From Wikipedia, the free encyclopedia
மகரிஷி மகேஷ் யோகி (Maharishi Mahesh Yogi, ஜனவரி 12, 1917 - பெப்ரவரி 5 2008), ஆழ்நிலை தியானத்தை (transcendental meditation) இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் புகழ் பெறச் செய்தவர். ஐக்கிய அமெரிக்கா[1], மெக்சிக்கோ[2], ஐக்கிய இராச்சியம்[3], சீனா[4] உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் யோகியின் ஆழ்நிலை தியான மையங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன[1].
மகரிஷி மகேஷ் யோகி Maharishi Mahesh Yogi | |
---|---|
பிறப்பு | ஜனவரி 12, 1917 ஜபல்பூர், இந்தியா |
இறப்பு | பெப்ரவரி 5, 2008 91) விலோட்ராப், நெதர்லாந்து | (அகவை
பெற்றோர் | தந்தை: சிறீராம் பிரசாத் |
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ் யோகி. 1939 ஆம் ஆண்டளவில் மகேஷ் யோகி பிரமானந்த சரஸ்வதி சுவாமிகளின் சீடராகி[5], 1941 முதல் 1953 வரையில் இமயமலைச் சாரலில் ஆச்சிரமம் நடத்தி ஆழ்நிலை தியானத்தை போதித்து வந்தார்.
மகேஷ் யோகியின் முதலாவது உலகப் பயணம் 1958 இல் ஆரம்பமானது. ஐக்கிய அமெரிக்காவில் தனது தியான முறையை அறிமுகப்படுத்தினார்[6]. 1960களில் மேற்கத்திய பாடகர்கள் பீட்டில்ஸ் குழுவினருக்கு குருவாக விளங்கினார். இதைத் தொடர்ந்து மகேஷ் யோகி உலகப் புகழ் பெற்றார்.
1990 இல் இருந்து நெதர்லாந்தில் விளாட்ராப் என்ற இடத்தில் தனது ஆசிரமத்தை அமைத்து அங்கிருந்து சேவையாற்றினார்[7].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.