From Wikipedia, the free encyclopedia
மதனகல்யாணி சண்முகானந்தன் (5-10-1938 புதுச்சேரி - மே, 2023) என்பவர் பிரெஞ்சு-தமிழ், தமிழ்-பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர், தமிழாசிரியர் ஆவார். இவர் பிரெஞ்சு மொழியைப் பயிற்றுவிக்கும் பயிற்சிக்குரிய பல சான்றிதழ்கள் பெற்றவர். பிரெஞ்சுக்காரர்கள் பலருக்குத் தமிழ் மொழியையும் தமிழர்கள் பலருக்குப் பிரெஞ்சு மொழியையும் பயிற்றுவித்தவர். பிரெஞ்சு நாட்டுத் தமிழறிஞர் செவியாக் உள்ளிட்டவர்களுக்குப் பேச்சுத் தமிழ் பயிற்றுவித்த பெருமைக்குரியவர். பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும் என இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்தவர். வருகை தரு ஆசிரியராகப் பல நிறுவனங்களில் பணிபுரிந்தவர். லிசே பிரான்சே பள்ளியில் 41 ஆண்டுகள் தமிழ் பயிற்றுவித்தவர். பணிபுரிந்தவர்.
மதனகல்யாணி சண்முகானந்தன் | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 5, 1938 புதுச்சேரி, தமிழ்நாடு, இந்தியா |
தொழில் | எழுத்தாளர் |
வகை | மொழிபெயர்ப்பு |
மதனகல்யாணி காவல்துறை ஆணையர் செ. கிருட்டிணசாமி, கி. இராசாம்பாள் தம்பதிகளின் ஐந்து புதல்வர்களில் ஒருவர். ஓய்வு பெற்ற செய்தி மற்றும் விளம்பரத்துறை அதிகாரி த. சண்முகானந்தனின் மனைவி. இவருக்கு மூன்று குழந்தைகள். மதனகல்யாணி 2023 மே மாதம் இறந்தார்.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.