மலேசிய பொதுப் பணி அமைச்சு
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
மலேசிய பொதுப் பணி அமைச்சு (மலாய்: Kementerian Kerja Raya Malaysia; (KKR) ஆங்கிலம்: Ministry of Works Malaysia) என்பது மலேசியாவின் பொதுப் பணித் துறைகள் (Public Works); பொதுச் சாலைகள் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு செயல்படும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும்.
Ministry of Works Malaysia Kementerian Kerja Raya Malaysia (KKR) | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 31 ஆகத்து 1957 |
முன்னிருந்த அமைப்பு |
|
ஆட்சி எல்லை | மலேசிய அரசாங்கம் |
தலைமையகம் | Kompleks Kerja Raya, Jalan Sultan Salahuddin, 50580 கோலாலம்பூர் 03°09′16″N 101°41′20″E |
பணியாட்கள் | 11,220 (2023)[1] |
ஆண்டு நிதி | MYR 8,439,060,200 (2022 - 2023)[1] |
அமைச்சர் |
|
துணை அமைச்சர் |
|
அமைப்பு தலைமை |
|
வலைத்தளம் | www |
அடிக்குறிப்புகள் | |
முகநூலில் மலேசிய பொதுப் பணி அமைச்சு |
மலேசியாவின் பெரும்பாலான அமைச்சுகள் புத்ராஜெயாவில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் வேளையில், கோலாலம்பூர் மாநகரில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் மூன்று மலேசிய அமைச்சுகளில் மலேசிய பொதுப் பணி அமைச்சும் ஒன்றாகும்.
1954-இல், பிரித்தானிய அரசாங்கம் மலாயா தீபகற்பத்தின் (மலாயா) நிர்வாகத்தை சிங்கப்பூரில் மையப்படுத்தப்பட்ட அதன் முக்கிய நிர்வாகத்தில் இருந்து பிரிக்க பல நடவடிக்கைகளை எடுத்தது. அதுவே மலாயா தீபகற்பத்தில் உள்ள உள்ளூர் அரசாங்கத் துறைகள்; தங்கள் சொந்தக் கொள்கைகள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
1956-ஆம் ஆண்டில், மலாய் தீபகற்பத்தின் கூட்டமைப்பை (Federation of Malay Peninsula) வழிநடத்த மந்திரி பெசார்கள் மற்றும் பல அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
அதே ஆண்டில், பணிகள் அமைச்சு உட்பட பல அமைச்சுகள் உருவாக்கப்பட்டன, பணிகள் அமைச்சு முதலில் பணிகள், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சு (Ministry of Works, Post and Telecom) என்று பெயரிடப்பட்டது. சார்டோன் அஜி சுபிர் (Sardon bin Haji Jubir) அந்த பணிகள் அமைச்சை வழிநடத்திய முதல் அமைச்சர் ஆவார்.
பொதுப் பணித்துறையின் செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகள் தக்கவைக்கப்பட்டு, அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் வைக்கப்பட்டன. 1957-இல், அமைச்சு மறுசீரமைக்கப்பட்டு பணிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சு (Ministry of Works and Transportation) என மறுபெயரிடப்பட்டது.
1970-களில் நாட்டின் வளர்ச்சி மற்றும் சமூகப் பொருளாதார நிலையில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டது. 1978-இல் பணிகள் மற்றும் பொது வசதிகள் அமைச்சு (Ministry of Works and Public Amenities) என மறுபெயரிடப்பட்டது. இருப்பினும், பொறுப்புகளின் நிபுணத்துவத்திற்கு ஏற்ப, 1980-களில் பணிகள் அமைச்சு (Ministry of Works Malaysia) என மறுபெயரிட்டது; 2014-ஆம் ஆண்டில் இருந்து பெயர் மாறாமல் உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.