Remove ads
From Wikipedia, the free encyclopedia
கேரளத்தில் செய்தி இதழ்களை பிரசுரிக்கும் நிறுவனங்களில் மங்களம் பப்ளிகேசன்சும் ஒன்று. இதன் தலைமையகம் கோட்டயம். 1969-ல் எம். சி. வர்க்கீஸ், கோட்டயம் காலேஜ் ரோடில் இதைத் தொடங்கினார். இது மங்களம் என்ற மலையாள இதழையும், பிற நூல்களையும் வெளியிடுகிறது.[1][2]
1969-ல் தொடங்கி மங்களம் வார இதழ் வெளியாகிறது. கதைகளும் கவிதைகளும் இதன் உள்ளடக்கங்கள். அக்காலத்தில் பொதுமக்கள் வேண்டிய இந்த வகை உள்ளடக்கங்கள் குறைவாய் இருந்தமையால் மங்களம் வேகமாய வளர்ந்தது எண்பதுகளில் இடையில் ஏறத்தாழ 18 லட்சம் பதிப்புகள் விற்றன. அப்போது இது முதலாவது இடம்பெற்றிருந்தது.
1989 மார்ச்சில் மங்களம் நாளிதழ் தொடங்கப்பட்டது. ஜோய் திருமூலபுரம் எடிட்டராகவும், கே. எம். ரோய் ஜெனரல் எடிட்டராகவும் இருந்தனர். ஒரு லட்சத்திற்கும் மேலான பதிப்புகள் விற்றன. இப்போது இதன் விலை இரண்டரை ரூபாய். கோட்டயம், கோழிக்கோடு, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களில் வெவ்வேறு பதிப்புகளைக் கொண்டுள்ளது. இப்போது ராஜு மாத்யு ஆண் எக்சிக்யூட்டீவ் எடிட்டராகவுள்ளார். நிறுவன சீப் எடிட்டர் எம்.சி.வர்கீன் மரணத்தின் பின்னர், சாபு வர்கீஸ் சீப் எடிட்டர் ஆனார். சாஜன் வர்கீஸ் மேனேஜிங் டயரக்டராக்வும், சஜி வர்கீஸ் எடிட்டராகவும் பிஜு வர்கீஸ் மேனேஜிங் எடிட்டராகவும் உள்ளனர்.
குழந்தைகளுக்காக பாலமங்களம் என்னும் வார இதழ் வெளியாகிரது. இதில் படக்கதைகள், உபதேசகதைகள், புதிர்கள் ஆகியன இதன் உள்ளடக்கம். பாலமங்களத்தில் டிங்கன் என்ற கதாபாத்திரம் உள்ள படக்கதை குழந்தைகளுக்கு மிக விருப்பமானது. இப்போது மாதம் மும்முறை வெளியாகிறது
மகளிருக்காக மாதம் மும்முறை வெளியாகும் இதழ். மாத இதழாகத் தொடங்கப்பட்டு பின்னர், மாதம் மும்முறையாக வெளியிடப்பட்டது. பெண்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் செய்திகள், உடல்நலம் தொடர்பான செய்திகளையும் வெளியிடுகிறது.
திரைப்படங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் இதழ்.
சோதிடம் தொடர்பானவற்றை வெளியிடுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.