From Wikipedia, the free encyclopedia
மரபியலில், மரபணுத்தொகுப்பு என்பது ஒரு செயற்படும் தாயனை(DNA) கூட்டு, இதில் கொத்தான மரபணுக்கள் ஒரு தனி ஊக்குவிப்பான் கீழ் இயங்குங்குகின்றன.[1] இதிலிருக்கும் மரபணுக்கள் அனைத்துமாக படியெடுத்து தூதாறனை(mRNA) இழைகளாக மாறியபின், ஒன்று, முழுவதுமாக குழியவுருவில் மரபுத்தகவல் பெயர்வில் ஈடுபடும் அல்லது இயைத்தல் வழியே ஒற்றைப்புரதமாக்கம் தூதாறனைகளை ஆக்கி, தனித்தனியே மறுபுத்தகவல் பெயர்வில் ஈடுபடும். இதன் விளைவாக அணுத்தொகுப்பில் இருக்கும் மரபணுக்கள் ஒன்றாக வெளிப்படும் அல்லது வெளியப்படவே ஆகாது. வேறுபல மரபணுக்கள் ஒன்றாக படியெடுத்து ஓர் மரபணுத்தொகுப்பு வரையறுக்கின்றனர்.[2]
முன்னதாக, இத்தொகுப்புகள் நிலைக்கருவிலிகளில் மட்டுமே இருந்ததாக எண்ணப்பட்டிருந்தது. அதன்பின் 1990களில்[3][4] முதற்தொகுப்பு மெய்க்கருவுயிரியில் கண்டறியப்பட்டது. அஃது பல ஆதாரங்கள் இவை முன்கருதப்பட்டிருந்தது போலல்லாது மிகவும் பொதுவாக இருந்துள்ளதாக சுட்டுகின்றனர்.[5] பொதுவாக, நிலைக்கருவிலி மரபணுத்தொகுப்புகள் பன்புரதமாக்கம் தூதாறனைகளை வெளிக்கொள்கின்றன, மெய்க்கருவுயிரி மரபணுத்தொகுப்புகள் ஒற்றைப்புரதமாக்கம் தூதாறனைகளை வெளிக்கொள்கின்றன.
மரபணுத்தொகுப்புகள் நுண்ணுயிர்த்தின்னிகளிலும் காணப்படுகின்றன.[6][7] சான்ற, டீ7 தின்னிகளில் இரண்டு மரபணுத்தொகுப்புகள் உள்ளன. முதலொன்று, பல்வேறு விளைப்பொருட்களை ஈட்டும். மற்றொன்று, சிதைவு மரபணுக்களை கொண்டுள்ளது.[8]
மரபணுத்தொகுப்பு எனுஞ்சொல் ஆங்கிலச்சொல் ஒபேரோன் என்பதின் மொழிபெயர்வாகும். இச்சொல் 1960யில்[9] பிரஞ்சு அறிவியல் கலைக்கழகத்தின் தொடர் நடவடிக்கைகளின் குறுந்தாளில் முதன்முறையாக முன்மொழியப்பெற்றது. இத்தாளிலிருந்து, இதுவரை கூறிய, மரபணுத்தொகுப்பு பொதுக் கோட்பாடு வளர்க்கப்பட்டது. இக்கோட்பாடு, அனைத்து நிலைகளிலும், தொகுப்பின்னுள்ளிருக்கும் மரபணுக்கள், முதல் மரபணுக்கு முன்னிருக்கும் தனி ஒற்றை அடக்குவான் கொண்டு எதிர்மறையாக கட்டுப்படுத்தும் சுட்டுகிறது. பின்னர், மரபணுக்கள் நேர்மறையாகவும் சீராகயிக்கப்படும் எனவும், மேலும் படியெடுக்கம் துவக்கத்தைப் பின்பற்றும் படிகளிலும் கட்டுப்படுத்தப்படுகின்றன, என கண்டறியப்பட்டது. ஆகையால், இதற்கு ஒரு பொது ஒழுங்கு நுட்பமுறைகுள் ஒடுக்கமுடியாது, ஏனெனில் வெவ்வேறு மரபணுத்தொகுப்புகள் வெவ்வேறு ஒழுங்கு நுட்பமுறைகள் கொண்டுள்ளன. தற்போது, மரபணுத்தொகுப்பு ஒரு மரபணுக்கொத்தாகவே வரையறுக்கப்படுகிறது. இருப்பினும், இந்த கருத்துப்படிவத்தின் வளர்ச்சி, மூலக்கூறு வரலாற்றில் ஒரு மறுக்கமுடியாத நிகழ்வாகவுள்ளது. முதன் மரபணுத்தொகுப்பாக, ஈ கோலையின் இலாக் மரபணுத்தொகுப்பு விவரிக்கப்பட்டது. 1965யில், பிரான்காய்ஸ் ஜேக்கப், ஆண்ட்ரே மைக்கேல் வாப் மற்றும் ஜகியூஸ் மோனோட் ஆகிய மூவரும், மரபணுத்தொகுப்பிலும் நுண்நச்சுயிரி ஒன்றுசேர்க்கையிலும் தங்களது கண்டுபிடுப்புகளுக்காக நோபெல் பரிசு வழங்கப்பட்டது.
மரபணுத்தொகுப்புகள் முதன்மையாக நிலைக்கருவிலியிலும், சில மெய்கருவுயிரியிலும் எர்படுகின்றன. ஒரு மரபணுத்தொகுப்பு பல்வேறு கட்டமைப்பு மரபணுக்கள் ஒரு பொது உக்குவிப்பான் கீழாக, பொது இயக்குவான் கொண்டு உருவகிக்கபட்டுள்ளது.
ஒரு மரபணுத்தொகுப்பில் ஒன்றல்லது பல கட்டமைப்பு மரப்பணுக்கள் கொண்டிருக்கும், அஃது பன்புரதமாக்கம் தூதாறனாக படியெடுக்கபடுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.