பிலிகுண்டுலு
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பிலிகுண்டுலு (ஆங்கிலம்: Biligundlu)இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[4][5]
பிலிகுண்டுலு | |
ஆள்கூறு | 12°11′08″N 77°43′56″E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தர்மபுரி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இவ்வூர் கர்நாடகம் மாநில எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையில், காவிரி ஆற்றின் கரையில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இது 2013-ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள காவிரி காட்டுயிர் காப்பகத்தின் பகுதியாகும்.[6][7] இது காவிரி நதி தமிழ்நாட்டில் நுழையும் இடத்துக்கு வெகு அருகில் உள்ளது. இந்தப் பகுதிவரை காவிரி மேற்கிலிருந்து கிழக்காக ஓடுகிறது. அதனால் வடகரையில் தமிழகமும் தென்கரையில் கருநாடகமும் இருக்குமாறு அமைந்துள்ளது. ஆறு எல்லைக்கோடாக உள்ள இடம் இது. இருபுறமும் இருமாநிலங்களின் காட்டுப் பகுதிகள் உள்ளன. இவ்விடத்தை அடுத்து காவிரியின் போக்கு நெற்கில் செல்கிறது. ஒகேனக்கல் அருவி இங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் தெற்கில் உள்ளது.
இங்கு தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி ஆற்று நீரின் அளவு மத்திய நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகளால் அளவிடப்படுகிறது.[8][9]
Seamless Wikipedia browsing. On steroids.