Remove ads
From Wikipedia, the free encyclopedia
பூபாலபிள்ளை மயன் செல்லத்துரை (5 சூன் 1936 - 11 பெப்ரவரி 2016) இலங்கைத் தமிழ் எழுத்தாளரும், பத்திரிகையாளரும், தமிழ்த் தேசியவாதியும் ஆவார். வண்ணன், மயன், நளன், கண்ணா போன்ற புனைபெயர்களிலும் இவர் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார்.
பூ. ம. செல்லத்துரை | |
---|---|
பிறப்பு | பூபாலப்பிள்ளை மயன் செல்லத்துரை 5 சூன் 1936 பெரிய போரதீவு, மட்டக்களப்பு மாவட்டம், இலங்கை |
இறப்பு | பெப்ரவரி 11, 2016 79) களுவாஞ்சிக்குடி, இலங்கை | (அகவை
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | எழுத்தாளர் |
அறியப்படுவது | எழுத்தாளர், தமிழ்த் தேசியவாதி |
பெற்றோர் | க. பூபாலப்பிள்ளை மு. இராசம்மா |
செல்லத்துரை கிழக்கிலங்கையில் பெரிய போரதீவில் க. பூபாலப்பிள்ளை, மு. இராசம்மா ஆகியோருக்குப் பிறந்தார்.[1] மட்டக்களப்பு அரசடி பாடசாலையிலும், பழுகாமம் மகா வித்தியாலயத்திலும் கல்வி பயின்றார்.[1] 1960 களில் பெரிய போரதீவில் பகுத்தறிவு இயக்கத்தை தொடங்கினார். இவ்வியக்கம் பின்னர் பட்டிருப்பு தேர்தல் தொகுதியின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளையாக உருவெடுத்தது. அக்கட்சியின் பட்டிருப்பு கிளையின் செயலாளராகவும், மட்டக்களப்பு மாவட்டத்துக்கான கட்சியின் நிருவாகச் செயலாளராகவும் பணியாற்றினார்.[1]
செல்லத்துரை பல கவிதைகள், வரலாற்று, ஆய்வுக் கட்டுரைகள், சிறுகதைகளை எழுதியுள்ளார். தாயகம், நேர்வழி, சமநீதி, தேனாடு ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.[1] 40 இற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்.[2] 1995 ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்குபற்றி ஆய்வுக் கட்டுரை ஒன்றைச் சமர்ப்பித்தார்.[2]
பூ. ம. செல்லத்துரை களுவாஞ்சிக்குடி அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், 2016 பெப்ரவரி 11 வியாழக்கிழமை காலமானார்.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.