Remove ads
From Wikipedia, the free encyclopedia
புதுவைப் பல்கலைக்கழகம் இந்திய அரசின் மத்திய பல்கலைக்கழகங்களில் (central university) ஒன்றாகும்[1]. 1985ல் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் கீழ் 59 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் கிளை வளாகங்கள் புதுவை, காரைக்கால், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் இலட்சத்தீவுகளில் உள்ளது. இப்பல்கலைக்கழகம் PU என்று பரவலாக அழைக்க படுகிறது[2]. இது 13 இயற்புலன்களை (schools) உடையது. இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் இப்பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், பேரா.குருமித் சிங் துணைவேந்தராகவும் இருக்கிறார்கள்.
Pondicherry University | |
புதுவைப் பல்கலைக்கழக முத்திரை | |
குறிக்கோளுரை | தமிழ்: ஒளி பரவ பிரெஞ்சு மொழி: Vers la Lumière |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Let Light Spread |
வகை | நடுவன் அரசு பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1985 |
வேந்தர் | வெங்கைய நாயுடு |
துணை வேந்தர் | பேரா. குருமித் சிங் |
மாணவர்கள் | 25,000 |
அமைவிடம் | , 12.0158714°N 79.8584922°E |
வளாகம் | நாட்டுப்புறம், 780 ஏக்கர்கள் |
சுருக்கப் பெயர் | PU |
இணையதளம் | pondiuni.edu.in |
புதுவை பல்கலை கழகத்தில் வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல், இயற்பியல், வேதியல், புவியியல், கணிதம், புள்ளியியல், கணிப்பொறி அறிவியல் மற்றும் சமூகம்-பொருளாதார நிர்வாகம்-சட்டம், ஆகிய பாட பிரிவுகளில் ஐந்தாண்டு – ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகள் வழங்க படுகின்றன.[3]
புதுவைப் பல்கலைக்கழகப் பண், இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பேரா. ஜலீஸ் அக்மெத் காண் தரீனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, திரு.பழனி பாரதி, பேரா. பாலசுப்பிரமணியன் மற்றும் பேரா. குணசேகரன் என்பவர்களால் தமிழ் வடிவம் கொடுக்கப்பட்டது. இதன் இசையமைப்பாளர் திரு. ஆர். பரத்வாஜ் ஆவார். மின்னணு தொடர்புத்துறை இயற்புலத்தால் (Center for Electronic Media) காணொளி வடிவில் வெளியிடப்பட்டது.
தமசோமா ஜோதிர்கமய[5]
தமசோமா ஜோதிர்கமய
ஒளிபரவ, ஒளிபரவ
புதுவை புதுவை புதுவையே போற்றுவோம்
புதுவை பல்கலைக் கழகமே உனை
வாழ்த்துவோம்
வங்கக் கடலலை தாலாட்டும்
ஞானச் சூரியன் உதிக்குமிடம்
இது எங்கள் புதுநெறி காட்டும் உலகம்
எந்நாளும் அறிவுத் தேடல் தொடரும்
அறிவூற்றைப் பொழியும் ஆசிரியர் - அதில்
தினமும் நனையும் மாணவர்கள்
இதிலன்றோ புதுவைப் பல்கலைக் கழகம்
அறிவின் தாகம் தணியும் சோலை
அகிலம் போற்றும் கல்விச் சாலை
மனித வளமே என்றும் உயர
புனித சேவை தொடருதே
பாரதித் தமிழால் நனைத்த இடம் - எங்கள்
பாரதிதாசன் விளைந்த நிலம்
அரவிந்தர் ஆசிகள் பெற்றதுடன்
அகில உலகிற்கு ஒளிர்விடும் இனிய தளம்
அறிவிச் சுடரொளி நெஞ்சில் எழ
யாதும் ஊரே யாவரும் கேளிர்
மாண்பினை உரைக்கும் மக்கள் அரங்கம்
ஆ அ ஆ அ ஆ........(2)
இதிலன்றோ புதுவைப் பல்கலைக் கழகம்
அறிவின் தாகம் தணியும் சோலை
அகிலம் போற்றும் கல்விச் சாலை
மனித வளமே என்றும் உயர
புனித சேவை தொடருதே
பல்கலைக் கழகம் என்றும் வளர்ந்திட
நாமும் வழிபடுவோம் - கல்விச்
சேவைகள் யாவும் காலமும்
தொடர்ந்திட நாளும் வேண்டுவோம்
புதுவையே புதுமையே போற்றிடும் பல்கலைக் கழகமே
என்றும் வாழ்கவே ! வாழ்கவே ! வாழ்கவே ! வாழ்கவே !
புதுவை புதுவை புதுவையே போற்றுவோம்
புதுவை பல்கலைக் கழகமே உனை வாழ்த்துவோம் (2)
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.