From Wikipedia, the free encyclopedia
மாக புராணம் [1] 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அதிவீர ராம பாண்டியன் என்பவரால் பாடப்பட்ட நூல். மாசி மாதத்தில் நீராடுவதை 'மாகஸ்நானம்' என்று கொண்டாடுவது வழக்கம். இந்த நீராட்டு விழாப் பற்றிய கதைகளைக் கூறுவது மாக புராணம். இது வடமொழிப் 'பாத்ம புராணம்' [2] புராணமஎன்னும் நூலில் சொல்லப்பட்டுள்ளதாம். அந்த நூலிலிருந்து இந்தத் தமிழ்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இதில் 12 கடவுள் வாழ்த்துப் பாடல்களும், 1412 புராணச் செய்திப் பாடல்களும் உள்ளன. [3] மாசி மாதம் ஒவ்வொரு நாளும் வைகறையில் எழுந்து காவிரி போன்ற புதுப்புனலில் நீராடும்போது இந்த நூல் ஓதப்பட்டதாகத் தெரிகிறது. கலித்துறைப் பாடல்கள், துதிப் பாடல்கள், சந்தப் பாடல்கள், உலக நீதிகள், வருணனைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.