From Wikipedia, the free encyclopedia
புறத்தோல் வளர்காரணி (Epidermal growth factor; EGF) என்னும் வளர்ச்சிக் காரணி புறத்தோல் வளர்காரணி ஏற்பியுடன் இணைந்து செல் வளர்ச்சி, பெருக்கம், மாறுபாடடைதல் ஆகியவற்றைத் தூண்டுகிறது. மனித புறத்தோல் வளர்காரணி 6045-டால்டன் புரதமாகும்[1]. இதில், 53 அமினோ அமிலக் கூறுகளும், மூன்று மூலக்கூறக இருசல்பைடு இணைப்புகளும் உள்ளன[2].
புறத்தோல் வளர்காரணியைக் கண்டறிந்ததற்காக ஸ்டான்லி கோஹன், ரீட்டா லெவி-மோன்டால்கினிக்கு 1986ம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது[3].
உயிரணுக்களின் பெருக்கம், மாறுபாடடைதல், வாழ்வு ஆகியவற்றில் புறத்தோல் வளர்காரணி பங்குகொள்கிறது[4].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.