மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சு
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சு (மலாய்: Kementerian Pembangunan Kerajaan Tempatan (KPKT); ஆங்கிலம்: Ministry of Local Government Development) (MOHA) என்பது மலேசிய மக்களின் நகர்ப்புற நல்வாழ்வு, மலேசிய மக்களின் வீட்டுவசதிகள், நாடளாவிய நிலையில் உள்ள உள்ளூராட்சிகள் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சுகளில் ஒன்றாகும். இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயா (Putrajaya) கூட்டரசு அரசாங்க நிர்வாக மையத்தில் (Federal Government Administrative Centre) உள்ளது.
Kementerian Pembangunan Kerajaan Tempatan Ministry of Local Government Development (KPKT) | |
மலேசிய அரசாங்கம் | |
மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சகம் புத்ராஜெயா | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 16 மே 2013 |
முன்னிருந்த அமைப்புகள் |
|
ஆட்சி எல்லை | மலேசிய அரசாங்கம் |
தலைமையகம் | No. 51, Persiaran Perdana, Precinct 4, Federal Government Administrative Centre, 62100 புத்ராஜெயா 02°54′08.5″N 101°40′53.5″E |
குறிக்கோள் | வளமான வாழ்க்கை Prosperous Living Kehidupan Sejahtera |
பணியாட்கள் | 17,238 (2018) |
ஆண்டு நிதி | MYR 5,333,732,300 (2022 - 2023)[1] |
அமைச்சர் |
|
துணை அமைச்சர் |
|
அமைப்பு தலைமை |
|
வலைத்தளம் | www |
அடிக்குறிப்புகள் | |
முகநூலில் மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சு |
நகர்ப்புற நல்வாழ்வு (Urban Well-being); வீட்டுவசதி (Housing); உள்ளூர் அரசாங்கம் (Local Government); தீயணைப்பு மீட்பு (Fire and Rescue) ஆகிய முக்கியமான பொறுப்புகளுக்கு இந்த அமைச்சு முதலிடம் வழங்குகிறது.
மலேசியாவில் தற்போது நான்கு வகையான உள்ளாட்சி மன்றங்கள் உள்ளன.
தற்போது மலேசியாவில் மொத்தம் 155 உள்ளூராட்சிகள் உள்ளன. அவற்றின் பிரிவுகள்:
1973-ஆம் ஆண்டில் மலேசிய உள்ளாட்சி மன்றங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. அதற்கு முன்னர் மலேசிய உள்ளாட்சி மன்றங்களில், 6 வகையான உள்ளாட்சிகள் இருந்தன. உள்ளாட்சிப் பதவிகளும் உள்ளாட்சிகளுக்குப் பெயர் வைப்பதிலும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்டு இருந்தன.
அப்போது மலேசியாவில் இருந்த உள்ளாட்சி மன்றங்களின் எண்ணிக்கை 418. அவை கீழ்க்கண்ட பெயர்களில் செயல்பட்டன:
மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சு பல முக்கியச் சட்டங்களின் நிர்வாகச் செயல்முறைகளுக்குப் பொறுப்பு வகிக்கிறது.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.