From Wikipedia, the free encyclopedia
புசார்லா வெங்கட சிந்து (Pusarla Venkata Sindhu, தெலுங்கு: పూసర్ల వెంకట సింధు, பிறப்பு: 5 சூலை 1995) ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீரர். 2016 ஆகஸ்த்து மாதம் பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். சிந்து ஐதராபாத்தில் உள்ள கோபிசந்த் இறகுப்பந்தாட்ட அகாதமியில் பயிற்சி பெற்று வருபவர். இந்திய விளையாட்டுவீரர்களில் ஒலிம்பிக்கில் பங்கு பெறத்தக்கவர்களை அடையாளம் கண்டு ஆதரிக்கும் இலாப நோக்கற்ற அமைப்பான ஒலிம்பிக் தங்க வேட்டை (Olympic Gold Quest) இவரை ஆதரிக்கிறது. இறகுப்பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் உயர்ந்த 20 தரவரிசையாளர்களில் ஒருவராக செப்டம்பர் 21, 2012இல் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளார். தற்போது பத்தாவது இடத்தில் இவர் உள்ளார்.[6] இக்கூட்டமைப்பின் இளநிலை ஆட்டக்காரர்களில் மூன்றாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளார்.[7]ஹாங்காங் அருகே உள்ள மக்காவ் நகரில் நடைபெற்ற 2013 ஆம் ஆண்டுக்கான மக்காவ் கிராண்ட் பிரீஸ் ஓபன் போட்டியில் சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.[8]
பு. வெ. சிந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
2016 ஆம் ஆண்டில் சிந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நேர்முக விவரம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு பெயர் | புசார்லா வெங்கட சிந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 5 சூலை 1995 ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம் (தற்போது தெலுங்கானாவில்), இந்தியா[1] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.79 m (5 அடி 10 அங்)[2] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எடை | 65 kg (143 lb)[2] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாடிய ஆண்டுகள் | 2011–தற்போது | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கரம் | வலக்கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பயிற்சியாளர் | பார்க் டே சாங்[3] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெண்கள் ஒற்றையர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு சாதனை | 410 வெற்றிகள், 169 தோல்விகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெரும தரவரிசையிடம் | 2 (1 ஏப்ரல் 2017[4]) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தற்போதைய தரவரிசை | 9 (31 சனவரி 2023[5]) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ. உ. கூ. சுயவிவரம் |
போர்ப்சு இதழின்படி 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு முறையே 8.5மில்லியன் மற்றும் 5.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் பெற்றதன் மூலம் அதிகம் வருமானம் ஈட்டிய வீராங்கனை என்ற பெருமையினைப் பெற்றார்.[9][10] இந்தியாவின் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினையும் , குடிமை விருதுகளில் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதினையும் பெற்றுள்ளார். சனவரி 2020இல் மூன்றாவது குடிமை விருதான பத்ம பூசன் விருதினையும் பெற்றார்.[11][12][13]
பி.வி.சிந்து பி. வி. ரமணா மற்றும் பி.விஜயா தம்பதியினருக்கு ஜூலை மாதம் 5, 1995 வருடம் பிறந்தார். இவரின் பெற்றோர் இருவரும் கைபந்து வீரர்களாவர்.இவரது தந்தை அர்சுனா விருது வென்றவராவார்.
இவர் 2016 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் இறகுப்பந்து விளையாட்டில் பங்கு பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இவர் ஒலிம்பிக் இறகுப்பந்து போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு சென்ற முதல் இந்தியர் ஆவார். சிந்து காலிறுதியில் உலகதர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவின் வாங்யிகானையும், அரையிறுதியில் உலக தரவரிசையில் ஆறாம் இடத்தில் உள்ள ஜப்பானின் நஜோமி ஓகுஹாராவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி, எசுப்பானியாவின் கரோலினா மாரினிடம் தோல்வியைத் தழுவினார். இறுதிப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்து, வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.[14] ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக வெள்ளி பதக்கம் வாங்கிய முதல் பெண்மணி இவர்.
இவர் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இறகுப்பந்து விளையாட்டில், மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் சீனாவின் ஹீ பிங்ஜியவோவை வீழ்த்தி 1 ஆகஸ்டு 2021 அன்று வெண்கலப் பதக்கம் வென்றார்.[15][16]
2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார்.[17]
நிகழ்வு | 2010 | 2011 | 2012 | 2013 |
---|---|---|---|---|
மகாவ் ஓப்பன்[21] | தங்கம் | |||
கொரியா ஓப்பன்[21] | சுற்று 2 | |||
இறகுப்பந்தாட்ட உலகு கூட்டமைப்பின் இளநிலை வாகையாளர் போட்டிகள்[21] | சுற்று 3 | |||
சீனா ஓப்பன்[21] | தகுதிநிலை | அரையிறுதி | ||
இந்தோனேசியா ஓப்பன்[21] | சுற்று 2 | |||
இந்திய ஓப்பன்[21] | அரையிறுதி | சுற்று 1 | காலிறுதி | |
சப்பான் ஓப்பன்[21] | சுற்று 2 | |||
டச்சு ஓப்பன்[21] | வெள்ளி | |||
இந்திய ஓப்பன் கிராண்ட் பிரீ கோல்ட்[21] | சுற்று 2 | சுற்று 2 | வெள்ளி | |
மலேசிய ஓப்பன் கிராண்ட் பிரீ கோல்ட் Malaysia Open Grand Prix Gold[21] | தங்கம் | |||
சுதிர்மான் கோப்பை | தங்கம் | |||
இறகுப்பந்தாட்ட உலகு கூட்டமைப்பின் வாகையாளர் போட்டிகள்இறகுப்பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் உலகப் போட்டிகள்[21] | வெண்கலம் | |||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.