From Wikipedia, the free encyclopedia
பூவே பூச்சூடவா என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 24 ஏப்ரல் 2017 திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பான காதல் மற்றும் குடும்பம் பின்னணியை கொண்ட தொலைக்காட்சித் தொடர் ஆகும்.[1]
பூவே பூச்சூடவா | |
---|---|
வகை | காதல் குடும்பம் நாடகத் தொடர் |
இயக்கம் |
|
நடிப்பு |
|
இசை | கிரண் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 1149 |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு | எம்.சரவணன் சி.முருகன் |
தயாரிப்பாளர்கள் | ஸ்ருதி நாராயணன் ஆயிஷா அப்துல்லா |
ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
தயாரிப்பு நிறுவனங்கள் | மந்திரா புரொடக்ஷன் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
ஒளிபரப்பான காலம் | 24 ஏப்ரல் 2017 – 4 செப்டம்பர் 2021 |
Chronology | |
தொடர்புடைய தொடர்கள் | வருதினி பரிணயம் |
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
இந்த தொடரில் கார்த்திக் வாசுதேவன், ரேஷ்மா முரளிதரன், கிருதிகா லட்டு, மதன் பாண்டியன், தினேஷ் கோபாலசாமி, மீனாகுமாரி, உமா பத்மநாபன், யுவராணி, மோனிஷா அர்ஷக் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[2] இந்த தொடர் காதலும் காதலால் குடும்ப உறவில் ஏற்படும் ஊடல்களையும் பிரச்சனையையும் சொல்லுகின்றது.[3] இந்த தொடர் 4 செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு அன்று அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பஸ் கண்டக்டரின் மகள்களான சக்தி மற்றும் மீனாட்சி. குடுப்பதிற்காக எதையும் செய்பவள். அக்கா மீனாட்சி பணக்கார வீட்டு சுந்தரை காதலிக்க, அக்காவின் திருமணத்திற்காக சுந்தரின் அண்ணா சிவாவை திருமணம் செய்ய வெட்டிய சூழ்நிலை. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி புரிந்து கொள்கின்றார்கள் என்பது தான் கதை.
இந்த தொடர் ஏப்ரல் 24ஆம் திகதி 2017 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி நேயர்கள் மத்தியில் நல்ல வரவேட்பை பெற்றது. பெப்ரவரி 25, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:30 - 8:30 மணி வரை நேரத்திற்கு ஒளிபரப்பானது.
அதற்க்கு பிறகு நாச்சியார்புரம் என்ற தொடருக்காக இந்த தொடர் சூலை 8, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது. மறுபடியும் நீதானே எந்தன் பொன்வசந்தம் என்ற புதிய தொடருக்காக இந்தத் தொடர் பிப்ரவரி 24, 2020 முதல் மாலை 6:30 நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பானது.
பின்னர் கொரோனாவைரசு காரணத்தால் இந்த தொடர் 27 மார்ச் 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு 27 ஜூலை 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு புதிய நேரத்தில் ஒளிபரப்பானது. பிறகு, சூர்யவம்சம் என்ற புதியத் தொடருக்காக மீண்டும் நேரம் மாற்றப்பட்டு, 27 செப்டம்பர் 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பானது. மீண்டும் திருமதி ஹிட்லர் என்ற புத்தம் புதிய தொடருக்காக 6:30 மணியிலிருந்து மாலை 6 ஒளிபரப்பாகி 23 ஆகத்து 2021 முதல் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பானது.
ஒளிபரப்பான தேதி | நாட்கள் | நேரம் |
---|---|---|
23 ஆகத்து 2021 - 4 செப்டம்பர் 2021 | 22:30 | |
14 திசம்பர் 2020 - 21 ஆகத்து 2021 - ஒளிபரப்பில் | 18:00 | |
27 செப்டம்பர் 2020 - 12 திசம்பர் 2020 | 18:30 | |
27 ஜூலை 2020 - 4 ஆகத்து 2020 | 19:00 | |
24 பிப்ரவரி 2020 - 27 மார்ச் 2020 | 18:30 | |
8 சூலை 2019 - 21 பிப்ரவரி 2020 | 19:30 | |
25 பெப்ரவரி 2019 - 6 சூலை 2019 | 19:30 - 20:30 | |
24 ஏப்ரல் 2017 - 22 பெப்ரவரி 2019 | 20:00 | |
இந்தத் தொடரின் நாயகியாக ரேஷ்மா, சக்தி என்ற முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவரது முதல் சீரியல் என்றாலும். அவர் முன்னர் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக அறியப்பட்டார். தினேஷ் கோபாலசாமி, சிவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். பிறகு, பகுதி 612 இலிருந்து, கார்த்திக் வாசுதேவன் சிவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுபத்திரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை யுவராணி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்பு மீனாகுமாரி சுபத்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது ஒரு வருதினி பரிணயம்' என்ற தெலுங்கு மொழி தொடரின் தமிழ் மறுதயாரிப்பாகும்.
இந்த தொடர் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வருதினி பரிணயம் என்ற தொடரின் தமிழ் மறு ஆக்கத் தொடர் ஆகும். தமிழ் பதிப்பில் இந்த தொடர் வெற்றி அடைந்ததால் தமிழிருந்து கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
ஆண்டு | மிகக் குறைந்த மதிப்பீடுகள் | மிக உயர்ந்த மதிப்பீடுகள் |
---|---|---|
2017 | 4.7% | 5.9% |
2018 | 4.2% | 5.5% |
2019 | 4.2% | 4.8% |
2020 | 3.0% | 4.2% |
2.3% | 3.9% | |
2021 | 1.3% | 2.4% |
0.6% | 1.6% |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.