வர்மம் அல்லது அழுத்துமிடம் (மர்மம் எனவும் அறியப்படும்) என்பது மனித உடலிலுள்ள நரம்புகள் அல்லது நரம்பு புள்ளிகள் ஆகும். இந்த அறிவைப் பெற்றிருப்பதன் மூலம் சிகிச்சை அளிக்கவோ அல்லது தற்காப்புக் கலையாகவோ பயன்படுத்தலாம்.

வர்மம் வரலாறு

வர்ம புள்ளிகள்

வர்மம் என்ற சொல்லுக்கு ‘உயிர்-ஆற்றல் பற்றிய அறிவியல் எனப்பொருள். இது 5000 ஆண்டு பழமை வாய்ந்த மருத்துவ முறையாகும். இது லெமுரியா கண்டம் எனப்படும் குமரிக் கண்டத்தில் தோன்றிய மருத்துவமாகும். ஆதலால் வர்மமே மருத்துவ முறைகளுக்கு முன்னோடியாக உள்ளது எனக்கூறலாம். ஏனெனில் லெமுரியா கண்டத்திலேயே முதல் உயிர் தோன்றியதாக அறிவியலாளர்கள் சான்று பகர்கின்றனர். லெமுரியர்கள் எனும் தமிழர்கள் நாகரீகத்தின் உச்சத்தி-ருந்த காலக்கட்டத்தில் கடற்கோளால் லெமுரியா எனும் குமரிக்கண்டம் அழிந்துபட, மீதமுள்ள துணிக்கையான குமரி மண்ணில் விட்டுச்செல்லப்பட்ட மருத்துவமே வர்ம மருத்துவமாகும்.

வர்ம மருத்துவ அறிவியல் தமிழ் மொழியிலேயே தோன்றியது. வர்ம மருத்துவமே மிகப்பழமை வாய்ந்த இந்திய முறை மருத்துவமாகும். இது ஆதிசித்தன் சிவனால் தோற்றுவிக்கப்பட்டு, அகத்தியர் மற்றும் போகர் போன்ற சித்தர்களால் வளர்க்கப்பட்டது. பின்னர் பல தமிழ் சான்றோர்களால் மருத்துவமாக கையாளப்பட்டு வந்துள்ளது. இவர்களெல்லாம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சார்ந்த லெமுரிய வழித்தோன்றல்களாக வந்த தமிழர்களாவர். தமிழ் பாரம்பரிய மருத்துவமான வர்ம மருத்துவத்தை தமிழர்கள் மருத்துவமாக மட்டுமன்றி, தற்காப்புக் கலையாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

மனிதன் தாவர, வேதியியல் மற்றும் விலங்கின சரக்குகளை மருத்துவத்திற்கு பயன்படுத்த ஆரம்பித்த காலத்துக்கு முன்னதாகவே, கை விரல்களால் பரிகாரம் தேடிக் கொண்ட ‘கை-மருத்துவம்’வர்மமேயாகும். வர்ம மருத்துவமே மிகப்பழமை வாய்ந்த மருத்துவம் எனக்கூற நமக்கு இதைப்போன்ற பல காரணங்கள் உண்டு. காலப்போக்கில் வர்மமருத்துவமும் பல மூ-கை-தாது-சீவக மருந்துகளை தன்னகத்தே ஏற்றுக்கொண்டு, தனக்கே உரித்தான உறுதியான பல அடிப்படைக் கொள்கைகளையும் தன்னகத்தே ஏற்படுத்திக் கொண்டது. பின்னாட்களில் பல அக மற்றும் புற மருந்துகளை தனதாக்கி ‘வர்ம முறை மருத்துவம்’ எனத்தனித்துவமாக வளர்ந்துள்ளது. இந்திய முறை மருத்துவங்களான சித்தா, ஆயுர்வேதா மருத்துவங்களை காட்டிலும் காலத்தால் தொன்மையானதாகையால் இதுவே ‘முதல் இந்திய மருத்துவம்’ எனக் கணிக்க இடமுண்டு.

மனித உடலில் 108 அழுத்துமிடங்கள் அல்லது வர்மங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:


வர்மம் என்றால் என்ன?

உயிரானது எப்பொழுதும் ஓடிக்கொண்டே இந்த உயிரை மனிதனது ஒவ்வொரு உறுப்புக்கும் வேண்டிய அளவு எடுத்து செல்ல சில கண்ணுக்குப் புலப்படாத மையங்கள் உள்ளன.



மேலதிகத் தகவல்கள் வர்மங்கள், மனித உடல் பகுதி ...
வர்மங்கள்மனித உடல் பகுதி
25தலை முதல் கழுத்து வரை
45கழுத்து முதல் தொப்பூழ் வரை
9தொப்பூழ் முதல் கை வரை
14கைகள்
15கால்கள்
மூடு

சித்த வைத்தியம் வர்மத்தை இவ்வாறு குறிப்பிடுகிறது:

மேலதிகத் தகவல்கள் வர்மங்கள், செயற்பாடுகள் ...
வர்மங்கள்செயற்பாடுகள்
64வாத வர்மம்
24பித்த வர்மம்
6கப வர்மம்
6உள் வர்மம்
8தட்டு வர்மம்
மூடு

இவற்றையும் பார்க்க

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.