ரூமியின் பாரசீக இலக்கிய படைப்பு From Wikipedia, the free encyclopedia
மஸ்னவி (Masnavi) என்பது ஜலாலுத்தீன் முகம்மது பல்கி சுருக்கமாக ரூமி என்றும் அழைக்கப்படும் சூபி ஞானி பாரசீக மொழியில் எழுதிய ஒரு மிகப்பெரிய கவிதை ஆக்கமாகும். மஸ்னவி நூலானது சுபித்துவத்தின் மிகவும் செல்வாக்குமிக்க படைப்புகளில் ஒன்றாகும், இது பொதுவாக "பாரசீக மொழியின் குர்ஆன்" என்று அழைக்கப்படுகிறது. [1] இதை பல வர்ணனையாளர்கள் உலக இலக்கியத்தில் மிகப் பெரிய மருளியலான கவிதை என்று கருதினர். [2] மஸ்னவி என்பது ஆறு கவிதை நூல்களின் வரிசையாகும். இவை சுமார் 25,000 வசனங்கள் அல்லது 50,000 வரிகளைக் கொண்டுள்ளன. [3] [4] கடவுளை உண்மையாக நேசிப்பதன் இலக்கை எவ்வாறு அடைவது என்பதை சூஃபிக்களுக்கு கற்பிக்கும் ஒரு ஆன்மீக உரையாக இது உள்ளது. [5]
மஸ்னவி கவிதைகளை ரூமி தனது வாழ்க்கையின் இறுதி காலத்தில் படைக்ககத் தொடங்கினார். 1258 ஆம் ஆண்டில் தனது 54 வயதில் முதல் புத்தகத்தை சொல்ல சொல்ல எழுதவைக்கத் தொடங்கினார். அதன்பிறகு 1273 இல் அவர் இறக்கும் வரை வசனங்களை இயற்றினார். ஆறாவதும் இறுதி புத்தகம் முழுமையடையவில்லை. [6]
ரூமி தனது விருப்பமான சீடரான ஹுசாம் அல்-தின் சலாபியின் வேண்டுகோளின் பேரில் மஸ்னவியின் வசனங்களை கூறத் தொடங்கினார் என்று ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ரூமியைப் பின்பற்றுபவர்கள் பலரும் சனா மற்றும் 'அத்தாரின் படைப்புகளை பாராயணம் செய்வதைக் கவனித்தார். இதனால் ரூமி சனா மற்றும் 'அத்தாரின் பாணியில் ஒரு படைப்பை உருவாக்கத் தொடங்கினார். ரூமி வசனங்களை ஓதும் கூட்டங்களில் இந்த மனிதர்கள் தவறாமல் கூடியதாகவும், சலாபி அவற்றை எழுதி அவரிடம் திரும்பப் படித்து காட்டியதாகவும் கூறப்படுகிறது. [7]
ஒவ்வொரு புத்தகமும் சுமார் 4,000 வசனங்களைக் கொண்டுள்ளது மேலும் ஒவ்வொரு நூலும் தனியாக அறிமுகம், முன்னுரை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆறாவது தொகுதியானது ரூமியின் மரணத்தினால் நிறைவடையவில்லை என்பதுடன், அதன்பிறகு மற்றொரு தொகுதி எழுதப்பட்டிருக்கலாம் என்பன போன்ற கூற்றுகள் உள்ளன. [8]
இந்த நூலின் தேர்ந்தெடுத்த பகுதிகள் ஆர். பி. எம். கனி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அதன்பிறகு நரியம்பட்டு ஸலாம் முதலில் ‘மஸ்னவி’ நூலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை மொழிபெயர்த்து ‘மலர்வனம்’ என்று புத்தகமாக்கினார். அதைத் தொடர்ந்து நரியம்பட்டு ஸலாமே ரூமியின் மஸ்னவி நூலை முழுமையாக தமிழில் அளித்தார். இந்த நூலில் பாரசீக மூலம், உருது வடிவம், தமிழில் பாரசீக ஒலிபெயர்ப்பு, தமிழ் மொழிபெயர்ப்பு என்று பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. 2008இல் தொடங்கிய மொழிபெயர்ப்பு 2021 வரை ஏழு தொகுதிகளாக ஃபஹீமிய்யா பப்ளிஷர்சால் வெளியிடப்பட்டுள்ளது.[9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.