பிலேஃபாரிசு மதராசுபாடென்சிசு (தாவர வகைப்பாட்டியல்: Blepharis maderaspatensis)[1] என்பது முண்மூலிகைக் குடும்பம் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 207 பேரினங்கள்[2]மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, "பிலேஃபாரிசு" பேரினத்தில், 128 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.[3] அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. 1821 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் பிலேஃபாரிசு மதராசுபாடென்சிசு, உயிரியல் வகைப்பாடு ...
பிலேஃபாரிசு மதராசுபாடென்சிசு
Thumb
Blepharis maderaspatensis at Kambalakonda Wildlife Sanctuary
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
B. maderaspatensis
இருசொற் பெயரீடு
Blepharis maderaspatensis
(L.) B.Heyne ex Roth, Nov. Pl. Sp. 320. (1821)
வேறு பெயர்கள்
பட்டியல்
    • Acanthodium procumbens Nees
    • Acanthus ciliaris Burm. fil.
    • Acanthus maderaspatensis L.
    • Acanthus procumbens Herb. Madr. ex Wall.
    • Blepharis abyssinica Hochst. ex A. Rich.
    • Blepharis boerhaaviifolia Pers.
    • Blepharis boerhaviifolia var. maderaspatensis (L.) Nees
    • Blepharis breviciliata Fiori
    • Blepharis maderaspatensis var. abyssinica Fiori
    • Blepharis maderaspatensis subsp. rubiifolia (Schumach.) Napper
    • Blepharis procumbens Heyne ex Roth
    • Blepharis procurrens Nees
    • Blepharis rubiifolia Schum.
    • Blepharis teaguei Oberm.
    • Blepharis togodelia Solms ex Schweinf.
மூடு

வாழிடங்கள்

பல ஆப்பிரிக்க நாடுகளிலும், இந்தியாவிலும் இவ்வினம் காணப்படுகிறது. இத்தாவரம் மூலிகையாக முன்னிற்கும் சுரப்பி மருத்துவத்தில் பயனாகிறது.[4] Blepharis maderaspatensis Subsp. maderaspatensis Var. maderaspatensis என்பது இதன் துணையினமாகவும், வகையாகவும் உள்ளது.

வளர் இயல்புகள்

இந்த இனம் ஒழுங்கற்ற, அடித்தண்டு மட்டும் பல்லாண்டு வாழும் தாவரம் ஆகும். உகந்த சூழ்நிலையில், அத்தண்டில் இருந்து பிற பாகங்கள் உயிர்த்தெழும். இதன் தண்டு 2.5 மீட்டர் உயரம் வரை வளரும். இலைகள் மயிர்களுடன் தண்டினைச் சுற்றி அமைந்துள்ளது. இலைகளின் வடிவம் பிறை போல இருக்கிறது. இலையின் அளவு 2–9(–12.5) × 0.8–3.5(–5) செண்டி மீட்டர் வரை, ஒவ்வொரு தண்டு முடிச்சிலும் அமைந்துள்ளன. பூக்கள் மஞ்சரியாக உள்ளன. ஒவ்வொரு வெள்ளைநிறப் பூவும் 1/2 அங்குலம் நீளமுடன் கொத்தாக அமைந்துள்ளன.[5]

மேற்கோள்கள்

இதையும் காணவும்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.