பிளாட்டினம்(II) அசிட்டேட்டு
From Wikipedia, the free encyclopedia
பிளாட்டினம்(II) அசிட்டேட்டு (Platinum(II) acetate) என்பது ஊதா நிறத்தில் உள்ள ஓர் அணைவுச் சேர்மமாகும். தொடர்புடைய பலேடியம் அனைவுச் சேர்மம் போல இது வர்த்தகரீதியாகக் கிடைப்பதில்லை. பிளாட்டினம்(II) அசிட்டைல் அசிட்டோனேட்டு இதற்குப் பதிலாக பிளாட்டினம் வேதியலுக்கான தொடக்கப் பகுதியாக செயல்படுகிறது[1].
தயாரிப்பு
பிளாட்டினம்(II) அசிட்டேட்டு தயாரிப்பதற்கு பல்வேறு தயாரிப்பு முறைகள் அறியப்பட்டுள்ளன. உதாரணமாக, சோடியம் அறுவைதராக்சிபிளாட்டினேட்டை நைட்ரிக் அமிலத்தில் கரைத்துத் தயாரிக்கலாம் என்று விக்கின்சன் விவரித்துள்ளார். இக்கலவையை அசிட்டிக் அமிலம் சேர்த்து சூடாக்கினால் பிளாட்டினம்(II) அசிட்டேட்டு தோன்றுகிறது. அதிகப்படியான நைட்ரிக் அமிலத்தை ஃபார்மிக் அமிலம் சேர்த்து ஒடுக்க வினையின் மூலமாக நீக்கலாம். விக்கின்சன் குழுமத்தினர் இத்தயாரிப்பு முறையின் முடிவுகளில் பெரும் வித்தியாசங்களை உண்டாக்கினர்[2].
வெள்ளி அசிட்டேட்டை பிளாட்டினம் (II) குளோரைடுடன் சேர்த்து பிளாட்டினம்(II) அசிட்டேட்டு தயாரிக்கும் முறையை எம். பசாட்டோ கண்டறிந்தார். இவ்வினையில் வெள்ளி(I) ஆலைடு பிர்த்தெடுக்கும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. விளைபொருளாக இரண்டு அசிட்டிக் அமில மூலக்கூறுகள் கொண்ட நான்கு பகுதியுள்ள அணைவுச் சேர்மம் உருவாகிறது[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.