விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
புதுவையில் இரண்டு கலங்கரை விளக்கங்கள் உள்ளன.
ஜூலை 1 ஆம் தேதி 1836அம் ஆண்டு ஒளிவீசி பயன்பாட்டுக்கு வந்தது. 29 மீட்டர் உயரம் கொண்டது. கவர்னர் செயின்ட் சைமன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இதன் பொறியாளர் லூயிஸ் குர்ரே. இதன் அடித்தளம் மட்டும் 9 மீட்டர் ஆகும். 10,000 பிரான்க் (francs) கட்டுமான பணிக்குச் செலவு செய்யப்பட்டது. இதன் விளக்குகள் கடல் மட்டத்தில் இருந்து 90 அடி உயரத்தில் இருந்தது. இதன் கோபுரம் செப்பு உலோகத்தால் ஆனது. புயலின் வேகத்தால் இந்த கட்டிடம் பாதிக்காமல் இருக்க இரண்டு அடுக்குகளைக் கொண்டு இருந்தது. இதன் ஒளியை சுமார் 15 மைல் தூரம் வரை பார்க்க முடிந்தது [1] [2] சோழர் ஆட்சிக் காலத்தில் சோழமண்டலம் என்று அழைக்கப்பட்டு பின்பு போர்த்திகேயர்களால் கோரோமெண்டல் கடற்கரை என்று வழங்கப்பட்ட அந்த கடற்கரை பகுதியில் இயக்கப்பட்ட முதல் கலங்கரை விளக்கம் மட்டும் அல்லது அக்காலகட்டத்தில் இருந்த உலகின் நவீன 250 கலங்கரை விளக்கத்தில் இதுவும் ஒன்று. இது செயல்படத் தொடங்கியபோது 6 எண்ணெய் விளக்குகளும் அவற்றைப் பிரதிபலிக்க 2 வெள்ளி பிரதிபலிப்பான்களும் பயன்படுத்தப்பட்டன. அந்த எண்ணெய் விளக்கைத் தினமும் மாலை ஏற்றுபவர்க்கு ஆண்டுக்கு 600 (francs) சம்பளமாக வழங்கப்பட்டது. அந்த எண்ணெய் விளக்கின் திரியை 12 மில்லிமீட்டர் உயரம் தூக்கிவிட்டு பின்பு அதற்கு ஒளி இடுவார். 1913 ஆம் ஆண்டு அவை மின் விளக்குகளாக மாற்றப்பட்டன. 1931 ஆம் ஆண்டு அதன் ஆற்றல் மேம்படுத்தப்பட்டு சுழலும் பிம்பம் கொண்டதாக மாற்றப்பட்டது. 36 நொடிக்கு ஒரு முழு சுழற்சி கொண்டதாக மாற்றபட்டது. அதன் சுழலும் பிம்பம்திறன் 28 கடல் மைல் வரை தென்பட்டது. 1954 நவம்பர் மாதம் வரை பிரெஞ்சு அரசு இந்தக் கட்டிடத்தை கொடி ஏற்ற பயன்படுத்தியது அதன் பின்பு இந்திய அரசால் புதுச்சேரியில் முதன் முதலாகக் கொடி ஏற்ற இக்கட்டிடம் பயன்படுத்தப்பட்டது. இதன் அடிப்பாக கட்டிடம் முதலில் சதுரமாக இருந்தது. பின்பு வட்டமாக மாற்றி அமைக்கப்பட்டது . [3]
10 டிசம்பர் 1979ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது .இதன் உயரம் 48 மீட்டர் ஆகும் .இந்திய அரசாங்கத்தின் கப்பல் கட்டுமானத்துறைக்கு கீழ் செயல் பட்டு வருகிறது .தினமும் மாலை மூன்று மணி முதல் ஐந்து மணி வரை பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு நுழைவுக் கட்டணமாக ரூபாய் 10 வசூலிக்கப் படுகிறது .
அமைவிடம் | புதுச்சேரி |
---|---|
ஒளியூட்டப்பட்டது | 1979 |
கோபுர வடிவம் | hexagonal cylindrical concrete |
உயரம் | 48 மீட்டர்கள் (157 அடி) |
சிறப்பியல்புகள் | Two white flashes every 15 seconds |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.