புடு
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
புடு (ஆங்கிலம்; மலாய்: Pudu, Kuala Lumpur) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையப் பகுதியில் உள்ள ஒரு நகரப் பகுதியாகும். இந்த நகரப் பகுதி புடு சாலையில் உள்ளது. இங்கு கோலாலம்பூரின் மிகப் பழமையான புடு சென்ட்ரல் பேருந்து நிலையம் உள்ளது.
![]() புடுராயா பேருந்து நிலையம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 3.140°N 101.708°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கோலாலம்பூர் |
நகரத் தோற்றம் | 1880 |
மாநகரத் தகுதி | 1 பெப்ரவரி 1972 |
அரசு | |
• முதல்வர் | டத்தோ ஸ்ரீ மைமுனா முகமது சரீப் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 5xxxx |
தொலைபேசி எண்கள் | +60 |
இணையதளம் | http://www.dbkl.gov.my |
இங்கு இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் புடு சிறைச்சாலை இருந்தது. 1895-இல் கட்டப்பட்ட அந்தச் சிறைச்சாலை 2010 சூன் மாதம் தகர்க்கப்பட்டது.[1] கோலாலம்பூரில் பெரிய காய்கறிச் சந்தையும் புடுவில் தான் உள்ளது.
புடுவிற்கு அருகாமையில் புகழ்பெற்ற புக்கிட் பிந்தாங் வணிக மையம் உள்ளது. இங்கு மின்சாதனங்கள், கணினிகள், ஆடை அணிகலன்கள், மேற்கத்திய உணவுப் பொருட்கள் போன்றவை 24 மணி நேரமும் கிடைக்கின்றன.
இங்கு தான் உலகப் புகழ்பெற்ற பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுர வானளாவிகள் உள்ளன.
புடு மாநாகர்ப் பகுதி புக்கிட் பிந்தாங் மக்களவைத் தொகுதியின் வழியாக மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.