புக்கிட் மெர்தாஜாம் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bukit Mertajam; ஆங்கிலம்: Bukit Mertajam Federal Constituency; சீனம்: 大山脚联邦选区) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் (Central Seberang Perai District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P045) ஆகும்.[3]

விரைவான உண்மைகள் மாவட்டம், வாக்காளர் தொகுதி ...
புக்கிட் மெர்தாஜாம் (P045)
மலேசிய மக்களவைத் தொகுதி
பினாங்கு
Bukit Mertajam (P045)
Federal Constituency in Penang
Thumb
பினாங்கு மாநிலத்தில்
புக்கிட் மெர்தாஜாம் மக்களவைத் தொகுதி

மாவட்டம்மத்திய செபராங் பிறை மாவட்டம்; பினாங்கு
வாக்காளர் தொகுதிபுக்கிட் மெர்தாஜாம் தொகுதி
முக்கிய நகரங்கள்புக்கிட் மெர்தாஜாம்
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி பாக்காத்தான்
இதற்கு முன்னர்
நடப்பில் இருந்த தொகுதி
2022
மக்களவை உறுப்பினர்சிம் சி கியோங்
(Steven Sim Chee Keong)
வாக்காளர்கள் எண்ணிக்கை120,819[1]
தொகுதி பரப்பளவு78 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022
மூடு




Thumb

2022-இல் புக்கிட் மெர்தாஜாம் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (21.7%)
  சீனர் (67.4%)
  இதர இனத்தவர் (0.3%)

புக்கிட் மெர்தாஜாம் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1974-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து புக்கிட் மெர்தாஜாம் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), புக்கிட் மெர்தாஜாம் மக்களவைத் தொகுதி 28 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[4]

பொது

புக்கிட் மெர்தாஜாம் நகரம்

மலேசியாவில் தமிழர்கள் வரலாற்றுத் தடம் பதித்த முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்றாகும். 1900-ஆம் ஆண்டுகளில் இங்கு வாழ்ந்த தமிழர்கள் இந்த நகரத்தை சுங்குரும்பை என்று அழைத்தார்கள்.

சுங்கை (Sungei) என்றால் மலாய் மொழியில் ஆறு; ரும்பை (Rumbai) என்றால் உயர்ந்த வகை வாசனைச் செடி. இத்தகைய வாசனைச் செடிகள் ஆற்றங்கரை ஓரங்களில் அதிகமாக இருந்ததால் சுங்குரும்பை என்று பெயராகியது. பிரித்தானியர்களும், சீனர்களும் புக்கிட் மெர்தாஜாம் என்று அழைத்தனர்.

மெர்தாஜாம் மலை

புக்கிட் மெர்தாஜாம் எனும் பெயர் மெர்தாஜாம் மலை எனும் பெயரில் இருந்து மருவியதாகச் சொல்லப் படுகிறது. மலாய் மொழியில் மெர்தாஜாம் என்றால் கூர்மை என்று பொருள். புக்கிட் மெர்தாஜாம் என்றால் கூர்மையான மலை என்று பொருள்.[5][6] மெர்தாஜாம் மலையின் உச்சிப் பாகம் மிக கூர்மையான நிலப்பரப்பைக் கொண்டு இருந்ததால் அதற்கு அந்தப் பெயர் வந்ததாகச் சொல்லப் படுகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், இந்து - பௌத்த சமயங்கள் கலந்த பூஜாங் பள்ளத்தாக்கு நாகரிகத்தின் ஒரு பகுதியாக புக்கிட் மெர்தாஜாம் பிரசித்தி பெற்று விளங்கி உள்ளது. இங்குதான் 1845-ஆம் ஆண்டில் செரோக் தெக்குன் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.[7]

பூஜாங் பள்ளத்தாக்கு

அந்தக் கல்வெட்டை ஒரு நினைவுச் சின்னமாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறார்கள். இப்போது கெடா என்று அழைக்கப்படும் கடாரத்தை, பூஜாங் பள்ளத்தாக்கு நாகரிகம், கி.பி 6-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்து உள்ளது.

1800-ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் செபராங் பிறை நிலப்பகுதியைக் கையகப்படுத்தியது. அதன் பின்னர் 19-ஆம் நூற்றாண்டில் புக்கிட் மெர்தாஜாம் உருவானது. அதற்கு முன்னர், இந்தப் பகுதியில் மலாய் மக்கள் மற்றும் சயாமிய விவசாயிகள் வசித்து வந்தார்கள்.[5]

புக்கிட் மெர்தாஜாம் வாக்குச் சாவடிகள்

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதி 26 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[8]

மேலதிகத் தகவல்கள் சட்டமன்ற தொகுதி, தேர்தல் வட்டாரம் ...
சட்டமன்ற தொகுதி தேர்தல் வட்டாரம் குறியீடு வாக்குச் சாவடி
பெராபிட்
(Berapit)
(N13)
Kampong Aston 045/13/01 SM Persendirian Jit Sin
Bukit Noning 045/13/02 SJK (C) Perkampungan Berapit
Taman Bukit Ria 045/13/03 SJK (C) Kim Sen
Kampong Bahru 045/13/04 SK Kampung Bahru
Jalan Berjaya 045/13/05 SMK Bukit Mertajam
Taman Alma 045/13/06 SMK Jalan Damai
Mutiara Indah 045/13/07 SMK Berapit
Taman Tenang 045/13/08 SM Sains Tun Syed Sheh Shahabudin
மாச்சாங் பூபோக்
(Machang Bubuk)
(N14)
To'Kun 045/14/01 SK Juara
Machang Bubok 045/14/02 SK Machang Bubok
Bukit Teh 045/14/03 SK Bukit Teh
Alma 045/14/04 SJK (C) Sin Ya
Taman Seri Kijang 045/14/05 SK Alma Jaya
Bukit Minyak 045/14/06 SK Bukit Minyak
Permatang Tinggi 045/14/07
  • SJK (C) Permatang Tinggi
  • SJK (T) Permatang Tinggi
Gajah Mati 045/14/08 SMA Al-Mahadul Islami
Taman Jambu 045/14/09 SJK (C) Kay Sin
Taman Seri Janggus 045/14/10
  • SMK Machang Bubok
  • SMK Taman Sejahtera
Taman Alma Jaya 045/14/11 SK Taman Impiah
பாடாங் லாலாங்
(Padang Lalang)
(N15)
Kampong Cross Street 1 045/15/01 SK Sungai Rambai
Station Road 045/15/02 SMK Convent (M) Bukit Mertajam
High School 045/15/03 SMK Tinggi Bukit Mertajam
Bukit Kechil 045/15/04 SJK (C) Keow Kuang
Desa Damai 045/15/05 SMJK Jit Sin
Taman Keenways 045/15/06
  • SK Alma
  • SJK (C) Beng Teik (Pusat)
Taman Binjai 045/15/07 SMJK Jit Sin
மூடு

புக்கிட் மெர்தாஜாம் மக்களவைத் தொகுதி

மேலதிகத் தகவல்கள் புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023), நாடாளுமன்றம் ...
புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023)
நாடாளுமன்றம்ஆண்டுகள்உறுப்பினர்கட்சி
செபராங் தெங்கா (Seberang Tengah) தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது
4-ஆவது மக்களவை1974–1978தான் செங் பி
(Tan Cheng Bee)
பாரிசான் (மசீச)
5-ஆவது மக்களவை1978–1982சியோ உன் கிம்
(Seow Hun Khim)
ஜசெக
6-ஆவது மக்களவை1982–1986பாரிசான் (மசீச)
7-ஆவது மக்களவை1986–1990சியான் கெங் காய்
(Chian Heng Kai)
ஜசெக
8-ஆவது மக்களவை1990–1995
9-ஆவது மக்களவை1995–1999தான் சோங் கெங்
(Tan Chong Keng)
பாரிசான் (மசீச)
10-ஆவது மக்களவை1999–2004சோங் எங்
(Chong Eng)
ஜசெக
11-ஆவது மக்களவை2004–2008
12-ஆவது மக்களவை2008–2013
13-ஆவது மக்களவை2013–2018சிம் சி கியோங்
(Steven Sim Chee Keong)
14-ஆவது மக்களவை2018–2022பாக்காத்தான்
ஜசெக
15-ஆவது மக்களவை2022–தற்போது வரையில்
மூடு

புக்கிட் மெர்தாஜாம் தேர்தல் முடிவுகள்

மேலதிகத் தகவல்கள் பொது, வாக்குகள் ...
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (புக்கிட் மெர்தாஜாம் தொகுதி)
பொதுவாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
120,819-
வாக்களித்தவர்கள்
(Turnout)
93,69577.5%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
92,745100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
183-
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
767-
பெரும்பான்மை
(Majority)
57,68562.19%
வெற்றி பெற்ற கட்சிபாக்காத்தான்
Source: Results of Parliamentary Constituencies of Penang
மூடு

புக்கிட் மெர்தாஜாம் வேட்பாளர் விவரங்கள்

மேலதிகத் தகவல்கள் வேட்பாளர், கட்சி ...
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (புக்கிட் மெர்தாஜாம் தொகுதி)
வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு  % ∆%
சிம் சி கியோங்
(Steven Sim Chee Keong)
பாக்காத்தான் 71,722 77.33% -8.07
கோ தியேன் இயூ
(Steven Koh Tien Yew')
பெரிக்காத்தான் 14,037 15.14% +15.14
டான் யாங் பாங்
(Tan Yang Pang)
பாரிசான் 6,986 7.53% -7.07
மூடு

புக்கிட் மெர்தாஜாம் சட்டமன்ற தொகுதிகள்

மேலதிகத் தகவல்கள் நாடாளுமன்ற தொகுதி, சட்டமன்ற தொகுதிகள் ...
நாடாளுமன்ற தொகுதி சட்டமன்ற தொகுதிகள்
1955–59* 1959–1974 1974–1986 1986–1995 1995–2004 2004–2018 2018–தற்போது
P045
புக்கிட் மெர்தாஜாம்
பெராப்பிட்
புக்கிட் தெங்கா
மாச்சாங் பூபோக்
பாடாங் லாலாங்
புக்கிட் மெர்தாஜாம் நகரம்
மூடு

புக்கிட் மெர்தாஜாம் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)

மேலதிகத் தகவல்கள் #, சட்டமன்ற தொகுதி ...
# சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N13 பெராப்பிட்
(Berapit)
எங் லீ லீ
(Heng Lee Lee)
பாக்காத்தான் (ஜசெக)
N14 மாச்சாங் பூபோக்
(Machang Bubok)
லீ காய் லூன்
(Lee Khai Loon)
பாக்காத்தான் (பி.கே.ஆர்)
N15 பாடாங் லாலாங்
(Padang Lalang)
சோங் எங்
(Chong Eng)
பாக்காத்தான் (ஜசெக)
மூடு

மேற்கோள்கள்

மேலும் காண்க

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.