புக்கிட் பீசி
From Wikipedia, the free encyclopedia
புக்கிட் பீசி (ஆங்கிலம்: Bukit Besi; மலாய்: Bukit Besi) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில், டுங்குன் மாவட்டத்தில் (Dungun District) உள்ள ஒரு வரலாற்று நகரம். திராங்கானு மாநிலத்தின் தலைநகரான கோலா திராங்கானு (Kuala Terengganu) மாநகரில் இருந்து 77 கி.மீ.; டுங்குன் (Bandar Dungun) நகரில் இருந்து 33 கி.மீ.; தொலைவில் உள்ளது.[1]
புக்கிட் பீசி | |
---|---|
Bukit Besi | |
திராங்கானு | |
ஆள்கூறுகள்: 4°46′0″N 103°12′0″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | திராங்கானு |
மாவட்டம் | டுங்குன் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 23200 |
மலேசியத் தொலைபேசி | +6-09-6 |
மலேசியப் போக்குவரத்து எண் | T |
1920-ஆம் ஆண்டுகளில், மலேசியாவில் மட்டும் அல்ல; தென்கிழக்காசியா அளவில் மிக அதிகமான இரும்பு கனிமத்தை வழங்கிய நகரம் எனும் சாதனையை இந்த நகரம் படைக்கிறது. உலகின் மிகப்பெரிய இரும்புச் சுரங்கங்களில் ஒன்று இங்கு இருந்ததாகவும் அறியப்படுகிறது. இந்த நகரத்திற்கு புக்கிட் பீசி வரலாற்று நகரம் (ஆங்கிலம்: Historic City of Bukit Besi'; மலாய்: Bandar Bersejarah Bukit Besi) எனும் அடைமொழியும் உள்ளது.[2][1]
வரலாறு
இரும்பு சுரங்கத் தொழில்
இரும்புக் குன்று எனும் பெயரில் இருந்து இந்த இடத்திற்கு புக்கிட் பீசி (Bukit Besi) எனும் பெயர் வந்தது. புக்கிட் (Bukit) என்றால் மலாய் மொழியில் குன்று; பீசி (Besi) என்றால் இரும்புக் கனிமம்.
ஒரு காலக் கட்டத்தில், புக்கிட் பீசி மலாயா நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் துடிப்பாக இருந்தது. ஜப்பானிய நிறுவனமான குகாரா சுரங்க நிறுவனம் (Kuhara Mining Limited), மே 1930-இல் சுரங்க நடவடிக்கைகளைத் தொடங்க திராங்கானு மாநில அரசாங்கத்தால் உரிமம் பெற்றது.
நிப்பான் சுரங்க நிறுவனம்
இரும்புச் சுரங்கம் 24 மணி நேரமும் இயங்கியது. அங்கு தொழிலாளர்களின் குடியிருப்புகள்; தொடருந்து நிலையம்; பள்ளிக்கூடம்; காவல் நிலையம்; மருத்துவமனை; திரையரங்கம் என பலதரப்பட்ட வசதிகள் இருந்தன.[3]
பின்னர் இந்தச் சுரங்கத் தொழிலை நிப்பான் சுரங்க நிறுவனம் (Nippon Mining Company) நடத்தியது. இருப்பினும், 1945 முதல் 1947 வரை, சுரங்கம் பிரித்தானியர்களால் கையகப்படுத்தப்பட்டது. 1949-இல் இந்தச் சுரங்கம், கிழக்கு சுரங்க உலோக நிறுவனத்திற்கு (Eastern Mining and Metal Comany) விற்கப்பட்டது.[4]
புக்கிட் பீசி சுற்றுலா தலம்
1960-ஆம் ஆண்டு முதல், புக்கிட் பீசியில் இரும்பு உற்பத்தி குறையத் தொடங்கியது. இதனால் 1970-களின் முற்பகுதியில் இரும்புச் சுரங்கத்தை மூடுவதற்கு திராங்கானு அரசாங்கம் முடிவு செய்தது.
இப்போது புக்கிட் பீசி ஒரு சுற்றுலாத் தலமாக உள்ளது. சுரங்கப் பாதைகள், ஈய ஆலைகள் மற்றும் கனிமச் சேமிப்பு கட்டிடங்கள், பதப்படுத்தும் ஆலைகளின் புகைபோக்கிகள், குளம், மேலாளரின் குடியிருப்புகள் மற்றும் இரயில் பாதைகளின் பகுதிகளின் எச்சங்களை பார்வையாளர்கள் இன்றும் பார்க்கலாம்.[4]
இரும்புத் தாதுப் பொருட்கள்
பதப்படுத்தப்படாத சில மூல, இரும்புத் தாதுப் பொருட்கள் இன்றும் அங்குள்ள தரைப் பகுதிகளில் சிதறிக் கிடக்கின்றன. உலகின் மிகப்பெரிய இரும்புத் தாது உற்பத்திச் சுரங்கங்களில் ஒன்றின் நினைவூட்டலாக அந்தப் பொருட்கள் அமைகின்றன.[4]
புக்கிட் பீசி ஒரு பொழுதுபோக்கு மையமாக கெதெங்கா (Kemajuan Terengganu Tengah) (KETENGAH) எனும் திராங்கானு மாநில அரசு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு உள்ளது. இளைய தலைமுறையினர் பார்த்துத் தெரிந்து கொள்ள ஒரு வரலாற்றுக் கூடமும் உருவாக்கப்பட்டுள்ளது.
புத்திரி ஏரி
புக்கிட் பீசியில் பல இருப்புச் சுரங்கங்கள் இருந்தன. அவற்றில் ஒரு சுரங்கம் ஓர் ஏரியாக மாற்றப்பட்டு உள்ளது. அதன் பெயர் புத்திரி ஏரி (Tasik Puteri); மிக மிக அழகான ஏரி என சொல்லப்படுகிறது. இந்த ஏரியின் பரப்பளவு 131 எக்டேர். புக்கிட் பீசி நகரத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.[2]
கோலா திராங்கானு மாநகரில் இருந்து ஏறக்குறைய 90 கி.மீ.; குவாந்தான் நகரில் இருந்து ஏறக்குறைய 180 கி.மீ.; தொலைவில் உள்ளது.
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.