மகாராஜபுரம் சந்தானம்
From Wikipedia, the free encyclopedia
மகாராஜபுரம் சந்தானம் (Maharajapuram Santhanam, மே 20, 1928[1] - சூன் 24, 1992[2]) பிரபலமான கருநாடக இசைப் பாடகர் ஆவார்.
மகாராஜபுரம் சந்தானம் | |
---|---|
பிறப்பு | மகாராஜபுரம் விஸ்வநாத சந்தானம் மே 20, 1928 சிருனங்குர், தமிழ்நாடு |
இறப்பு | சூன் 24, 1992 64) | (அகவை
பணி | கருநாடக இசைப் பாடகர் |
ஆரம்பகால வாழ்க்கை
தமிழ்நாடு சிருனங்குர் என்ற கிராமத்தில் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் என்ற இசைக்கலைஞருக்குப் பிறந்தவர். இசைப் பயிற்சியை தனது தந்தையிடம் கற்றார். மெலட்டூர் சாமா தீட்சிதரின் மாணவராகவும் இருந்தார்.
தொழில் வாழ்க்கை
இவர் பல்வேறு பாடல்களையும் இயற்றியுள்ளார். இவர் முருகனின் மீதும், காஞ்சி சங்கராச்சாரியார் மகாப்பெரியவாள் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் மீதும் பலப் பாடல்கள் எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இராமநாதன் இசைக் கழகத்தின் (தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுண்கலைக் கல்லூரி) முதல்வராக பணிபுரிந்து பின்னர், சென்னையில் வாழ்ந்து வந்தார்.
சிறப்புகள்
சுவாமி தயானந்த சரசுவதி இயற்றிய "போ சம்போ" (ரேவதி), "மதுர மதுர" (பாகேஸ்ரீ), ஆகிய இரண்டு பாடல்களும் "உன்னை அல்லால்" (கல்யாணி), "சதா நின் பாதமே கதி, வரம் ஒன்று" (சண்முகப்ரியா), "ஸ்ரீசக்ர ராஜ" (ராகமாலிகா), "நளின காந்தி மதிம்" (ராகமாலிகா), "க்ஷீராப்தி கன்னிகே" (ராகமாலிகா) ஆகிய பாடல்கள் இவர் பாடி பிரபலமான பல பாடல்களில் அடங்கும்.
இவர் திருமலை திருப்பதி தேவஸ்தானம், காஞ்சி சங்கர மடம், பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா வெங்கடாசலபதி கோவில் மற்றும் கணபதி சச்சிதானந்த ஆச்சிரமம் ஆகியவற்றில் ஆசுதான வித்வானாகவும் இருந்துள்ளார்.
மறைவு
மகாராஜபுரம் சந்தானம் 1992 சூன் 24 இல் வாகன விபத்தில் காலமானார். இவரைத் தொடர்ந்து இவரது மகன்கள் மகாராஜபுரம் எஸ். ஸ்ரீநிவாசன் மற்றும் மகாராஜபுரம் எஸ். ராமச்சந்திரன், இவரது முதன்மை மாணவர் ஆர். கணேஷ் ஆகியோர் இவரது இசை பாணியைத் தொடர்ந்து வருகின்றனர்.
இவரின் நினைவாக சென்னை தியாகராய நகரில் உள்ள கிரிபித் சாலை, "மகாராஜபுரம் சந்தானம் சாலை" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மிகப் பிரபலமான கிருஷ்ண கான சபாவும், முப்பாத்தம்மன் கோவிலும் இந்த சாலையில் உள்ளன. 'மகாராஜபுரம் சந்தானம் தினம்' ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 3 அன்று அனுசரிக்கப்படுகிறது.
இயற்றிய பாடல்களின் பட்டியல்
எண் | பாடல் | இராகம் | தாளம் |
---|---|---|---|
1 | சதா நின்... | சண்முகபிரியா | மிஸ்ரசாபு |
விருதுகள்
- சங்கீத நாடக அகாதமி விருது, 1984. வழங்கியது: சங்கீத நாடக அகாதமி[3]
- சங்கீத கலாநிதி விருது, 1989. வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
- இசைப்பேரறிஞர் விருது, 1991. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[4]
- பத்மசிறீ - 1990
- ரிசிகேசில் உள்ள யோகா வேதாந்த பல்கலைக்கழகம் அளித்த "சங்கீத சுதாகரா" விருது
- சிருங்கேரி சந்திரசேகர பாரதியால் அளிக்கப்பட்ட "கான கலாநிதி" விருது
- காஞ்சி காமகோடி பீடாதிபதி செயந்திர சரசுவதியால் அளிக்கப்பட்ட "சங்கீத சங்கமித்ரா வர்சி" விருது
- கலைமாமணி விருது (தமிழ்நாடு அரசு)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.