிவந்த சத்திய வர்த்தினி, 1870-இல் வெளிவந்த நற்போதம், 1880-இல் வெளிவந்த கோயமுத்தூர் கலாநிதி முதலியன ஆகும். சுமார் 1860-இல் தொடங்கி 1957-ஆம் ஆண்டு வரை உள்ள ஆண்டுகளில் தொடங்கப்பட்ட 346 தமிழ் மாதிகைகள் பற்றிய குறிப்புகள் இன்று அறியப்படுவன[1]
Seamless Wikipedia browsing. On steroids.