தெற்கு கிரேக்கத்தில் உள்ள பெரிய தீபகற்பம் மற்றும் புவியியல் பகுதி From Wikipedia, the free encyclopedia
பெலோபொன்னீஸ் அல்லது பெலொப்பொனேசியா (Peloponnesia, அல்லது Peloponnesus, கிரேக்கம்: Πελοπόννησος) என்பது தெற்கு கிரேக்கத்தில் உள்ள ஒரு தீபகற்பம் மற்றும் புவியியல் பகுதி ஆகும். இது கொரிந்து வளைகுடாவை சரோனிக் வளைகுடாவிலிருந்து பிரிக்கும் கொரிந்தின் பூசந்தியின் நிலப் பாலத்தின் மூலம் நாட்டின் மையப் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இடைக்காலத்தின் பிற்பகுதியிலும், உதுமானியர் சகாப்தத்திலும், இத்தீபகற்பம் மோரியா ( Byzantine Greek ) என அறியப்பட்டது.. இந்தப் பெயர் அதன் டெமோடிக் வடிவத்தில் இன்னும் பேச்சுவழக்கில் பயன்பாட்டில் உள்ளது ( கிரேக்கம்: Μωριάς )[1][2][3]
பெலொப்பொனேசியா
Πελοπόννησος | |
---|---|
கிரேக்கத்தின் பாரம்பரிய பிராந்தியம் | |
கிரேக்கத்தில் (நீல நிறத்தில்) பெலோபொன்னீசின் அமைவிடம் | |
நாடு | கிரேக்க நாடு |
தலைநகரமும் பெரிய நகரமும் | பட்ராஸ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 21,549.6 km2 (8,320.3 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 11,55,019 |
• அடர்த்தி | 54/km2 (140/sq mi) |
இனம் | Peloponnesian |
ஐஎசுஓ 3166 குறியீடு | GR-E |
இந்த தீபகற்பம் மூன்று நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: பெரும்பாலானவை பெலொப்பொனேசியா பகுதியைச் சேர்ந்தவை பிற சிறு பகுதிகள் மேற்கு கிரேக்கம் மற்றும் அட்டிகா நிர்வாகப் பகுதிகளைச் சேர்ந்தவை.
பெலொப்பொனேசியா என்பது கிரேக்க முதன்மை நிலப்பரப்பின் தெற்கு முனையில் 21,549.6 சதுர கிலோமீட்டர் (8,320.3 சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ள ஒரு தீபகற்பமாகும். இது 1893 இல் கொரிந்து கால்வாயில் கட்டப்பட்ட கொரிந்தின் பூசந்தி மூலம் பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டது. இருப்பினும், இந்த கால்வாயின் குறுக்கே கட்டபட்ட பல பாலங்களால் பிரதான நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு மற்றும் தெற்கு முனையில் உள்ள இரண்டு இரண்டு முழுகுப் பாலங்களும் அடங்கும். தீபகற்பத்தின் வடக்கு முனைக்கு அருகில், மற்றொரு பாலம் உள்ளது, ரியோ-ஆன்டிரியோ பாலம் (2004 இல் பணி நிறைவடைந்தது). உண்மையில், பெலொப்பொனேசியா அரிதாகவே, எப்போதாவது தீவு என்று குறிப்பிடப்படுகிறது.
இந்த தீபகற்பம் மலைப்பாங்கான உட்பகுதியையும் உள்நீண்ட கடற்கரையையும் கொண்டுள்ளது. பெலொப்பொனேசியா தெற்கு நோக்கிய நான்கு தீபகற்பங்களைக் கொண்டுள்ளது. அவை மெசேனியன், மணி, மாலியா முனை (எபிடாரஸ் லிமேரா என்றும் அழைக்கப்படுகிறது) மற்றும் பெலொப்பொனேசியாவின் வடகிழக்கில் உள்ள ஆர்கோலிட் ஆகியவை ஆகும். தெற்கில் உள்ள டெய்கெட்டஸ் மலை பெலொப்பொனேசியாவின் மிக உயரமான மலை 2,407 மீட்டர்கள் (7,897 அடி) ஆகும். மேலும் மற்ற முக்கியமான மலைகளாக வடகிழக்கில் உள்ள சிலீன் (2,376 மீட்டர் (7,795 அடி), வடக்கில் அரோனியா (2,355 மீட்டர் (7,726 அடி), எரிமந்தோஸ் (2,224 மீட்டர் (7,297 அடி), வடமேற்கில் பனசைகோன் (1,926 மீட்டர் (6,319 அடி), மையத்தில் மைனாலோன் (1,981 மீட்டர் (6,499 அடி), தென்கிழக்கில் பர்னான் (1,935 மீட்டர் (6,348 அடி) போன்றவை உள்ளன. முழு தீபகற்பமும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடியது மேலும் கடந்த காலங்களில் பல நிலநடுக்கங்களால் பாதிக்கபட்ட தளமாக உள்ளது.
தீபகற்பத்தின் மிக நீளமான ஆறு மேற்கில் உள்ள அல்ஃபியோஸ் (110 கிமீ), அதைத் தொடர்ந்து தெற்கில் உள்ள எவ்ரோட்டாக்கள் (82 கிமீ), மேலும் மேற்கில் பினியோஸ் (70 கிமீ) போன்றவை பாய்கின்றன. தெற்கில் எவ்ரோடாஸ் பள்ளத்தாக்கு மற்றும் வடகிழக்கில் ஆர்கோலிட் தவிர, மேற்கில் மட்டுமே பரந்த அளவிலான தாழ்நிலங்கள் காணப்படுகின்றன. பெலொப்பொனேசியா பல கண்கவர் கடற்கரைகளைக் கொண்டதாக உள்ளது, இது ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும்.
இரண்டு தீவுக் கூட்டங்கள் பெலோபொன்னேசியன் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளன. அவை கிழக்கில் ஆர்கோ-சரோனிக் தீவுகள், மேற்கில் அயோனியன் ஆகும். பெலொப்பொனேசியாவின் தெற்கே எபிடாரஸ் லிமிரா தீபகற்பத்தில் உள்ள கைதிரா தீவு, அயோனியன் தீவுகளின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. எலஃபோனிசோஸ் தீவு தீபகற்பத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் கி.பி 365 இல் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தீவாக பிரிந்துபோனது.
பழங்காலத்திலிருந்து, இன்றுவரை, பெலொப்பொனேசியா ஏழு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை அக்கீயா (வடக்கு), கொரிந்தியா (வடகிழக்கு), ஆர்கோலிஸ் (கிழக்கு), ஆர்காடியா (மையம்), லாகோனியா (தென்கிழக்கு), மெசேனியா (தென்மேற்கு), எலிஸ் (மேற்கு) என்பவை ஆகும். இந்த பிராந்தியங்கள் ஒவ்வொன்றும் ஒரு நகரத்தால் வழிநடத்தப்படுகின்றன. இவற்றில் மிகப்பெரிய நகரம் அச்சாயாவில் உள்ள பட்ராஸ் (மக்கள் தொகை; 170,000), அதைத் தொடர்ந்து, மெசேனியாவில் உள்ள கலாமாதா (மக்கள் தொகை; 55,000) ஆகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.