பேட்டை, திருநெல்வேலி மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
பேட்டை அல்லது புதுப்பேட்டை (Pettai or Pudhupettai) என்பது தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள ஒரு பகுதியாகும், இது நெல்லை சந்திப்பில் இருந்து ஆறு கி.மீ. தொலைவில் சேரன்மகாதேவி மற்றும் முக்கூடல் செல்லும் காயிதே மில்லத் சாலையில் அமைந்துள்ளது. இங்கு அரசு தொழிற்பேட்டை ஒன்று உள்ளது. அதனால் இப்பகுதிக்கு இந்த பெயர் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. மேலும் இங்கு ம.தி.தா. கல்லூரியும், அரசு மேல் நிலைப் பள்ளியும் அமைந்துள்ளன, இங்கிருந்து மூன்று கி.மீ. தொலைவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும், ராணி அண்ணா மகளிர் கல்லூரியும் அமைந்துள்ளன.
பேட்டை | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ் நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி மாவட்டம் |
சட்டமன்ற தொகுதி | திருநெல்வேலி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அ.சு.எ | 627 004 |
வாகனப் பதிவு | த.நா -72 |
இணையதளம் | பேட்டை |
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1060 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்[1]. இவர்களில் 534 பேர் ஆண்கள், 526 பேர் பெண்கள். பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 81.23% ஆகும்[1].
குறிப்பிடத்தகுந்த நபர்கள்
- காயிதே மில்லத் - சுதந்திர போராட்ட வீரர் மற்றும் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்கின் நிறுவனத் தலைவர்[2].
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.