மேற்கு ஐரோப்பிய நாடு From Wikipedia, the free encyclopedia
பெல்ஜியம் (/ˈbɛldʒəm/ (ⓘ) BEL-jəm; டச்சு: België; பிரென்சு: Belgique; ஜெர்மன்: Belgien) (அதிகாரப்பூர்வமாக பெல்ஜிய பேரரசு) மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவன உறுப்பினர் ஆகும். இதன் தலைநகரான பிரஸ்ஸல்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகமாக மட்டுமன்றி, நேட்டோ போன்ற பல முக்கிய சர்வதேச அமைப்புக்களின் தலைமையகமாகவும் உள்ளது. பெல்ஜியத்தின் பரப்பளவு 30,528 சதுர கிலோமீட்டர் (11,787 சதுர மைல்) மற்றும் இதன் மக்கள்தொகை 11 மில்லியன் ஆகும்.[1][2][3]
பெல்ஜியம் இராச்சியம் | |
---|---|
குறிக்கோள்: Eendracht maakt macht (டச்சு) L'union fait la force" (பிரெஞ்சு) Einigkeit macht stark (ஜெர்மன்) "ஒன்றியத்திலிருந்து பலம்" | |
நாட்டுப்பண்: த "பிராபன்சொன்" | |
தலைநகரம் | பிரசெல்சு |
பெரிய மிகப்பெரிய மாநகராட்சி | பிரசெல்சு தலைநகரப் பகுதி |
ஆட்சி மொழி(கள்) | டச்சு, பிரெஞ்சு, ஜெர்மன் |
மக்கள் | பெல்ஜியன் |
அரசாங்கம் | நாடாளுமன்ற மக்களாட்சி, அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி |
• அரசர் | ஆல்பர்ட் II |
• பிரதமர் | எலியோ டி ரூபோ |
விடுதலை | |
• கூற்றம் | அக்டோபர் 4 1830 |
• திட்டப்படம் | ஏப்ரல் 19 1839 |
பரப்பு | |
• மொத்தம் | 30,528 km2 (11,787 sq mi) (139th) |
• நீர் (%) | 6.4 |
மக்கள் தொகை | |
• 2007 மதிப்பிடு | 11,007,020 (76வது [2005]) |
• 2001 கணக்கெடுப்பு | 10,296,350 |
• அடர்த்தி | 344.32/km2 (891.8/sq mi) (2006) (29th [2005]) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2018 மதிப்பீடு |
• மொத்தம் | $550 பில்லியன் (38வது) |
• தலைவிகிதம் | $$48,224 (17வது) |
ஜினி (2000) | 33 மத்திமம் · 33வது |
மமேசு (2005) | 0.919 Error: Invalid HDI value · 17வது |
நாணயம் | ஐரோ (€)1 (EUR) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (CET) |
ஒ.அ.நே+2 (CEST) | |
அழைப்புக்குறி | 32 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | BE |
இணையக் குறி | .be |
|
ஜெர்மானிய மற்றும் இலத்தீன்-ஐரோப்பிய கலாச்சார எல்லைகளுக்கு இடையே விரிந்திருக்கும் பெல்ஜியத்தில், பெரும்பான்மையாக இடச்சு மொழி பேசும் ஃபிளம்மியர்கள் 60 சதவீதமும், பிரெஞ்சு மொழி பேசும் வலோனியர்கள் 40 சதவீதமும் இருந்தாலும், மிகச்சிறிய அளவில் ஜெர்மன் மொழியும் பேசப்பட்டு வருகிறது. எனவே தான், பெல்ஜியத்தில் டச்சு, பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன. இடச்சு மொழி பேசும் ஃபிளம்மியர்கள் வசிக்கும் வடக்கு பிராந்தியம் ஃப்ளாண்டர்ஸ் என்றும் பிரெஞ்சு மொழி பேசும் வலோனியர்கள் வசிக்கும் தெற்கு பிராந்தியம் வலோனியா என்றும் அழைக்கப்படுகிறது. ஜெர்மானிய மொழி பேசும் சமூகம் கிழக்கு வலோனிய பகுதியில் வசித்து வருகின்றனர். பிரஸ்ஸல்ஸ்-தலை நகர பகுதியானது, ஃபிளம்மிய எல்லைக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும், இங்கு பெரும்பாலானோர் பிரெஞ்சு மொழியே பேசுகின்றனர். எனவே, டச்சு மற்றும் பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகளுமே அதிகார மொழிகளாக உள்ளன.
பெல்ஜியம் அல்லது பெல்கியம் என்ற பெயர் காலியா பெல்கிகா என்ற பெயரிலிருந்து பெறப்பட்டதாகும்.காலியா பெல்கிகா என்பது காவுலுக்கு பகுதியிக்கு வடக்கு பகுதியில் ஒரு ரோமானிய மாகாணமாகும்.
பெல்ஜியமானது பிரான்ஸ், ஜெர்மனி, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் தனது எல்லைகளை பகிர்ந்துகொள்கிறது.இதன் மொத்த பரப்பளவு 30.528 சதுர கிலோமீட்டர் ஆகும் இந்நாட்டில் 3 வேறுபட்ட நில அமைப்புகளை கொண்டுள்ளது. தென்கிழக்கில் ஆர்டென்னேஸ் உயர் நிலப்பகுதிகள், வட மேற்கு கடற்கரை சமவெளி மற்றும் ஆங்கிலோ-பெல்ஜிய தாழ்நிலப் பகுதியின் மத்தியில் அமைந்துள்ள பீடபூமி ஆகியவை ஆகும்.
இதில் கடற்கரை சமவெளியில் மணற்குன்றுகள் நிறைந்து காணப்படுகிறது.மேலும் நாட்டினுள் வளமான பள்ளத்தாக்குகள் மற்றும் எண்ணற்ற பாசன நீர்வழிகள் மற்றும் வடகிழக்கில் காம்பின் மணல் பரப்பு காணப்படுகிறது.மேலும் ஆர்டென்னேஸ் பகுதியில் குகைகள் மற்றும் கரடுமுரடான பாறைகள் நிறைந்த அடர்ந்த காடுகள் உள்ளது. இந்நாட்டின் மிகஉயர்ந்த பகுதி 694 மீட்டர் (2,277 அடி) உயரம் கொண்ட ""சிக்னல் டி பாட்ரேஞ்"" ஆகும்.
இங்கு நிலவும் காலநிலையானது பொதுவாக வடமேற்கு ஐரோப்பாவின் காலநிலையை கொண்டது.இங்கு ஆண்டுமுழுவதும் குறிப்பிடத்தக்க மிதமான மழை பெய்யும் கடல் சார்ந்த காலநிலையை கொண்டுள்ளது.இதன் குறைந்தபட்ச வெப்பநிலை ஜனவரி மாதத்தில் 3 °C (37.4 °F) செல்சியஸ் ஆகவும் சராசரி அதிகபட்ச வெப்பநிலை ஜுலை மாதத்தில் 18 °C (64.4 °F). ஆகவும் உள்ளது. கடந்த 2000 முதல் 2006 வரையிலான கணக்கிடுகளின் படி இதன் தினசரி சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 7 °C (44.6 °F) ஆகவும் தினசரி சராசரி அதிகபட்ச வெப்பநிலை 14 °C (57.2 °F) ஆகவும் மற்றும் மாதந்திர சராசரி மழையளவு 74 மிமீ ஆகவும் உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.